திருமலை சண்முகாவில் ஹபாயாவுக்கு தடையில்லை

நீதிமன்றில் அதிபர் தரப்பு உறுதியளிப்பு

0 145

திரு­கோ­ண­மலை சண்முகா கல்­லூ­ரியில் ஆசி­ரி­யைகள் ஹபாயா அணிந்து வருகை தரு­வ­தற்கு தடை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை என பாட­சா­லையின் அதிபர் தரப்பு நீதி­மன்றில் உறு­தி­ய­ளித்து பிரச்­சி­னையை இணக்­க­மாக தீர்த்­துக்­கொண்­டது.

திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரிக்கு தனது கலாச்­சார ஆடை­யான ஹபா­யாவை அணிந்து கொண்டு கட­மை­யேற்கச் சென்ற ஆசி­ரியை பஹ்­மிதா றமீஸ் என்பவரை கட­மை­யேற்க விடாமல் தடுத்­தமை தொடர்பில் பாடா­சலை அதிபர் திரு­மதி. லிங்­கேஸ்­வரி ரவி­ரா­ஜ­னுக்கு தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு கடந்த திங்­கட்­கி­ழமை திரு­கோ­ண­மலை நீதவான் நீதி­மன்றில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

எதிர்­கா­லத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்­வித பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என்றும் கூறி நல்­லெண்ண அடிப்­ப­டையில் வழக்­கு­களை இணக்­க­மாக முடித்­துக்­கொள்ள விரும்­பு­வ­தாக சண்­முகா வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் தரப்­பா­னது திறந்த நீதி­மன்றில் முன்­மொ­ழிந்­தி­ருந்­தது. இது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட ஆசி­ரி­யை­யோடு கலந்­தா­லோ­சித்த ஆசி­ரி­யையின் சட்­டத்­த­ர­ணிகள் நிபந்­த­னை­களை அதி­பரும் பாட­சாலை சமூ­கமும் ஏற்பின் இணக்­க­மொன்­றுக்கு வர சாத்­தி­ய­மி­ருப்­ப­தாக கூறி அதனை நீதி­மன்ற வழக்­கேட்­டிலும் பதிவு செய்­தி­ருந்­தனர்.

இதன்­படி, இனி எக்­கா­லத்­திலும் சண்­முகா கல்­லூ­ரிக்கு கற்­பிக்க செல்­கின்ற முஸ்லிம் ஆசி­ரி­யைகள் தமது ஆடை­யாக அபா­யாவை அணி­வ­தற்கு எவ்­வித தடங்­கல்­களும் ஏற்­ப­டுத்­தப்­பட மாட்­டாது என்று பாட­சாலை அதிபர் வெளிப்­ப­டை­யாக உத்­த­வ­ரா­த­ம­ளிக்க வேண்டும்.

05 வரு­டங்­க­ளாக ஆசி­ரியை பஹ்­மிதா றமீ­ஸுக்கு வழங்­கப்­ப­டாமல் தடுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற சம்­பள உயர்வு, பதவி உயர்வு என்­ப­வற்றை பெறு­வ­தற்­கான வரு­டாந்த மீளாய்வு படிவம் உட்­பட அனைத்து ஆவ­ணங்­க­ளையும் சண்­முகா வித்­தி­யா­லய அதிபர் உடனே கையெ­ழுத்­திட்டு வழங்க வேண்டும்.

ஆசி­ரியை பஹ்­மிதா சண்­முகா வித்­தி­யா­ல­யத்­திற்கு மீளவும் முறை­யாக நிய­மனம் பெறு­கின்ற விடத்து அபாயா ஆடை­யுடன் தனது ஆசி­ரிய கட­மை­களை மேற்­கொள்ள எவ்­வித ஆட்­சே­ப­னை­க­ளையும் தனக்கு இல்­லை­யென்ற உத்­த­ர­வா­தத்­தினை இந்­நீ­தி­மன்றில் அளிக்க வேண்டும்.

ஆசி­ரி­யை பஹ்­மி­தா­வுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட தீங்­குகள் தொடர்பில் தமது மன­வ­ருத்­தத்­தினை மன்றில் வெளிப்­ப­டை­யாக பதிவு செய்ய வேண்டும் என சட்­டத்­த­ர­ணிகள் தமது வாதி சார்பில் முன்­வைத்­தனர்.

பாட­சாலை அதிபர் சார்பில் முன்­னி­லை­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன், இந்­நி­பந்­த­னை­களை உள்­வாங்கி தனது சமர்ப்­ப­ணத்­தினை செய்­த­துடன் அதில் விசே­ட­மாக இலங்­கையில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் தங்­க­ளது கலாச்­சார ஆடை­யாக ஹபா­யாவை அணி­வ­தற்கு சட்­ட­ரீ­தி­யாக அவர்­க­ளுக்கு உரி­மை­யுள்­ளது என்­ப­தனை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அவர் தனது சமர்ப்­ப­ணத்தில் ‘இன்­றி­ருக்­கின்ற சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக எவரும் ஹபாயா அணிந்து வரு­வ­தற்­கான உரிமை உண்டு என்­ப­தையும் நாங்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்றோம். அதில் எந்­த­வி­த­மான தயக்­கமோ, பின்­வாங்­கலோ கிடை­யாது’ என்று கூறி அதனை வழக்­கேட்­டிலும் பதிவு செய்­தி­ருந்தார்.

மேலும் அன்­றைய சம்­பவம் கல்­லூரி வளா­கத்தில் நடந்­தி­ருப்­பது வருந்­தத்­தக்க விடயம் என்றும் இவ்­வ­ழக்கு இணக்­க­மாக தீர்க்­கப்­ப­டு­மி­டத்து பஹ்­மிதா ஆசி­ரியை தனது சம்­பள உயர்­வுக்­கான ஆவ­ணங்­களை சமர்ப்­பிக்­கு­மி­டத்து அவற்­றிற்கு உட­ன­டி­யாக சிபா­ரிசு கொடுக்­கப்­படும் என்ற உறு­தி­மொ­ழி­யையும் அதிபர் சார்­பாக வழங்­கி­யி­ருந்தார். இவ்­விரு சமர்ப்­ப­ணங்­க­ளையும் பதி­வு­செய்த நீதி­மன்றம் அவற்­றை­யேற்று தனது கட்டளையினை ஆக்கியதுடன் அவற்றினடிப்படையில் இச்சம்பவத்தோடு தொடர்புபட்ட 03 வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா சார்பில் சட்டத்தரணி ஏ.எம்.சாதிரின் வழிகாட்டலில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான ஹஸ்ஸான் றுஷ்தி, றதீப் அகமட் மற்றும் எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர் ஆஜராயிருந்ததுடன் தவிசாளர் சட்டமாணி றாஸி முகம்மதும் மன்றில் பிரசன்னமாயிருந்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.