நோன்பு பெருநாள் காலத்தில் அக்குறணை பகுதிக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

கண்டி மாவட்டம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

0 177

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ரமழான் இறு­தி நோன்புப் பெருநாள் காலப்­ப­கு­தியில் அக்­குற­ணையில் குண்­டுத்­தாக்­குதல் ஒன்று நடத்­தப்­ப­டலாம் என அரச புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கிடைத்­துள்­ள­தை­ய­டுத்து கண்டி மாவட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் இது தொடர்பில் விழிப்­பா­கவும், எச்­ச­ரிக்­கை­யா­கவும் இருக்­கும்­படி பொலி­ஸா­ரினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ளன.
கண்டி மாவட்­டத்­தி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அந்­தந்த பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் நேரில் சென்றும், தொலை­பேசி மூலமும் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்­ளனர்.

குறிப்­பிட்ட காலப்­ப­கு­தியில் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­கை­தரும் அறி­மு­க­மில்­லா­த­வர்கள், புதி­ய­வர்கள் தொடர்பில் விழிப்­பாக இருக்­கும்­படி பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பொலி­ஸாரால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். ஏதும் சந்­தேகம் நில­வினால் உட­ன­டி­யாக பொலிஸ் நிலை­யத்தைத் தொடர்பு கொள்ளும் படியும் கோரப்­பட்­டுள்­ளனர்.

மேலும் பய­ணப்­பொ­திகள், பார்­சல்கள் தொடர்பில் கவனம் செலுத்­தும்­ப­டியும் அவ்­வாறு பய­ணப்­பொ­தி­க­ளுடன் வரு­ப­வர்­களை சோதனை செய்­யு­மாறும் வேண்­டப்­பட்­டுள்­ளது. கிடைக்­கப்­பெற்­றுள்ள உள­வுத்­த­க­வல்­க­ளின்­படி குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­களை தவிர்ப்­ப­தற்கும், சந்­தேக நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­குமே இந்த ஏற்­பா­டுகள் அவ­சியம் எனவும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பொலி­ஸா­ரினால் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

சந்­தே­கத்­துக்­கி­ட­மான வாக­னங்கள் பள்­ளி­வாசல் வளா­கத்­துக்குள் அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது எனவும் நிறுத்தி வைப்­ப­தற்கு அனு­மதி வழங்கக் கூடா­தெ­னவும் பொலிஸார் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர்.

கண்டி மாவட்ட மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னமும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை இக்­கா­ல ­கட்­டத்தில் விழிப்­புடன் செயற்­ப­டு­மாறு கோரி­யுள்­ளது.

பொலி­ஸாரின் அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்றி அனர்த்­தங்­களைத் தவிர்ப்­ப­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் கண்டி மாவட்ட மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் கருத்து தெரி­விக்­கையில், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு ஒவ்வோர் ஏப்ரல் மாதமும் கண்டி மாவட்ட மஸ்ஜித் நிர்­வா­கங்கள் இவ்­வா­றான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது வழக்­க­மாகும். ஆனால் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் புல­னாய்வுத் தக­வலின் பின்பு இவ்­வ­ருடம் இவ்­வி­வ­கா­ரத்தில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது என்றார்.

இதே­வேளை கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நேற்று அக்­கு­ற­ணை­ அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு நிலை­மைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­ய­தாக அக்­கு­றணை மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் செய­லாளர் இர்பான் காதர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அக்­கு­ற­ணைப் ­ப­கு­திக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தா­கவும் அவர் உறு­தி­ய­ளித்துள்ளார். அக்­கு­ற­ணையில் சுமு­க­மான நிலைமை நில­வு­வ­தாக அங்­கி­ருந்து வெளி­வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மேல­திக பொலிஸ் குழுக்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­துடன் பொலி­ஸாரின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க இரா­ணு­வத்­தி­ன­ருமும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணு­வப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் ரவி ஹேரத் தெரி­வித்தார்.

வத்­தே­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மட­வளை, உட­த­ல­வின்ன போன்ற பகு­தி­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வத்­தே­கம பொலிஸார் நேரில் சென்று அவ­தா­ன­மாக செயற்­பா­டு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அத்­தோடு தெல்­தோட்டை பிர­தேச பள்­ளி­க­ளுக்கு கலஹா பொலி­ஸாரும், கம்­பளை பகு­தி­யி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு கம்­பளை பொலி­ஸாரும் சென்று பாது­காப்பு தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்­ளனர்.

நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அஸர் தொழு­கையின் பின்பு அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தந்த கண்டி உத­வி­ பொலிஸ் அத்­த­யட்சர் மற்றும் அல­வத்­து­கொட பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி என்போர் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளனர்.

குண்­டு­தாக்­குதல் சம்­ப­வ­மொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக பாது­காப்பு உளவுப்­பி­ரி­வி­ன­ருக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளிடம் தெரி­வித்­துள்­ளனர். அத்­தோடு மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்­த­ரப்­பினர் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர் எனவும், தேவை­யேற்படின் வீதித்­த­டை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த பாது­காப்பு தரப்­பி­னரால் முடிந்த ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தா­கவும் ஊர் மக்கள் தங்­க­ளது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளு­மாறும் வேண்­டிக்­கொண்­டனர்.

மேலும் மோட்டார் சைக்­கிள்கள் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் பய­ணிக்­கும்­போது பாது­காப்புத் தரப்­பினர் நிறுத்­தும்­படி உத்­த­ர­விட்டால் அதன்­படி நிறுத்­தப்­ப­டா­விட்டால் துப்­பாக்­கிச்­சூடு மேற்­கொள்­வ­தற்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது எனவும் பொலிஸ் அதி­கா­ரிகள் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளிடம் தெரி­வித்­தனர்.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரு­கை­தரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பரி­சோ­தனை செய்­யப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் பொலிஸார் வேண்­டிக்­கொண்­டனர்.

அம்­பி­யூலன்ஸ் வண்டி மற்றும் டாக்­டரை தயார் நிலையில் வைத்­துக்­கொள்­ளு­மாறும் பொலிஸார் வேண்­டுகோள் விடுத்­தனர்.

பொலி­ஸாரின் வேண்­டு­கோ­ளி­னை­ய­டுத்து அக்­கு­றணை மஸ்­ஜி­து­களின் சம்­மே­ளன நிர்­வா­கிகள் அவ­சர கூட்­ட­மொன்­றினை நடத்தி மக்­களின் பாது­காப்பு கருதி பின்­வரும் தீர்­மா­னத்தை மேற் கொண்­டுள்­ள­தா­கவும் மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி அஸ்மி பாரூக் தெரி­வித்தார்.

எதிர்­வரும் சில நாட்­க­ளுக்கு மக்­களின் பாது­காப்பு கருதி, அக்­கு­ரணை மஸ்­ஜி­துகள் சம்­மே­ளனம் சில ஒழுங்­கு­களை அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ் ஒழுங்கு விதி­களை கடைப்­பி­டிக்­கு­மாறு பொது­மக்கள் வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

  • ஒவ்­வொ­ரு­வரும் அவ­ர­வ­ரது ஊர் பள்ளிவாசல்­களில் தொழுது கொள்­ளுதல்.
  • பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அந்­தந்த ஊர் மக்கள் மாத்­திரம் சமு­க­ம­ளிப்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளுங்கள்.
  • மஸ்­ஜி­து­க­ளுக்கு அருகில் வாக­னங்கள் நிறுத்தி வைக்க அனு­மதி வழங்­கா­தி­ருத்தல்.
    அக்­கு­ரணை பஸார் மஸ்­ஜித்­களில் பெண்கள் இரவுத் தொழு­கைக்கு வரு­வதை இயன்­ற­ளவு தவிர்த்துக் கொள்­ளுதல்
  • அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு மாத்­திரம் நக­ருக்கு வருதல்.
    பஸா­ரி­லுள்ள கடை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள, கடை உரி­மை­யா­ளர்கள் தேவை­யான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளுதல்.
  • இளை­ஞர்கள் ஊரில் தேவை­யற்ற வகையில் மோட்டார் சைக்­கிள்­களில் சுற்­றித்­தி­ரி­வதை முற்­றா­கத்­த­விர்த்துக் கொள்­ளுதல் நன்று.
  • குறிப்பிட்ட விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரிமாறுவதை முற்றாகத் தவிர்த்தல், தங்களது குடும்பத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
  • ஊரில் சந்தேகத்திக்கிடமாக யாராவது நடமாடுவதைக் கண்டால், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தல்.
  • குறிப்பிட்ட அறிவித்தல்களை ஊர் ஜமா அத்தர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமெனவும் மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் இதனைக் கண்காணிக்க வேண்டுமெனவும் வேண்டப்படுகின்றனர்.

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.