குரல்களை வலுப்படுத்தல்: பெண்களின் உரிமையை கோடிட்டுக் காட்டும் கையடக்க தொலைபேசி கதை சொல்லும் பயிற்சிப்பட்டறை

0 575

உனவட்டுன என்ற அமைதியான கரையோர நகரில் ஆகஸ்ட் 2023 இல் தென் மாகாணத்தைச் சேர்ந்த 23 இளம் பெண் பிள்ளைகள் நிலை மாற்றத்துக்கான பயணம் ஒன்றுக்காக ஒன்று கூடினர். ஊடகம் மற்றும் தகவல்களுக்கான நிலையத்தினால் அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட ஆட்சிக்கான கையடக்க தொலைபேசி ஊடகவியல் பயிற்சி நிகழச்சித்திட்டத்துக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அந்நிகழ்ச்சித்திட்டம் மாற்றம் ஒன்றுக்கான தூண்டுகோலாக அமையப் போகிறது என்பதையோ அல்லது பெண் உரிமைகள் சாரந்த முக்கிய விடயங்களில், குறிப்பாக மாதவிடாய் உரிமைகள் தொடர்பில் பல விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட முன்னெடுக்கப்படுகின்றது என்பதை அவர்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமான வேளை, தமது சமூகங்களில் பெண்கள் தொடர்பில் தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டது. அவர்கள் பகிர்ந்து கொண்ட கதைகள் இதயத்தைத் தொடுவனவாகவும் வலுவானவையாகவும் அமைந்திருந்தன. பெருந்தோட்ட சமூகங்களில் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் வறுமை காரணமாக மாதவிடாய் தொடர்பில் எதிர்கொள்ளும் துயரங்களை ஒரு கதையாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியொருவர் விபரித்தார். இளம் பெண் பிள்ளைகள் தமது மாதவிடாயின் போது துப்புரவுத் துவாய்களுக்கான(Sanitary Pads) அணுகல் இன்றி துயருறும் அதிர்ச்சியளிக்கும் யதார்த்தத்தை நினைவு கூர்ந்தார். இவ்வாறான நிலைகளில் அவர்கள் மரங்களில் படரும் கொடிகளின் பட்டைகள் மற்றும் கழிவுக் காகிதம் என்பவற்றை இந்நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றனர். இவ்வகையான கதைகள் ஓரங்கட்டப்பட்ட கிராமிய சமூகங்களில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுவனவாக இக்கதைகள் அமைந்திருந்தன.

பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான ஆதரித்து வாதிடலில் ஆர்வம் கொண்ட இன்னொரு பட்டதாரி மாணவி பாதிப்புறும் ஏதுநிலையில் உள்ள இந்தப் பெண்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி எவ்வாறு வதைக்கின்றது என்பதை எடுத்துக் காட்டினார். இப்பெண்கள் தமது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முயலும் வேளை தொந்தரவுகளை, சட்ட ரீதியான பாகுபாட்டை பொது மக்கள் மத்தியில் அவமானத்துக்க உள்ளாவதை எதிர்கொள்கின்றனர். தமது விருப்புக்கு எதிராக இவ்வகையான வேலையை மேற்கொள்ளும் பெண்களை ஒடுக்கும் முறைமைசார் காரணிகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்காக ஆதரித்து வாதிடும் இந்த இளம் செயற்பாட்டாளர் எடுத்துக் கூறினார்.

பெண்களின் உரிமைகளுக்காக ஆதரித்து வாதிடும் செயற்பாட்டாளர்களாக இந்த இளம் பெண்களை வலுப்படுத்துவதை ஆட்சிக்கான கையடக்க தொலைபேசி ஊடகவியல் பயிற்சி நிகழச்சித்திட்டம் இலக்காகக் கொணடிருந்தது. உற்சாகம் மிகக் பயிற்றுனர்களான திரு. கபில ராமநாயக்க மற்றும் செல்வி. பாத்திமா ~hனாஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பங்கேற்பாளர்கள் கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் கலையைக் கற்றுக் கொண்டனர். இலங்கையில், கையடக்க தொலைபேசி ஊடகவியலின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான திரு. ராமநாயக்க கதை சொல்லலுக்கு அத்தியாவசியமான விடயங்கள், n~hட் கலவை, காணொளி எடிட்டிங் தமது கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி நேர்காணலை மேற்கொள்வதற்கான உத்திகள் போன்ற விடயங்களைக் கற்பித்ததுடன் இவ்விடயங்கள் தொடர்பில் அப்பெண்களின் திறன்களையும் அதிகரித்தார்.

