அழுகும் சட­லங்கள் இறக்கும் குழந்­தைகள்

கல்­ல­றை­யாக மாறி­விட்ட ஷிபா மருத்­து­வ­மனை

0 136

காஸாவில் கடந்த ஒரு மாதத்­திற்கும் மேலாக தாக்­குதல் நடத்தி வரும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் தற்­போது அங்­குள்ள மிகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னை­யான அல் ஷிபா மருத்­து­வ­ம­னை­யினுள் நுழைந்­துள்­ளது. இதை ஹமா­ஸுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்று இஸ்ரேல் கூறு­கி­றது.

உலக சுகா­தார நிறு­வ­ன­மா­னது அல்-­ஷிபா மருத்­து­வ­மனை ‘கிட்­டத்­தட்ட ஒரு கல்­ல­றை­யா­கி­விட்­ட­தாக’ தெரி­வித்­துள்­ளது.

காஸாவின் வடக்கில் அமைந்­துள்ள அல்-­ஷிபா மருத்­து­வ­ம­னைக்கு கீழே தான் ஹமாஸின் சுரங்க அமைப்­பு­க­ளு­டைய கட்­டளை மற்றும் கட்­டுப்­பாட்டு மையம் இயங்­கு­வ­தாக இஸ்ரேல் கூறி வரு­கி­றது. இதனால் இந்த மருத்­து­வ­மனை கடந்த சில நாட்­க­ளாக இஸ்ரேல் பாது­காப்புப் படை­களின் தீவி­ர­மான தாக்­கு­தலை எதிர்­கொண்­டுள்­ளது.

இந்­நி­லையில், காஸா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்­து­வ­ம­னையில் தற்­போது 500க்கும் மேற்­பட்ட நோயா­ளிகள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் இது வடக்கில் உள்ள நோயா­ளி­களை அனு­ம­திக்கும் ஒரே மருத்­து­வ­மனை என்று கூறப்­ப­டு­கி­றது. இருப்­பினும், இந்த மருத்­து­வ­மனை பல்­வேறு வச­தி­களில் பற்­றாக்­குறை அதி­க­ரித்து வரு­வதால் பெரும் சவால்­களை எதிர்­கொள்­கி­றது.

குவிந்து கிடக்கும் சட­லங்­கள்

உலக சுகா­தார அமைப்பின் கூற்­றுப்­படி, காஸாவில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் பாதிக்கும் மேற்­பட்­டவை ( 36 இல் 22 மருத்­து­வ­ம­னைகள்) எரி­பொருள் பற்­றாக்­குறை, சேதம், தாக்­கு­தல்கள் மற்றும் பாது­காப்­பின்மை போன்ற கார­ணங்­களால் செயல்­பட முடி­யாத நிலையில் உள்­ளன.

தெற்கில் செயல்­படும் மருத்­து­வ­ம­னைகள் அதிக நோயா­ளி­களை அனு­ம­திக்க முடி­யாது என்­பதால், வடக்கில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் இருந்து நோயா­ளி­களை வெளி­யேற்­று­வது சில­ருக்கு “மரண தண்­டனை” விதிக்­கப்­ப­டு­வ­தற்குச் சமம் என உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.
மருத்­து­வ­ம­னை­யினுள் இஸ்­ரேலின் 6 டாங்­கிகள் இருப்­பதைப் பார்த்­த­தாக அல் ஷிபா மருத்­து­வ­ம­னையில் உள்ள காதர் ஜானன் என்­பவர் கூறினார். நூற்­றுக்­க­ணக்­கான இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் எமர்­ஜென்சி பிரி­வுக்குள் நுழைந்­த­தா­கவும் அவர் கூறு­கிறார்.

மருத்­து­வ­ம­னையை ஆயு­தக்­கு­ழுக்கள் தலை­மை­யி­ட­மாகக் கொண்டு செயல்­ப­டு­வதை தங்­களின் உள­வுத்­துறை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக அமெ­ரிக்­காவும் செவ்­வா­யன்று தெரி­வித்­தது.

ஹமாஸ் கூறு­வது என்ன?
இந்தக் குற்­றச்­சாட்­டு­களை ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வரு­கி­றது. மேலும், இஸ்­ரேலின் இந் நட­வ­டிக்கை மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான போர்க் குற்றம் என்றும் ஹமாஸ் தெரி­வித்­துள்­ளது. இது­மட்­டு­மின்றி இந்த மருத்­து­வ­ம­னையில் 9 ஆயிரம் நோயா­ளிகள் மற்றும் பொது­மக்­களும், மருத்­து­வ­மனை பணி­யா­ளர்­களும் இருப்­ப­தா­கவும் ஹமாஸ் கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில், இஸ்ரேல் இரா­ணு­வத்தின் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை குறித்த தக­வல்­களை தொடர்ந்து நான்­கா­வது நாளாக பலஸ்­தீன சுகா­தாரத் துறையால் வழங்க முடி­ய­வில்லை.

மருத்­து­வ­ம­னையில் இருந்து செயல்­ப­டு­வதை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அதி­கா­ரி­க­ளுக்கு 12 மணி­நேர கால அவ­காசம் வழங்­கி­ய­தா­கவும், எனினும் அது நடக்­க­வில்லை என்றும் கூறும் இஸ்ரேல், ஹமாஸால் மனிதக் கேட­யங்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­படும் மக்­க­ளுக்கு எந்தத் தீங்கும் ஏற்­ப­டக்­கூ­டாது என்­பதே தங்கள் சோத­னையின் நோக்கம் என்றும் தெரி­வித்­துள்­ளது.
இதற்­கி­டையே, ஹமாஸ் ஆயுதக் குழுவை ஒழிக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த எதையும் செய்யும் என அமெ­ரிக்­கா­வுக்­கான அந்­நாட்டின் துணைத் தூதுவர் தெரி­வித்­துள்ளார்.

