அல்குர்ஆனை எரித்துவிட்டு நெருக்கடியில் சிக்கியுள்ள சுவீடன்

0 195

எம்.என் முஹம்மத்

சுவீடன் மிகவும் அழகான நாடு. உலகின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் (Human Development Index) 7ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 12 ஆவது செல்வந்த நாடு சுவீடன். இப்படி எல்லாம் உயர் பெறுமானம் உடைய சுவீடன் ஏன் இன்னொரு சமூகம் தமது உயிரை விட மேலாதானமாக மதிக்கும் புனித அல்குர்ஆனை எரிக்க வேண்டும்? இதனை விளக்குவதற்கு சுவீடனின் வரலாறு தொடர்பான அறிவு மிக முக்கியமானது.

சுவீடன் 90% இற்கு மேற்பட்ட கிறிஸ்தவ சமய நம்பிக்கையை கொண்டிருந்த நாடு, ஆனால் இப்போது 30.6% மக்கள் தாம் எந்த சமயத்தையும் சாராதவர்கள் எனத் தெளிவாக தெரிவித்துள்ளனர். சுவீடன் சனத்தொகையில் 2.3% முஸ்லிம்கள். சுவீடனில் வேகமாக பரவும் சமயம் இஸ்லாமாகும்.

1960-–1970 காலப்பகுதியில் சுவீடனில் ஏற்பட்ட பாலியல் புரட்சி (Sexual Revolution) அந்த அழகிய நாட்டின் மொத்த கலாசாரத்தையும் மாற்றியது.
பாலியல் சுதந்திரம், ஒரு பால் சேர்க்கை நாட்டின் அரசியல் யாப்பு மூலம் உறுதிப்படுதப்பட்டது. அங்கிருந்தே உலக பொது பாலியல் கலாசாரம் ஆரம்பாகின்றது. இந்த சுதந்திர பாலியல் கலாசாரத்திற்கு அல்குர்ஆன் தெளிவாக சவால் விடுகிறது.

சுவீடனின் இன்னொரு பக்கத்தை நாம் தெளிவாக உணர வேண்டும். எந்த யுத்தமும் இல்லாத சுவீடன் உலகின் மிகப் பெரிய ஒன்பதாவது ஆயுத ஏற்றுமதி நாடாகும். சுவீடனின் தேசிய வருமானம் ஆயுத உற்பத்தி மீதே தங்கியுள்ளது.
சுவீடனிற்கு உலகில் யுத்தங்கள் நீடிப்பது முக்கியமானது. அத்துடன் பாலியல் இணையத்தளங்கள் மூலமும் சுவீடன் பெருமளவிற்கு வருமானம் ஈட்டுகிறது.
அல் குர்ஆன் எரிப்பு விடயம் இவ்வளவுதூரம் தமது அரசை பாதிக்கும் என சுவீடன் நினைக்கவில்லை. சுவீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. குர்ஆன் எதிர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் ஐ.நா.வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. சுருக்கமாக சொன்னால் மதச் சார்புடைய சக்திகளை ஓரணியில் கொண்டு வந்துள்ளது. இது உலகின் அரசியல் போக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த நிறைய வாய்ப்புள்ளது.

பாலியலையும், ஆயுதங்களையும் மூலதனமாக கொண்டுள்ள நவீன வாழ்வியல் ஒழுங்கு இந்த நிகழ்வு மூலம் சவாலிற்கு உட்பட்டுள்ளது.
சுவீடனின் உற்பத்தி பொருட்கள் மீது அறபு இஸ்லாமிய நாடுகளில் மக்களால் விதிக்கப்பட்டுள்ள சுய பொருளாதாரத் தடை பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் இனி அல் குர்ஆன் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

பாலியலை ஒரு விளையாட்டாக கருதும் சுவீடன் நாட்டவருக்கு அல் குர்ஆனின் பலம் இப்போது நன்கு விளங்கியிருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.