ஒரு விரிவுரையாளரும் உற்சாகம் மிக்க பெண்கள் உரிமை செயற்பாட்டாளருமான செல்வி. ~hனாஸ் உலகளாவிய அளவில் பெண்கள் உரிமை மற்றும் ஆட்சி என்பவற்றின் சிக்கல் தன்மைகளை ஆழமாக விளக்கினார். இவ்விடயங்கள் தொடர்பில் உள்@ர் மற்றும் சர்வதேச சூழமைவுகளில் எட்டப்பட்ட முன்னேற்றம் மற்றும் இன்னும் காணப்படும் தடைகள் தொடர்பில் அவர் செழுமையான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். பயிற்சியின் நிறைவில் இந்த 23 பெண்களும் கதைசொல்வதை ஒரு பணியாகக் கொண்டவர்களாக நிலைமாற்றம் அடைந்தனர். நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நாள் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது. தமது ஆலோசகர்களால் ஊக்குவிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பெண்கள் உரிமைகள் மற்றும் பால்நிலைச் சமத்துவம் என்பவற்றைக் மையமாகக் கொண்ட தமது சொந்த கையடக்க தொலைபேசி ஊடகவியல் திட்டங்களைக் கொண்டவர்களாக புறப்பட்டனர். வலுவான கதைகளை உருவாக்க, மனித உரிகைள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க். பால்நிலை கூருணர்திறன் மிக்க கதைகளை உருவாக்க, நெறிமுறை மிக்க நேர்காணல்களை மேற்கொள்ள அத்துன் பெண்கள் உரிமை பிரச்சினைகள் தொடர்பாக களத் தகவல் சேகரிப்புகளில் ஈடுபட அவசியமான திறன்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஆட்சிக்கான கையடக்க தொலைபேசி ஊடகவியல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவு அவர்களின் வாழ்வின் புதியதொரு அத்தியாயத்துக்கான ஆரம்பமாக அமைந்திருந்தது. வலுப்படுத்தப்பட்ட இந்த 23 பெண்களும் தமது நோக்கம் பற்றியதொரு புதுப்பிக்கப்பட்ட உணர்வு அத்துடன் தமது குரலை கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் ஊடாக உரத்து ஒலிக்க வைப்பதற்கான திறன்களைக் கொண்டவர்களாக உனவட்டுனவில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். தடைகளை உடைக்க, நெறிமுறைகளை சவாலுக்கு உட்படுத்து அத்துடன் பெண்களின் உரிமையை ஒரு யதார்த்தமாக ஆக்குவதற்கான சக்தியை அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றனர். நீண்ட தூரங்களுக்கு பரந்த அளவில் எதிரொலிக்க உள்ள அவர்களின் கதைகள் கதைசொல்லலின் நிலைமாற்றும் சக்தியை மற்றும் தோற்கடிக்கப்பட முடியாத பெண்களின் மனவலிமையை எடுத்துக்காட்டவுள்ளன.

தமது சமூகங்களில் பெண்களின் உரிமைகளுக்ககா ஆதரித்து வாதிடும் செயற்பாட்டாளர்களாக அவர்கள் நிலைமாற்றம் அடையும் வேளை, வலுப்படுத்தல் அலை தொடர்ச்சியாக வளர்ச்சியுறும் அலையை அவர்கள் ஏற்படுத்தும் வேளை, இந்நிகழ்ச்சித்திட்டத்தின் தாக்கம் பங்குபற்றுனர்களையும் தாண்டி விரிவடையும்.

Leave A Reply

Your email address will not be published.