சஹ்ரான் குழுவுக்கும் உளவுப் பிரிவுக்கும் மறுக்க முடியாதளவு நெருங்கிய தொடர்பு

ஆதாரங்கள் உள்ளன என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

0 259

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை மேற்­கொண்ட சஹ்ரான் குழு­வி­ன­ருக்கும் இரா­ணுவ உளவுப் பிரி­வி­ன­ருக்கும் மறுக்­க­மு­டி­யாத அள­வுக்கு நெருங்­கிய தொடர்­பி­ருந்­துள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வரும் எதிர்­கட்­சியின் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­துள்ளார்.

செனல்–4 வெளி­யிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஆவ­ணப்­படம் பற்றி பாரா­ளு­மன்ற விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் “சஹ்ரான் குழு­வி­ன­ருக்கும் இரா­ணுவ உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கும் இடையில் தொடர்­புகள் இருந்­துள்­ள­மைக்­கான சான்­றுகள், ஆதா­ரங்கள் உள்­ளன. உள­வுப்­பி­ரிவின் அதி­கா­ரி­யான இன்ஸ்­பெக்டர் ஒருவர் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களைத் தொடர்பு கொள்­வ­தற்கு அவ­ரது காத­லியின் கைய­டக்கத் தொலை­பே­சியைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த தக­வல்­களை எப்­பிஐ (FBI) வழங்­கி­யது. ஆனால் இது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை.

தாஜ் ஹோட்­டலில் குண்­டுத்­தாக்­கு­தலை நடத்திச் சென்ற பயங்­க­ர­வாதி தொலை­பேசி அழைப்­பொன்று கிடைத்­ததன் பின்பு அங்­கி­ருந்து சென்று தெஹி­வ­ளையில் உளவுப் பிரிவு அதி­கா­ரி­யொ­ரு­வரைச் சந்­தித்­துள்ளார். இது தொடர்­பி­லான விசா­ர­ணையை வெள்­ள­வத்தை பொலிஸார் முன்­னெ­டுத்­தனர் என்­றாலும் உளவுப் பிரி­வினர் இவ்­வி­சா­ர­ணைக்கு இடை­யூறு செய்­தனர்.

மேலும் வவு­ண­தீவில் இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் கொலை செய்­யப்­பட்­ட­போது இரா­ணுவ உள­வுப்­பி­ரிவு அவர்­க­ளது கொலைக்கு எல்­ரீ­ரீஈ யினரே பொறுப்பு என தொட­ராக கூறி வந்­தனர். இதனை நிரூ­பிப்­ப­தற்­காக திசை திருப்­பு­வ­தற்­காக எல்ரிரிஈ தற்­கொலை அங்­கி­யொன்­றி­னையும் அங்கு வைத்­தனர்.

அத்­தோடு மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் சிதைக்­கப்­பட்­ட­போது பொலிஸார் சாதிக் மற்றும் ஹக் என்­போரை கைது செய்து விசா­ர­ணைக்­காக கொழும்­புக்கு அழைத்து வந்­தனர். இதற்கு இரா­ணுவ அதி­கா­ரிகள் இரு தட­வைகள் இடை­யூறு செய்­தனர். இவ்­வா­றான செயற்­பா­டுகள் இரா­ணுவ உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கும் சஹ்ரான் குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் தொடர்­புகள் இருந்­ததை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

சிஐடி விசா­ர­ணை­யா­ளர்கள் சொனிக் என்று அறி­யப்­படும் ஒருவர் பயன்­ப­டுத்­திய சஹ்­ரா­னுடன் தொடர்பு கொண்ட சிம் அட்­டையை கண்­டெ­டுத்­தனர். குறிப்­பிட்ட சிம் அட்­டையின் உரி­மை­யா­ளரைக் கண்டு பிடிப்­ப­தற்­கான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
நகர போக்­கு­வ­ரத்து பொலிஸைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். விசா­ர­ணை­யின்­போது பெண் பொலிஸ் அதி­காரி தான் கு-றிப்­பிட்ட சிம் அட்­டையைக் கொள்­வ­னவு செய்­ததை ஏற்­றுக்­கொண்டார். அந்த சிம் அட்­டையை பின்பு தனது நண்­ப­ராக அரச உள­வுப்­பி­ரிவில் கடமையாற்றும் உதவி இன்ஸ்பெக்டர் பண்டார என்பவருக்கு வழங்கியதாக தெரிவித்தார். அந்த உதவி இன்ஸ்பெக்டரே தற்போது இன்ஸ்பெக்டர் பண்டார. ஐஸ்ஐஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது. இராணுவ உளவுப்பிரிவு சஹ்ரான் குழுவினருடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.