தனியார் சட்ட திருத்தங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுங்கள்

0 247

தசாப்த கால­மாக இழு­பறி நிலையில் இருந்து வரு­கின்ற முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் முஸ்லிம் சமூ­கத்தில் நில­வு­கின்ற கருத்து முரண்­பா­டுகள் கார­ண­மாக தொடர்ந்தும் தேக்க நிலையில் காணப்­ப­டு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

இச்­சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்­களை மேற்­கொள்ளும் பொருட்டு உரிய சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­காக 2009 இல் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் ஓய்வு நிலை உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் முழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. குழுவில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள், நீதி­ப­திகள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள், பெண் சட்­டத்­த­ர­ணிகள் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் அங்கம் பெற்­றி­ருந்­தனர்.

18 உறுப்­பி­னர்­களைக் கொண்ட இக்­குழு பணி­களை 2009 இல் ஆரம்­பித்து 2018ல் தனது அறிக்­கையை அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளித்­தது. அன்று முதல் இன்­று­வரை இத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் இறு­தித்­தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை. இக்­குழு கூட இரண்­டாகப் பிள­வு­பட்டே செயற்­பட்­டது. குழு அங்­கத்­த­வர்­களில் 9 பேர் வேறாக ஒரு அறிக்கை தயா­ரித்து குழுத்­த­லை­வ­ரிடம் வழங்­கி­யி­ருந்­தனர்.

தற்­போது 14 வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் கூட முஸ்லிம் சமூ­கத்தால் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வர முடி­யாது முரண்­பட்டுக் கொள்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அண்­மையில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ இச்­சட்­டத்­தி­ருத்தம் தொடர்­பான முன்­மொ­ழி­வொன்­றினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்கி அவர்­க­ளது கருத்­தையும் கோரி­யி­ருந்தார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சட்ட திருத்த முன்­மொ­ழி­வுகள் தொடர்­பாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­க­ளுடன் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா கடந்த ஜூலை மாதம் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடாத்­தி­யது. இக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்பு உலமா சபை முன்­மொ­ழி­வு­களை உள்­ள­டக்­கிய ஆவ­ண­மொன்றை தயா­ரித்து அதில் கையொப்­ப­மி­டு­வ­தற்­காக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­க­ளுக்கு அனுப்பி வைத்­தது. நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளிப்­ப­தற்­காக தயா­ரிக்­கப்­பட்ட குறிப்­பிட்ட ஆவ­ணத்­துக்கு கையொப்­ப­மிட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மறுத்­த­துடன் அறிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும் தெரி­வித்­தது. அத்­துடன் உலமா சபையின் தலை­வ­ருக்கு கடி­தத்­தையும் அனுப்பி வைத்­தது. கூட்­டத்தில் வருகை தந்து கையொப்­ப­மிட்­ட­மையை தீர்­மா­னத்­துக்கு இணங்கி கையொப்­ப­மிட்­ட­தாக கருத முடி­யாது என கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்­தது.

இறுதி நேரத்தில் இவ்­வா­றான இழு­பறி நிலை முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்­தத்தை மேலும் சவா­லுக்கு உட்­ப­டுத்­தி­யது. இந்­நி­லையில் மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிர­தி­நி­தி­களும், உலமா சபையும் கடந்த 8 ஆம் திகதி கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

உலமா சபைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸி­லுக்கும் பெண் காதி நிய­மனம் மற்றும் பல­தார மணம் தொடர்­பான சட்ட திருத்­தத்தில் கருத்து வேறு­பா­டுகள் நில­வு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­ற­மு­மில்லை எனத் தெரி­வித்­தாலும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் சுமூ­க­மான தீர்­வு­க­ளுக்கு முஸ்லிம் கவுன்ஸில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்கும் எனத் தெரி­வித்­துள்­ளது. இது வர­வேற்­கத்­தக்­கது.

இதே­வேளை நியா­ய­மான திருத்­தங்­களை நாம­னை­வரும் சேர்ந்து மேற்­கொள்­ள­வேண்டும். முரண்­பா­டான விட­யங்­களில் உல­மாக்­களின் கருத்­தையும் சமூ­கத்­தி­னது கருத்­தையும் பெற்று ஒரு­மித்த கருத்­தோடு உல­மா­சபை பயணிக்க இருக்கிறது என்ற உலமா சபையின் தீர்மானம் மகிழ்ச்சி தருகிறது.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் இவ்விவகாரத்தில் ஒருமித்து பயணிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தசாப்தகாலமாக தொடரும் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டத்திருத்தங்கள் விரைவில் அமுலாக ஒத்துழைக்க வேண்டும் என்பதே சமூகத்தின் அபிலாசையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.