சூடானுக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது சவூதி

0 157

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்­டத்து இள­வ­ரசர் பிர­த­மர்­ இ­ள­வ­ரசர் முஹம்­மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் ஆகியோர், சூடான் மக்­க­ளுக்­காக, 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் மதிப்­பி­லான பல்­வேறு மனி­தா­பி­மான உத­வி­க­ளை­ வ­ழங்­கு­மாறும், அம்­மக்கள் தற்­போது அனு­ப­வித்து வரும் இன்­னல்­களின் விளை­வு­களைத் தணிக்­க “­சாஹிம்” தளத்தின் மூலம் ஒரு பாரிய பிர­சா­ரத்தை ஏற்­பாடு செய்­யு­மாறும், மன்னர் சல்­மான்­ ம­னி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ரண மையத்­திற்கு உத்­த­ர­விட்­டுள்­ளனர்.

அரச நிர்­வாக மையத்தின் ஆலோ­ச­கரும், பொது மேற்­பார்­வை­யா­ள­ரு­மான டாக்டர். அப்­துல்லா பின்­அப்துல் அசீஸ் அல்-­ரபீஹ், இந்த உத­வி­யா­னது இரண்டு புனித மசூ­தி­களின் பாது­கா­வலர் மற்­றும்­பட்­டத்து இள­வ­ரசர் ஆகி­யோரின் உத்­த­ர­வுக்­க­மைய, சகோ­தர சூடா­னிய மக்­க­ளுக்கு ஆத­ர­வா­க­நிற்­கவும், அவர்கள் எதிர்­கொள்ளும் கடி­ன­மான நெருக்­க­டியின் விளை­வு­களைத் தணிப்­ப­தற்­கு­மா­க­வ­ழங்­கப்­ப­டு­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­தினார்.

அரச தலை­மைத்­து­வத்தின் பணிப்­பு­ரை­க­ளுக்­க­மைய, சூடான் குடி­ய­ரசில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­கு ­நி­வா­ரணம், மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் மருத்­துவ உத­விகள் வழங்­கப்­படும் என்றும், உல­கின்­ எப்­ப­கு­தி­யி­லி­ருந்­தாலும் இன்­னல்­படும் மக்­க­ளுக்கு உத­வுவ முன்­வ­ரு­வது போல் இவ்­வு­த­வி­க­ளை­ வ­ழங்­கு­வ­தற்­காக அனு­மதி வழங்­கிய சவூ­தியின் தலை­மைத்­து­வத்­திற்கும் அவர் தனது நன்­றி­க­ளை­தெ­ரி­வித்­துக்­கொண்டார்.

இதே­வேளை, சவூதி அரே­பிய அர­சா­னது சூடானில் சிக்­கித் ­த­விக்கும் சகோ­தார மற்றும் நட்பு நாட்­டுப்­பி­ர­ஜை­களை வெளி­யேற்றும் முயற்­சியின் தொடர்ச்­சி­யாக, அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட யமன் ­மற்றும் சூடான் நாடு­களைச் சேர்ந்த 453 பேர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று சவூதி அரே­பி­ய­மன்­ன­ருக்குச் சொந்­த­மான “அபஹா” மற்றும் “ரியாத்” என்ற கப்­பல்கள் மூலம் ஜெத்தா நக­ரை­வந்­த­டைந்­தனர். அதே­வேளை சவூதி அரே­பிய வான் படைக்குச் சொந்­த­மான மூன்று விமா­னங்­கள்­மூலம், சூடான், லெபனான், இந்­தோ­னே­ஷியா, பாக்­கிஸ்தான், பங்­க­ளாதேஷ், கென்யா, ரஷ்­யா­ மற்றும் அமெ­ரிக்கா போன்ற நாடு­களை சேர்ந்த 690 பேர்­களும் ஞாயிற்­றுக்­கி­ழமை ஜெத்தா நக­ரை ­வந்­த­டைந்­தனர்.
அவர்கள் தத்­த­மது நாடு­க­ளுக்குப் புறப்­ப­டு­வ­தற்குத் தயா­ராகும் வகையில் அவர்­க­ளுக்­குத்­தே­வை­யான அனைத்து அடிப்­படை வச­தி­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுப்­பதில் சவூதி அரே­பி­யா­ஆர்வம் காட்டி வரு­வ­தாக இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி உறுதிப்படுத்தினார்.

வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 110 நாடுகளைச் சேர்ந்த 8498 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 278 சவூதி பிரஜைகளும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 8220 பேரும் அடங்குவர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.