உழ்ஹிய்யா பிராணிகளை கொண்டுசெல்கையில் தேவையற்ற தாமதங்களை தவிர்த்து விடுவிக்குக

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்

0 208

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் பெருநாள் காலத்தில் குர்­பா­னுக்­கான கால்­ந­டைகள் வாக­னங்கள் மூலம் எடுத்துச் செல்லும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெறும். இந்­நி­லையில் மாடு­களை போக்­கு­வ­ரத்து செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணங்­களிருப்பின் தேவை­யற்ற தாம­தங்­களைத் தவிர்த்து விடு­விக்­கு­மாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்­கி­ர­ம­ரத்ன அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் 2023.06.14 ஆம் திக­தி­யி­டப்­பட்ட ஆர்­ரிஎம் (361) சுற்று நிரு­ப­மொன்று அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ் பெருநாள் காலத்தில் மதக் கட­மை­யான குர்பான் விலங்­குகள் ஆடு, மாடுகள் போக்­கு­வ­ரத்து செய்யும் விட­யத்தில் தற்­போது அமு­லி­லுள்ள மிருக வதைச்­சட்­டத்தின் கீழ் விலக்கு அளிக்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெளஸி மற்றும் நகீப்­மெ­ள­லானா ஆகியோர் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்­கி­ரம ரத்­னவைச் சந்­தித்து வேண்­டுகோள் விடுத்­தனர். இத­னை­ய­டுத்தே எதிர்­வரும் ஜூன் 29 ஆம் திக­தி­வரை மாடு­களை போக்­கு­வ­ரத்து செய்­யும்­போது தேவை­யற்ற தாம­தங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டா­மென பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளையும் வேண்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் கட­மையில் ஈடு­பட்­டி­ருக்கும் அனைத்து பொலி­ஸா­ரையும் அறி­வு­றுத்­தும்­படி பிர­தி­ பொ­லிஸ்மா அதி­பர்கள், வல­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ்மா அதி­பர்கள், மாவட்­டங்­க­ளுக்குப் பொறுப்­பான பொலிஸ் அதி­கா­ரிகள் வேண்­டப்­பட்­டுள்­ளனர்.
குறிப்­பிட்ட சற்று நிரு­பத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்டு ள்ளதா­வது; ‘மிரு­க­வதை தொடர்­பி­லான விதி­மு­றைகள் ஏற்­க­னவே பின்­பற்­றப்­பட்­ட­மை­ போன்று பின்­பற்­றப்­பட வேண்டும்.

மேலும் குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் வேறு மதங்­களின் வைப­வங்­களும் இடம் பெற­வுள்­ளதால் மாடுகள் போக்­கு­வ­ரத்து செய்­யும்­போது சில தடைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டலாம் என்­பது கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. எனவே இது தொடர்பில் தங்­க­ளது விசேட கவனம் செலுத்­தப்­பட்டு ஏதேனும் சம்­ப­வங்கள், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இத்துடன் அறியத் தருகிறேன் என பொலிஸ் அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.