குர்பான் விடயத்தில் மாடுகளுக்கு தடை ஏற்படின் மாற்று வழிகளை கையாள தீர்மானம்

கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் தெரிவிப்பு

0 202

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
குர்பான் விட­யத்தில் மாடு­களை அறுப்­ப­தற்கு முழு­மை­யான தடை உத்­த­ரவு வழங்­கப்­ப­டு­மாயின் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ளனம் மாற்று வழி­களைக் கையாள தீர்­மா­னித்­துள்­ள­தாக சம்­மே­ளத்தின் முன்னாள் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.
மாடுகளை கூட்­டுக்­குர்­பா­னுக்கு ஏற்­பாடு செய்­துள்ள கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ளனம் இறுதி நேரத்தில் அதற்­கான தடைகள் ஏற்­ப­டு­மாயின் ஆடுகளை வழங்­கு­வ­தற்கு பங்­க­ளிப்பு செய்­யு­மாறு கூட்டுக் குர்­பா­னுக்கு பதிவு செய்­துள்­ள­வர்­களைக் கோரி­யுள்­ளது.

மஸ்ஜித் சம்­மே­ளனம் தற்­போது கூட்­டுக்­குர்­பா­னுக்­காக இணைய வழி (ஒன்லைன்) ஊடாக 28 ஆயிரம் ரூபா­வுக்கு டிக்கட் விற்­பனை செய்­கி­றது. மாடு அறுப்­ப­தற்கு தடைகள் ஏற்­ப­டு­மாயின் மேல­தி­க­மாக 8 ஆயிரம் ரூபா செலுத்தி 35 ஆயிரம் ரூபா­வுக்கு ஆடு குர்பான் கொடுப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யப்­படும் எனக் குறிப்­பிட்­டுள்­ளது.

இன்றேல் செலுத்­தப்­பட்ட பணம் மீளக் கைய­ளிக்­கப்­ப­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு மாடு­களை அறுப்­ப­தற்கு தற்­போது நில­வு­கின்ற சிக்­கல்­களைக் கருத்­திற்­கொண்டு வெளி­மா­வட்­டங்­களில் முஸ்­லிம்கள் வாழு­கின்ற பிர­தே­சங்­களில் எந்­தப்­பா­திப்பும் ஏற்­ப­டா­த­வண்ணம் மாடு­களை அறுப்­பது சாத்­தி­ய­மாக காணப்­ப­டு­வ­தா­கவும் அஸ்லம் ஒத்மான் கூறினார்.

மேலும் குர்­பா­னுக்­காக மாடு­களை அறுக்கும் விட­யத்தில் சம்­பந்­தப்­பட்ட அமைச்சு, திணைக்­களம் மற்றும் அதி­கா­ரிகள் எவ்­வித உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்­பு­க­ளையும் விடுக்காமை முஸ்லிம்கள் மத்தியில் குர்பான் மிருகம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளமுடியாத நிலைமையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.