பலஸ்­தீன மக்­க­ளது உரி­மை­களை மதி­யுங்கள்: தேசிய ஷூரா சபை

0 145

வல்­ல­ர­சு­க­ளது தேவைக்­காக மத்­திய கிழக்கில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இஸ்ரேல் எனப்­படும் நாடு கடந்த எழு­பது வரு­டங்­க­ளுக்கும் மேலாக பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு வகை­யான அட்­டூ­ழி­யங்­களை அரங்­கேற்றி வரு­கி­றது. பூர்­வீக குடி­க­ளாக அப்­பி­ர­தே­சங்­களில் வாழ்ந்து வந்த பலஸ்­தீ­னர்­க­ளது நிலங்­களை ஆக்­கி­ர­மித்து உலகின் பல நாடு­க­ளி­லு­மி­ருந்த யூதர்­களை குடி­யேற்றி வரு­கி­றது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்கள் உலகின் பல நாடு­க­ளிலும் தாம் பிறந்து வளர்ந்த மண்­ணிலும் அக­தி­க­ளாக அடிப்­ப­டை­யான தேவைகள் மறுக்­கப்­பட்டு மனித உரி­மைகள் மீறப்­பட்டு வாழ்ந்து வரு­கின்­றனர்.

தொடர்ந்­தேர்ச்­சி­யான இன்­னல்கள் வதை­களின் போது அவ்­வப்­போது பலஸ்­தீ­னர்கள் பொறு­மை­யி­ழந்து தமது எதிர்ப்பை காட்­டி­வந்­துள்­ளனர். அதன் சங்­கிலித் தொட­ரா­கவே தற்­போ­தைய அவர்­க­ளது நட­வ­டிக்­கை­களும் அமைந்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் எழு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக அவர்கள் அனு­ப­வித்த அடக்கு முறை­களை மறந்த நிலையில் பலர் இஸ்­ரேலின் பக்கம் நியா­ய­மி­ருப்­ப­தாகக் கூறு­வது முற்­றிலும் பிழை­யான வாத­மாகும்.

உலகில் யூதர்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வந்த வேளை அவர்­க­ளுக்கு ஒரு நிலம் வழங்­கப்­பட்ட போது அத­னுடன் நிறுத்­தாது எகிப்து, சிரியா, ஜோர்டான், பலஸ்தீன் ஆகிய நாடு­க­ளது நிலங்­க­ளையும் ஆக்­கி­ர­மித்­தது மட்­டு­மன்றி மத்­திய கிழக்கில் உள்ள அனை­வ­ரையும் அச்­சு­றுத்திக் கொண்டு அடா­வ­டித்­தனம் புரியும் ஒரு அரசின் பக்கம் எப்­படி நியா­ய­மி­ருக்க முடியும்?
ஐக்­கிய நாடுகள் சபையில் இது­வரை இஸ்­ரே­லுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்ட நூற்றுக் கணக்­கான தீர்­மா­னங்­களை இஸ்ரேல் தன்னை ஸ்தாபித்த வல்­ல­ர­சு­க­ளது அனு­ச­ர­ணை­யுடன் அப்­பட்­ட­மாக மீறி வரு­வ­தற்கு முழு உல­கமும் சாட்­சி­யாகும்.

இது இப்­ப­டி­யி­ருக்க பலஸ்­தீன ஆயுதக் குழுக்­க­ளது தாக்­கு­தல்­க­ளுக்கு பதி­லடி கொடுத்தல் என்ற பெயரில் சிறு­வர்கள் பெண்கள் முதியோர் நோயா­ளிகள் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கானோர் இஸ்­ரேலின் மூர்க்­கத்­த­ன­மான வான் தாக்­கு­தல்­களால் பதைக்க பதைக்க கொன்­றொ­ழிக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். கண்­மூ­டித்­த­ன­மான குண்டுத் தாக்­கு­தலால் வைத்­தி­ய­சா­லைகள் மக்­க­ளது குடி­யி­ருப்­புக்கள் பள்­ளி­வா­யல்கள் பல்­க­லைக்­க­ழ­கங்கள் தரை மட்­ட­மா­கி­யுள்­ளன.
இது போக யுத்­தங்­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை­செய்­யப்­பட்ட வெள்ளைப் பொஸ்­ப­ரஸை இஸ்ரேல் விமா­னங்கள் காஸாவில் வீசி­வ­ரு­கின்­றன.
இஸ்­ரேலின் இந்த தறி­கெட்ட நட­வ­டிக்­கை­களால் அப்­பி­ராந்­தியம் யுத்தக் காடாக மாறி­யுள்­ளது. அரபு நாடு­களில் மக்கள் கொதித்­தெ­ழுந்து வருகிறார்கள்.

இந்த நிலை நீடிக்குமாயின் யுத்த எல்லை வியாபிக்கலாம் என்ற பீதியும் முழு உலகினதும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

எனவே இஸ்ரேல் மனிதாபிமான எல்லைகளை மீறாமல் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என தேசிய ஷூரா சபை வேண்டுகோள் விடுக்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.