சுயாதீன நாடாகும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

0 105

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

பலஸ்­தீ­னத்தில் ஏழு தசாப்­தங்­க­ளாக நிலவும் பிரச்­சி­னையால் ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களை அந்த நாடு இழந்­துள்­ள­துடன் மேலும் ஆயிரக் கணக்­கானோர் காய­ம­டைந்­துள்­ளனர். சிறு­வர்கள் முதல் அனை­வரும் இந்த மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பெரு­ம­ள­வான மக்கள் இன்னும் அக­தி­க­ளா­கவே வாழ்­கின்­றனர்.அந்த அகதி முகாம்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன. இதனை எந்த விதத்­திலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தெரி­வித்தார்.

இதன்­போது அவர்­மேலும் உரை­யாற்­று­கையில், இந்த நெருக்­கடி நிலை­மைக்கு தீர்வு காண்­ப­தற்கு உலக நாட்டுத் தலை­வர்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பில் இங்கே கலந்­து­ரை­யாட வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.

பலஸ்­தீ­னத்தை ஒரு நாடாக இலங்கை 1988 ஆம் ஆண்டில் ஏற்­றுக்­கொண்­டது. அப்­போ­தி­லி­ருந்து இலங்கை அந்­நாட்டு மக்­க­ளுக்­காக குரல் கொடுத்து வரு­கின்­றது.

பலஸ்­தீனம் சுயா­தீன நாடாக எழு­வ­தற்கு சட்­டப்­ப­டி­யான உரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் தொடர்ந்தும் உள்ளோம்.அந்த மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.