குற்றச்சாட்டை நிரூபிப்பாரா பிள்ளையான்?

0 937

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஐஎஸ்.ஐஎஸ்.அமைப்­பி­லி­ருந்து பயிற்சி பெற்ற சிலர் காத்­தான்­கு­டியில் இன்னும் வாழ்­வ­தாக இரா­ஜாங்க அமைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்டு தொடர்­பாக அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ரணை செய்ய வேண்டும் என காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளது.

இது தொடர்­பாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­க­ளினால் சம்­மே­ளனம் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஒன்றை நடாத்­தி­யது.

இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­ளத்தின் தலைவர் ரஊப் ஏ மஜீத் உட்­பட சம்­மே­ளன உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டனர்.

இதன் போது சம்­மே­ளன செய­லாளர் ஏ.எல்.எம்.சபீல் நளீமி கருத்து வெளி­யி­டு­கையில், செனல் 4 காணொளி வெளி­வந்த பின்னர் இரா­ஜாங்க அமைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் மற்­று­மொரு குற்­றச்­சாட்டை காத்­தான்­குடி சமூ­கத்தின் மீது முன் வைத்­துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­லி­ருந்து பயிற்சி பெற்ற சிலர் இந்த காத்­தான்­கு­டியில் இன்னும் வாழ்­வ­தாக அவர் கூறி­யுள்ளார்.

அவர்கள் யார்? எங்கிருக்­கின்­றார்கள்? என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். அவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும் என்­பது எமது காத்­தான்­குடி சமூகம் சார்­பாக அர­சாங்­கத்­திடம் முன் வைக்­கின்ற வேண்­டு­கோ­ளாகும்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லினால் எமது நாடு மிக மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டதை நாம் அறிவோம். குறிப்­பாக அந்த ஈஸ்டர் தாக்­கு­த­லில் ஈடு­பட்ட ஒரு சிலர் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­த­வர்கள் என்­பதால் எமது காத்­தான்­குடி சமூகம் பாரி­ய­ள­வில் பாதிக்­கப்­பட்­டது.

வியாபார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியா­ம­லி­ருந்­தது. ஏனைய பிர­தே­சங்­க­ளுக்கு காத்­தான்­குடி முஸ்­லிம்கள் செல்­கின்ற போது அவர்­களை சந்­தேகக் கண் கொண்டு பார்க்­கின்ற நிலைமை ஏற்­பட்­டது.

மதங்­க­ளுக்­கி­டையில் இனங்­க­ளுக்­கி­டையில் முஸ்­லிம்­களை சந்­தேகக் கண் கொண்டு பார்க்­கின்ற நிலை காணப்­பட்­டது. இப்­ப­டி­யான அச்­சு­றுத்­தல்­க­ளையும் பல்­வேறு வகை­யான சந்­தே­கங்­க­ளையும் இந்த சமூ­கத்தின் மீது ஈஸ்டர் தாக்­குதல் ஏற்­ப­டுத்­தி­யது. இந்த ஈஸ்டர் தாக்­குதல் இடம் பெற்ற பின்னர் விசா­ரணை செய்­வ­தற்­காக பல்­வேறு விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன.

ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னால் யார் இருந்­தார்கள் யார் செய்­தார்கள் என்­ப­வைகள் சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு என்­பன அமைக்­கப்­பட்டு விசா­ரணைகள் செய்­யப்­பட்­டன.

இருந்­தாலும் அண்­மையில் செனல் 4 வெளி­யிட்ட ஆவணத் தொகுப்பின் பின்னர் இது தொடர்­பான இன்னும் சில விட­யங்கள் வெளி வரத் தொடங்­கி­யுள்­ளன. அஸாத் மௌலானா தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் தொடர்பில் அதன் பார­தூ­ரத்தை கருத்­திற் கொண்ட அர­சாங்கம் ஜனா­தி­பதி இதனை விசா­ரிப்­ப­தற்­காக ஓய்வு பெற்ற நீதி­பதி இமாம் அவர்­களின் தலை­மையில் 3 பேர­டங்­கிய ஆணைக்­கு­ழுவை நிய­மித்­துள்ளார். அதற்­காக ஜனா­தி­ப­தி­ய­வர்க­ளுக்கு காத்­தான்­குடி சமூ­கத்தின் சார்பில் மன­மார்ந்த நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கின்றோம். அத்­தோடு இதை சர்­வ­தே­சமும் விசா­ரணை செய்­ய­வேண்டும். சர்­வ­தேச விசா­ணையும் அவ­சியம் என்­பதை நாம் வலி­யு­றுத்­து­கின்றோம்.

