பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும்

செனல் 4 காணொளி குறித்து உலமா சபை தெரிவிப்பு

0 773

ஏ.ஆர்.ஏ.பரீல்

செனல் 4 அண்­மையில் வெளி­யிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆவ­ணப்­படம் சமூ­கத்தின் மத்­தியில் பல சர்ச்­சை­க­ளையும், வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதனால் இவ்­வி­டயம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும், நீதியை வேண்டி நிற்­கின்ற அனை­வ­ருக்கும் நிலை­யா­ன­தொரு தீர்­வையும், தெளி­வையும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் வழங்க வேண்டும் என இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித்  செனல் 4 ஆவ­ணப்­படம் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். மேலும் எதிர்­கா­லத்தில் நாட்டில் இது­போன்ற அசம்­பா­வி­தங்கள் ஏற்­ப­டா­தி­ருக்க உரிய நட­வ­டிக்­கைகள் மேற் கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்றார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில்; இஸ்­லாத்­திற்கும் குறித்த தீவி­ர­வாத சிந்­த­னைக்கும் எந்­த­வொரு தொடர்பும் இல்லை என்று ஏற்­க­னவே நாம் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்டோம். ஸஹ்ரான் பேசிய விட­யங்­களைக் குறிப்­பிட்டு ஸஹ்­ரா­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு 2019 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் பாது­காப்பு செய­லா­ள­ரிடம் முறைப்­பாடு செய்தோம்.

இது தொடர்­பாக உட­னடி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு குறிப்­பிட்ட நபர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்­றி­ருக்­காது தடுக்­கப்­பட்­டி­ருக்­கலாம். துர­திஷ்­ட­வ­ச­மாக தாக்­குதல் நடை­பெற்­ற­தோடு குறிப்­பாக கிறிஸ்­தவ மக்­களும் அதே­போன்று முஸ்­லிம்­களும் இதனால் பாதிப்­புக்­குள்­ளா­கி­னார்கள். எமது நாட்டின் பொரு­ளா­தா­ரமும் பாதிக்­கப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து நாம் நாட்டில் சக­வாழ்வைக்  கட்­டி­யெ­ழுப்­பவும், இஸ்லாம் தொடர்­பாக சரி­யான புரி­தல்­களை பல்­லின மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தவும் ஏரா­ள­மான முயற்­சி­களை மேற்­கொண்டோம்.

எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள்  வெறுப்புப் பேச்­சுக்கள் தொடர்ந்த வண்­ண­மி­ருந்­தன. அளுத்­கம, திகன, மினு­வாங்­கொடை மற்றும் குரு­நாகல் தாக்­கு­தல்கள் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதனைத் தொடர்ந்து  தொடர்ச்­சி­யாக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. அத்­தோடு முஸ்லிம் அமைப்­புகள், நிறு­வ­னங்கள் இஸ்­லா­மிய அடை­யா­ளங்கள் சந்­தே­கிக்­கப்­பட்டு கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்­டன. முஸ்­லிம்கள் இந்­நாட்டில் தலை­கு­னிந்து வாழ வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

குறித்த தாக்­குதல் தொடர்­பாக நாட்டில் மூன்று அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­ட­போ­திலும் தாக்குதலின் பின்னணியில் வேறு ஒரு சாரார் இருப்பதாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் அரசியல் ரீதியாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிலையானதொரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.