உலக சுகா­தார அமைப்பின் செய்தித் தொடர்­பாளர் கிறிஸ்­டியன் லிண்ட்­மேயர், சுமார் 600 பேர் மருத்­து­வ­ம­னையில் தங்­கி­யுள்­ளனர், மற்­ற­வர்கள் அதன் பிற அறை­களில் தஞ்சம் அடைந்­துள்­ளனர், என்றார். “மருத்­து­வ­ம­னையைச் சுற்­றியும் சட­லங்கள் கிடக்­கின்­றன. அவற்றை அப்­பு­றப்­ப­டுத்­தவோ, புதைக்­கவோ அல்­லது பிண­வ­றைக்கு எடுத்துச் செல்­லவோ முடி­யாத சூழ்­நிலை உள்­ளது,” என்று அவர் கூறினார். “மருத்­து­வ­மனை வேலை செய்­ய­வில்லை. இது கிட்­டத்­தட்ட ஒரு கல்­லறை ஆகி­விட்­டது,” என்று லிண்­டெ­மியர் கூறினார்.

அழுகும் சட­லங்கள்,
இறக்கும் குழந்­தைகள்
மருத்­து­வ­ம­னையில் சட­லங்கள் குவிந்து அழு­கிப்­போகத் தொடங்­கி­யுள்­ள­தாக மருத்­து­வர்கள் கூறி­யுள்­ளனர்.

அழு­கிய உடல்­களைப் புதைப்­ப­த­ற­காக மருத்­து­வ­ம­னையை விட்டு வெளி­யேற இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் இன்னும் அனு­மதி வழங்­கா­ததால், நாய்கள் இப்­போது மருத்­து­வ­மனை வளா­கத்­திற்குள் நுழைந்து சட­லங்­களை உண்ணத் தொடங்­கி­யுள்­ள­தா­கவும் மருத்­து­வ­ம­னையின் மேலாளர் மருத்­துவர் மொஹமட் அபு செல்­மியா பிபி­சி­யிடம் தெரி­வித்தார்.

மின்­தடை கார­ண­மாக இன்க்­யு­பேட்­டர்­களில் வைக்­கப்­பட முடி­யாமல் இருக்கும் டஜன் கணக்­கான குறை­மாத குழந்­தை­களின் நிலை குறித்தும் கவ­லைகள் எழுந்­துள்­ளன. அவற்றில் ஏழு குழந்­தைகள் ஒட்­சிசன் பற்­றாக்­கு­றையால் இறந்­து­விட்­ட­தாக செல்­மியா கூறினார்.

கடந்த அக்­டோபர் 7இல் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தி­லி­ருந்து இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்­குதல் நடத்தி வரு­கி­றது. அப்­போ­தி­ருந்து அல் ஷிஃபாவைத் தவிர, காஸா பகுதி முழு­வதும் உள்ள பிற மருத்­து­வ­ம­னைகள் அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் மற்றும் மருந்­து­க­ளுக்குத் தட்­டுப்­பாடு மற்றும் மின்­சாரத் தடை உள்­ளிட்ட பர­வ­லான பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றன.

மருத்­துவர் மொஹமட் அபு செல்­மியா, அல் ஷிஃபா மருத்­து­வ­ம­னை­யி­லுள்ள மோச­மான நிலைமை குறித்து பிபி­சி­யிடம் கூறு­கையில், அங்கு சமீ­பத்­திய நாட்­களில் 32 பேர் இறந்­துள்­ள­தாகத் தெரி­வித்தார். அவர்­களில் மூன்று குறை­மாத குழந்­தைகள் மற்றும் 7 பேர் ஒட்­சிசன் பற்­றாக்­கு­றையால் இறந்­தனர் என்று அவர் கூறினார். டயா­லிசிஸ் தேவைப்­படும் இன்னும் பல நோயா­ளிகள் சிகிச்சை கிடைக்­கா­ததால் ‘அடுத்த இரண்டு நாட்­களில் இறக்கும் அபாயம் உள்­ளது’, என்றார்.

அடக்கம் செய்­யப்­ப­டாமல் கிடக்கும் 150 உடல்கள்
மேலும் பேசிய மருத்­துவர் அபு செல்­மியா, அவர் மருத்­து­வ­ம­னையின் செஞ்­சி­லுவைச் சங்­கத்­துடன் தொடர்பு கொண்டு, அங்கு கிடக்கும் சட­லங்­களை கொண்டு, அங்கு கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முயற்சித்து வருவதாகக் கூறினார். சுமார் 150 சடலங்கள் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் தற்போது அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது என்று அவர் தெரிவித்தார். மேலும், மருத்துவமனைக்குள் வந்த நாய்கள் பிணங்களை உண்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நோயாளிகளை வெளியேற்ற உதவ இஸ்ரேலிய இராணுவம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவர் மீண்டும் கோரிக்கை வைத்தார். “எந்த நோயாளியும் இறக்கக் கூடாது. அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சேவையைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.