அந்த ஆவ­ணப்­ப­டத்தில் சொல்­லப்­பட்­டுள்ள விட­யங்கள் பார­தூ­ர­மான விட­யங்கள். இந்தக் குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னால் அர­சாங்கம் இருந்­தி­ருக்­கின்­றது என்ற பல­மான சந்­தேகம் எல்லோர் உள்­ளங்­க­ளிலும் எழும்பத் தொடங்­கி­யுள்­ளது. மக்கள் இதனை பேசத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்னால் எமது மாவட்­டத்தைச் சேர்ந்த இரா­ஜாங்க அமைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் மற்­று­மொரு குற்­றச்­சாட்டை காத்­தான்­குடி சமூ­கத்தின் மீது முன் வைத்­துள்ளார். ஐஎஸ்.ஐஎஸ். அமைப்­பி­லி­ருந்து பயிற்சி பெற்ற சிலர் இந்த காத்­தான்­கு­டியில் இன்னும் வாழ்­வ­தாக ஒரு குற்­றச்­சாட்டை முன் வைத்­துள்ளார். இது எம்மைப் பொறுத்த வரைக்கும் ஒரு பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டாகும். கண்­டிப்­பாக இந்தக் குற்­றச்­சாட்டு விசா­ரிக்­கப்­பட வேண்டும். அவர்கள் யார் யார் இருக்­கின்­றார்கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். அவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அர­சாங்கம் இது விட­யத்தில் பொடு­போக்­காக இருக்கக் கூடாது என்­பதை நாம் தெளி­வாக கூறி வைக்க விரும்­பு­கின்றோம். இந்தக் குற்­றச்­சாட்டை முன் வைத்­தவர் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்­சரும் மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழுத் தலை­வ­ரு­மாவார்.
அர­சாங்­கத்தில் முக்­கி­ய­மான பங்­குகளை வகிக்கும் ஓர் இரா­ஜாங்க அமைச்சர் காத்­தான்­கு­டி­யில் ஐஎஸ். ஐஎஸ். அமைப்பில் இன்னும் பயிற்சி பெற்­ற­வர்கள் இருக்­கின்­றார்கள் என்று கூறி­யி­ருப்­பதை நாம் பரா­மு­க­மாக விட முடி­யாது. ஆகவே அர­சாங்­கத்­திடம் வின­ய­மாக நாம் கேட்டுக் கொள்­வது என்­ன­வெனில், கடந்த காலங்­களில் இப்­ப­டி­யான போலிப்­பி­ரச்­சா­ரங்கள் செய்­யப்­பட்­டதன் கார­ண­மா­கத்தான் முஸ்லிம் சமூகம் மிக கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது. எனவே இரா­ஜாங்க அமைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் கூறி­யுள்ள இந்த விட­யத்தை நாங்கள் ஒரு பாரதூ­ர­மான விட­ய­மாக பார்க்­கின்றோம். அர­சாங்கம் இது விட­யத்தில் கூடு­த­லான கவனம் செலுத்தி விசா­ரண செய்ய வேண்டும் என்­பதை நாம் அர­சாங்­கத்திடம் வலி­யு­றுத்­துகின்றோம் என்றார்.

காத்­தான்­குடி தொழில்­வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­புக்­களின் ஒன்­றியம்

செனல் 4 வெளி­யிட்ட காணொளி தொடர்­பாக நேர்த்­தி­யான விசா­ரணை வேண்­டு­மென காத்­தான்­குடி தொழில்­வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­புக்­களின் ஒன்­றி­யத்­தினர் இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று (17) காத்­தான்­குடி கடாபி ஹோட்­டலில் காத்­தான்­குடி தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­புக்­களின் ஒன்­றி­யத்தின் தலை­வரும் காத்­தான்­குடி நகர சபை முன்னாள் தவி­சா­ளரும் முன்னாள் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான யு.எல்.எம்.என்.முபீன் தலை­மையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே இந்த இந்த வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது.

இது தொர்­பாக முபீன் கருத்து தெரி­விக்­கையில், பக்­க­சார்­பற்ற உலகம் ஏற்றுக் கொள்­கின்ற நல்ல சட்ட நிபு­ணர்­களும் குற்றச் செயல்­களை பகுப்­பாய்வு செய்­கின்ற வல்­லு­னர்­களும் அடங்­கிய ஒரு சர்­வ­தேச நிபுணர் குழு இந்த விட­யத்தை துல்­லி­ய­மாக விசா­ரணை செய்து இதற்­கான சூத்­தி­ர­தா­ரி­களை கண்­ட­றி­வ­தோடு இதற்­கான கார­ணத்தை மக்கள் மயப்­ப­டுத்தி உல­க­­றியச் செய்­வ­துடன் சர்­வ­தேச நிய­மங்கள், ஐக்­கிய நாடுகள் சபையின் விதி­மு­றை­க­ளுக்கு ஏற்­ப விசா­ரணை செய்து இந்த சூத்­தி­ர­தா­ரிகள் தண்­டிக்­கப்­படல் வேண்டும். அத்துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு முழு­மை­யான நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டு­வ­துடன் அந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உண்­மை­யான நிவா­ரணம் வழங்­கப்­படல் வேண்டும்.

அத்­துடன் இக்­குண்டுத் தாக்­கு­தலில் இலங்­கையின் ஒட்டு மொத்த சமூ­கமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் இலங்கை சர்­வ­மத தலை­வர்­களின் தலை­மையில் இலங்கை மக்களின் பத்து இலட்சம் பேர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை கோரும் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட வேண்டும். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டும் அதற்கு நடந்தது என்ன என்பதை இதுவரை பொது மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையின் சிபாரிசுகளுக்கு நடந்தது என்ன என்பதையும் பொது மக்கள் அறிய விரும்புகின்றனர்.
எனவேதான் சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி முகைதீன்சாலி, ஆசிரியர் எச்.எம்.எம்.பாக்கீர், மௌலவி கே.எல்.எம்.அனீஸ், மௌலவி ஆதம்லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.