சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்கும் புதிய எல்லை நிர்ணயம்

0 272

ஏ.ஆர்.ஏ.பரீல்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இன்று கானல் நீரா­கி­விட்­டது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­ட­மாட்­டாது. அடுத்த வருட முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி தேர்­தலே நடத்­தப்­படும் என்­பது ஜனா­தி­ப­தி­யி­னாலும் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளாலும் சமூக மயப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது.

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டிய உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்தல், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் எதிர்­வரும் 25 ஆம் திகதி நடாத்­தப்­படும் என அறி­விப்புச் செய்­துள்­ள­போதும் அதுவும் கானல் நீரே.

பல்­வேறு கார­ணங்­க­ளைக்­கூறி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பின் தள்­ளப்­பட்ட நிலையில் தேர்­தலை பிற்போடு­வ­தற்கு அர­சுக்கு புதிய காரணம் ஒன்று கைகூ­டி­யுள்­ளது. அதுவே உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான புதிய எல்லை நிர்­ணய அறிக்­கை­யாகும். புதிய எல்லை நிர்­ணய அறிக்­கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா என்போர் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அறிக்கையை மீளாய்வு செய்து மாற்று வழிகளை கையாளுமாறு கோரியிருந்தனர்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ண­யப்­ப­ணிகள் நிறை­வு ­ப­டுத்­தப்­பட்டு கடந்த பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திகதி அறிக்கை பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­ வேண்டும் என்றே எல்லை நிர்­ண­யக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­போது காலக்­கெடு வழங்­கப்­பட்­டது. என்­றாலும் திட்­ட­மிட்ட தினத்தில் அறிக்கை கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. தொடர்ந்தும் பின் தள்­ளப்­பட்­டது. தற்­போது அறிக்கையின் நகல் பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டுள்ளது. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கை­யையும் அவற்றின் உறுப்­பினர் எண்­ணிக்­கை­யையும் 50 வீதத்தால் குறைக்கும் நோக்­கு­டனே ஜனா­தி­பதி எல்­லை­நிர்­ணய குழு­வொன்றை நிய­மிப்­ப­தற்கு உத்­த­ர­விட்டார். நாட்டின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பு வீழ்ச்­சி­ய­டைந்­த­மையால் சுமார் 8500 உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களை தொடர்ந்தும் கொண்­டி­ருக்க முடி­யாது. இந்த எண்­ணிக்­கையை 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே புதிய எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

சிறு­பான்மை உறுப்­பினர்
தெரி­வுக்கு ஆப்பு
இதே­வேளை அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போடும் செயற்­பாட்டில் இருப்­பதால் ஏற்­க­னவே அறி­விப்புச் செய்த தேர்­தலை இரத்துச் செய்து விட்டு உறுப்­பினர் தொகையை அரை­வா­சி­யாகக் குறைக்­கின்ற புதிய எல்லை நிர்ணயத்தின் அடிப்­ப­டை­யி­லான தேர்­தலை அறி­விப்புச் செய்­வ­தற்கும் வாய்ப்­பி­ருக்­கி­றது.

எல்லை நிர்ணய அறிக்கையின் தக­வல்­களின் அடிப்­ப­டையில் நோக்­கினால் சிறு­பான்மை சமூ­கத்­தினர் பெரும் எண்­ணிக்கையில் வாழ்ந்து வரும் வட்­டா­ரங்கள் புதிய எல்லை நிர்­ண­யத்தின் மூலம் துண்­டா­டப்­பட்டு அந்த வட்­டா­ரங்கள் பெரும்­பான்மை சமூ­கத்தின் பிடிக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. தென்­னி­லங்­கையில் இது பர­வ­லாக நடந்­தி­ருக்­கி­றது. பொது­வாக நாடு பூரா­கவும் இந்­நி­லைமை திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வடக்கு, கிழக்கு மற்றும் மத்­திய மாகா­ணத்­திலும் இதே நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் வகையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளதே? ஏன் இந்­தப்­பா­கு­பாடு? என விடி­வெள்ளி மஹிந்த தேசப்­பி­ரி­ய­விடம் வின­வி­யது. அவர் இதற்கு மறுப்பு தெரி­விக்­கிறார்.

பொது மக்­களின் அர­சியல் கட்­சி­களின் சமூக அமைப்­பு­களின் ஆலோ­ச­னை­களும், கருத்­து­களும் கோரப்­பட்டன. ஆலோ­ச­னை­களும், சிபா­ரி­சு­களும் எழுத்து மூலம், கொழும்பு, நாரா­ஹேன்­பிட்டி, நில அளவைத் திணைக்­க­ளத்தில் இயங்கி வரும் எல்­லை­நிர்­ணய தலை­மைக்­ கா­ரி­யா­ல­யத்­துக்கு அனுப்பி வைக்­கும்­படி கோரப்­பட்­டது. கிடைக்­கப்­பெற்ற ஆலோ­ச­னைகள் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட்­டன. பெரும்­பாலான பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இவ்­வா­றான ஆலோ­ச­னைகள் கிடைக்­க­வில்லை என மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

