இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம்: இரு அரசு தீர்வுக்கு இலங்கை ஆதரவு

0 124

ஐ.நா பொதுச்­ச­பையில் காஸா தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக இலங்கை வாக்­க­ளித்­தி­ருப்­ப­தா­கவும், சமா­தா­னத்­து­டன்­கூ­டிய ‘இரு அரசு’ தீர்வை தாம் ஆத­ரிப்­ப­தா­கவும் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.

ஹமாஸ் அமைப்­பினால் கடந்த ஒக்­டோபர் மாதம் 7 ஆம் திகதி தென் இஸ்­ரேலில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் மிகத்­தீ­வி­ர­ம­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் காஸா மீது இஸ்­ரே­லி­யப்­ப­டை­யினர் தொடர்ச்­சி­யாக நடத்­தி­வரும் தாக்­கு­தல்­களில் இது­வ­ரையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் கடந்த 26 ஆம் திகதி கூடிய ஐக்­கிய நாடுகள் பொதுச்­ச­பையில் ஜோர்­டானால் முன்­மொ­ழி­யப்­பட்ட காஸாவில் போர்­நி­றுத்­தத்தை வலி­யு­றுத்தும் தீர்­மானம் 120 நாடு­களின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது.
இவ்­வாறு மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த நாடு­களில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், சுவிற்­சர்­லாந்து, ஸ்பெயின் போன்ற நாடு­க­ளுடன் இலங்­கையும் உள்­ள­டங்­கு­கின்­றது.

அதன்­படி இவ்­வி­டயம் தொடர்பில் தனது உத்­தி­யோ­க­பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் (டுவிட்டர்) பதி­வொன்றைச் செய்­தி­ருக்கும் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, ஐக்­கிய நாடுகள் பொதுச்­ச­பையில் காஸா தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக இலங்கை வாக்­க­ளித்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

அது­மாத்­தி­ர­மன்றி ‘பொது­மக்­களைப் பாது­காப்­பதும், பண­யக்­கை­தி­க­ளாகப் பிடித்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­போரை விடு­தலை செய்­வதும், மனி­தா­பி­மான நிலை­வ­ரத்தை உறு­தி­செய்­வதும், வன்­மு­றைகள் தீவி­ர­ம­டை­வதைத் தடுப்­ப­துமே இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களாகும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்விவகாரத்தில் சமாதானத்துடன்கூடிய ‘இரு அரசு’ தீர்வுக்கு இலங்கை ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.