மாடுகளுக்கு தொற்று நோய் பரவல்: உழ்ஹிய்யா விடயத்தில் உடனடியாக உலமா சபை வழிகாட்ட வேண்டும்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திணைக்களத்திற்கும் ஹலீம் எம்.பி. கடிதம்

0 798

(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாட்டில் மாடு­க­ளுக்கு தொற்று நோய் பரவல் அதி­க­ரித்து நெருக்­க­டி­யான நிலை­மை­யொன்று ஏற்­பட்­டுள்ள நிலையில் உழ்­ஹிய்யா விட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மார்க்கத் தீர்ப்பு (பத்வா) ஒன்றை உட­ன­டி­யாக வழங்க வேண்டும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரு­மான அப்துல் ஹலீம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அத்­தோடு, இது­வி­ட­ய­மாக ஏற்­ப­டப்­போகும் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து தவிர்ந்­து­கொள்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் உரிய நேரத்தில் நட­­வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இது விட­ய­மாக அகில இலங்கை ஜம்­இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றிற்கு அவர் இரு­வேறு கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு அனுப்­பிய கடி­தத்தில்,
நாட்டில் பர­வ­லாக மாடு­க­ளுக்கு வைர­ஸினால் பரவும் அம்மை நோய் (Lumpy Skin Disease) இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய மிருக வைத்­தியப் பிரி­வுகள் மூலம் தெரி­விக்­கப்­ப­டு­வதை பொறுப்­புள்ள சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். அத்­தோடு, இந்த நோய்­தொற்றின் விளை­வுகள் பற்­றியும் தெரிந்­து­கொண்­டி­ருப்­பீர்கள்.

இந்­நி­லையில், புனித துல்ஹஜ் மாதத்தை அடை­ய­வி­ருக்­கிறோம். அத்­தோடு, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. இலங்கை முஸ்லிம் மக்கள் உழ்­ஹிய்­யா­வுக்கு தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். உழ்­ஹிய்­யா­வுக்­கான மிரு­கங்­களில் இலங்­கையில் பிர­தா­ன­மாக மாட்டை வழங்­கு­வ­தையே பெரும்­பாலும் நாம் வழ­மை­யாகக் கொண்­டுள்ளோம். நோய்­தொற்று தீவி­ர­மா­கி­யுள்ள நிலையில் மாடு­களை உழ்­ஹிய்­யா­வுக்­காக பயன்­ப­டுத்­து­வ­தா­னது பாரி­ய­வி­ளை­வு­கைள ஏற்­ப­டுத்­தலாம் என்­கிற அச்சம் இருக்­கி­றது.

எனவே, இது தொடர்­பான மார்க்க வழி­காட்டல் அவ­சி­யப்­ப­டு­கின்­றது. எனவே, இது விட­ய­மாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெளி­வான விளக்­கத்தை வழங்­கு­வது காலத்தின் கட்­டா­ய­மாகும். அத்­தோடு, உட­ன­டி­யாக மார்க்கத் தீர்ப்­பொன்றை அறி­வித்து எதிர்­நோக்­க­வி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து சமூ­கத்தை காப்­பாற்ற வழி­வ­குக்க வேண்டும்.

மேலும், இது தொடர்­பாக வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆத் தொழு­கை­ய­டுத்து மக்­க­ளுக்கு தெளி­வூட்டல் வழங்­கு­வ­தற்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முறை­யான வழி­காட்டல் வழங்­கு­வதற்கும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும் என வின­ய­மாக வேண்­டிக்­கொள்­கிறேன்” என ஹலீம் எம்.பி. தெரி­வித்­துள்ளார்.

மேலும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில்,
உழ்­ஹிய்யா தொடர்பில் இத்­த­ரு­ணத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு பல்­வேறு வகை­யிலும் வழி­காட்­டல்­களை மேற்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இருக்­கி­றது. இது தொடர்­பாக கடந்த 6 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற மத விவ­கா­ரங்கள் தொடர்­பான துறைசார் மேற்­பார்வை குழு கூட்­டத்தின் போது பல விட­யங்­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன். மாட­றுப்பு விடயம் குறித்து உரிய அவ­தானம் செலுத்தி நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அத்­தோடு, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மற்றும் நாட்­டி­லுள்ள ஏைனய அமைப்­பு­க­ளுடன் இணைந்து இது குறித்­த­தான மார்க்­கத்­தீர்ப்பை பெற்று மக்­க­ளுக்கு வழி­காட்­டல்­களை வழங்­கு­மாறும் குறிப்­பிட்­டி­ருந்தேன். இது விட­யத்தில் நீங்கள் பொறுப்­புடன் செயற்­ப­டு­வ­தாக கூறி­யி­ருந்­தீர்கள்.

ஆனால், 10 நாட்கள் கடந்தும் இது விட­ய­மாக திணைக்­க­ளத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நட­வ­டிக்­கைகள் என்ன என்­பது பற்­றிய தெளிவு இல்­லாமல் இருக்­கி­றது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இலங்கை முஸ்­லிம்­களின் மத விவ­கா­ரங்கள் தொடர்பில் கூடுதல் கரி­சனை செலுத்தி அக்கறை­யுடன் செயற்­பட வேண்டும். ஏனெனில், உழ்­ஹிய்யா விட­யத்தில் பல பிரச்­சி­னை­களை நாம் கடந்த காலத்தில் சந்­தித்­தி­ருக்­கிறோம். அவற்றை தவிர்ந்­து­கொள்­வ­தற்கு திணைக்­களம் நிர்­வாக ரீதி­யி­லான நட­வ­டிக்­கைக்கு செல்­வது அவ­சி­ய­மா­ன­தாகும்.

குறிப்­பாக மாடு­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் பயங்­க­ர­மான தொற்று நோய் குறித்த விழிப்­பு­ணர்வு மக்­க­ளி­டத்தில் மிக­வும்குறை­வா­ன­தாக இருக்­கின்­றது. எனவே, இது­வி­ட­ய­மாக ஜும்ஆத் தினங்­களில் மக்­களை தெளி­வூட்­டப்­படல் வேண்டும். இதற்­கான துரித நட­வ­டிக்­கையை திணைக்­க­ளமே மேற்­கொள்ள வேண்டும்” என அக்கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இது விடயமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெளிவான விளக்கத்தை கோரி மக்களுக்கு அறியப்படுத்தப்பட வேண்டும். உடனடியாக மார்க்கத் தீர்ப்பொன்றை அறிவிப்பதன் மூலம் இறுதிநேர சிக்கல்களை தவிர்ந்து கொள்ள முடியும். எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக பொறுப்புடன் செயற்பட்டு மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.