புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் முஸ்லிம்களின் பலத்தை சிதைக்கிறது

பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்கிறார் அமைச்சர் நஸீர்

0 159

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்­ளூ­ராட்சி மன்ற எல்லை நிர்­ணய அறிக்கை முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தைக் குறைக்கும் வகையில் அல்­லது முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை பலத்தைச் சிதைக்கும் வகை­யிலே அமைந்­துள்­ளது. இதில் சந்­தேகம் நில­வு­கி­றது. பாரிய ஆபத்­துக்கள் உள்­ளன.

இவ்­வா­றாக முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால சவால்­களை வெற்­றிக்­கொள்­வ­தற்கு சமூக பிர­தி­நி­திகள் ஒன்­றி­ணைய வேண்டும். ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென சுற்­றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள சம­கால சவால்கள் மற்றும் அவற்றை எவ்­வாறு வெற்றி கொள்­வது என்­பது தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­வித்தார். அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால சவால்­களை வெற்றி கொள்­வ­தற்கு பொது­வான வரை­பொன்று தயா­ரிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. தனித்­த­னி­யாகச் செயற்­பட்டு சமூக உரி­மை­களை வெற்றி கொள்ள முடி­யா­தென்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

சிறு­பான்மை சமூ­கங்­களில் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு ஜனா­தி­பதி ஆர்­வ­முடன் செயற்­ப­டு­கிறார். அதனால் முஸ்­லிம்­களின் இழக்­கப்­பட்ட காணி­களை மீளப்­பெ­றவும், ஏனைய பிரச்­சி­னைகள் குறித்தும் பொது­வான வரை­பொன்று தயா­ரிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. வடக்கில் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் பறி­போன காணிகள் திட்­ட­மிட்டு கிழக்கில் அப­க­ரிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை மீளப்­பெ­ற­
வேண்­டி­யுள்­ளது. இதற்கு அர­சியல் தலை­மைகள் பதில் சொல்லி ஆக­வேண்டும்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 27 வீத­மான முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். இம்­மா­வட்­டத்தில் 14 பிர­தேச செய­லக பிரி­வு­களில் 4 பிரி­வு­க­ளிலே முஸ்லிம் சனத்­தொகை பெரும்­பான்­மை­யாக உள்­ளது. இச்­செ­ய­லக பிரி­வு­களில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு 1.3 வீத­மான காணி­களே உள்­ளன. இவையும் திணிக்­கப்­பட்டே இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதே நிலை­மையே அம்­பாறை, திரு­மலை மற்றும் வடக்கின் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் நில­வு­கி­றது.

முஸ்லிம் சமூ­கத்தின் இவ்­வா­றான சம­கால சவால்கள் தொடர்பில் சமூ­கப்­பி­ர­தி­நி­தி­க­ளிடம் ஒரு­மித்த கருத்து நில­வு­வது. அவ­சியம் முஸ்லிம் பிர­தி­நி­திகள் போதிய ஆவ­ணங்­க­ளுடன் ஜனா­தி­ப­தியை சந்­தித்து தீர்வு பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.