மாவட்ட ரீதியில் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் அர­சாங்க அதி­பர்­களின் தலை­மையில் உப குழுக்கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அக்­கு­ழுக்கள் அந்­தந்த மாவட்­டங்­களின் எல்லை நிர்­ணய பணி­களை முன்­னெ­டுத்தது. அக்­கு­ழுவில் நில அள­வைத்­தி­ணைக்­களம், தேர்தல் திணைக்­களம், புள்ளி விப­ரத்­ தி­ணைக்­களம், உள்­ளூ­ராட்சி திணைக்­களம், என்­ப­ன­வற்றின் அதி­கா­ரிகள் உள்­ள­டங்கி­யி­ருந்­தனர். மாவட்ட குழுக்­களின் எல்லை நிர்­ணய அறிக்­கைகள் தலை­மைக் ­கா­ரி­யா­ல­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. அவை அங்கு பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு எல்லை நிர்­ண­யத்தில் பிரச்­சி­னைகள் இருந்தால் அவை நிவர்த்தி செய்­யப்­பட்­டன. குடி­சன மதிப்­பீட்டு திணைக்­களம் 2020 ஆம் ஆண்டு மேற்­கொண்ட மதிப்­பீட்­ட­ள­வி­லான சனத்­தொகை தர­வு­களை கவ­னத்திற் கொள்­ளு­மாறு மாவட்ட எல்லை நிர்­ண­யக்­கு­ழுக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

திட்­ட­மிட்ட செயற்­பாடு
மஹிந்த தேசப்­பி­ரிய தலை­மை­யி­லான எல்லை நிர்­ண­யக்­குழு, மாவட்ட ரீதியில் அர­சாங்க அதி­பர்­களின் தலை­மையில் குழுக்­களை நிய­மித்து இந்தப் பொறுப்­பினை அக்­கு­ழுக்­க­ளி­டமே கைய­ளித்­தி­ருந்­தது. மாவட்ட ரீதி­யி­லான அதி­கா­ரி­களே சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் வகையில் அல்­லது குறைக்கும் வகையில் எல்லை நிர்­ண­யத்தை பூர்த்தி செய்­துள்­ளனர். இந்த அறிக்­கைகள் கொழும்­பி­லுள்ள எல்லை நிர்­ணய தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்­துக்கு அனுப்பி வைத்த பின்­ன­ரா­வது தலை­மைக்­குழு அறிக்­கை­களை ஆராய்ந்து பரீ­சி­லனை செய்­தி­ருக்க வேண்டும்.

ஆனால் நாடு­பூ­ரா­கவும் இது வரை இருந்­து­வந்த சிறு­பான்மை பிர­தி­நி­தித்­துவம் திட்­ட­மிட்டு இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சி­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை 50 வீத­மாகக் குறைக்கும் நோக்­கிலே எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டது என்பதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் முற்­றாக சிறு­பான்மை இனப்­பி­ர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் வகையிலான எல்லை நிர்­ணயம் பல்­வேறு சமூகப் பிரி­வுகள் வாழும் நாட்­டுக்குப் பொருத்­த­மற்­ற­தாகும். எல்லை நிர்­ண­யக்­கு­ழுவின் தலைவர் இவ்­வி­ட­யத்தில் கரி­சனை கொள்ள வேண்டும். மாறாக பெரும்­பா­லான பகு­தி­க­ளி­லி­ருந்து ஆலோ­ச­னை­களும், கருத்­து­களும் கிடைக்­க­வில்லை எனத்­தெ­ரி­விப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும்.

சிறு­பான்மை பிர­தி­நி­தித்­துவம் புதிய எல்லை நிர்­ண­யத்தின் மூலம் இல்­லா­ம­லாக்­கப்­பட்­ட­மைக்கு உதா­ர­ண­மாக கண்டி மாவட்­டத்தின் பாத்­த­தும்­பறை பிர­தேச சபையைக் குறிப்­பி­டலாம். பாத்­த­தும்­பறை பிர­தேச சபையில் 32 ஆக இருந்த பிர­தி­நி­தித்­துவம் தற்­போது 9 ஆகக் குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அங்­குள்ள வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை 60,965 இவர்­களில் 14,000 பேர் (உட­த­ல­வின்ன, மட­வளை) முஸ்­லிம்கள். மற்றும் சுமார் 1000 பேர் தமி­ழர்கள். மொத்த வாக்­காளர் தொகையில் இது 25 சத­வீதம். இது­வரை காலம் ஒவ்­வொரு முறையும் சபையில் ஐந்து அல்­லது 6 பேர் பிர­தி­நி­தித்­துவம் பெற்று வந்­துள்­ளனர். தற்­போது புதிய எல்லை நிர்­ண­யத்­தின்­படி இச்­சபை ஒரு சிறு­பான்மை உறுப்­பி­ன­ரைக்­கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

இந்தப் பிர­தேச சபையில் முஸ்­லிம்கள் பெரு­வா­ரி­யாக வாழ்கின்ற கிராம சேவகர் பிரி­வுகள் முறையே 611, 612, 637, 638, 639 ஆகும். இப்­பி­ரி­வுகள் அனைத்து கிராம சேவகர் பிரி­வு­க­ளுடன் தற்போது இணைக்­கப்­பட்­டுள்­ளன.

611, 612 பிரி­வுகள் மற்றும் 637, 638 பிரி­வுகள் ஏற்­க­னவே ஒன்­றாக இணைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. பாத்­த­தும்­பறை பிர­தேச சபையில் குறைந்­தது மூன்று முஸ்லிம் வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­க ­வேண்டும். அவை புவி­யியல் ரீதி­யாக ஒரே நிலத்­தொ­ட­ருடன் இயல்­பா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தற்­போது அமைக்­கப்­பட்­டி­ருக்கும் வட்­டா­ரங்­களில் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் சித­ற­டிக்­கப்­பட்­டி­ருப்­பதை பின்­வரும் வட்­டார பட்­டி­ய­லி­லி­ருந்து தெளி­வாக அவ­தா­னிக்க முடியும்.

பாத்­த­தும்­பற பிர­தேச சபை
புதிய வட்­டா­ரங்கள்
மீகம்­மன: 594, 601, 602, 603, (612)
பொல்­கொல்ல: 609, 610, (611), 615.
அபே­சிங்க கம: 635, 636, (637), 639.
மட­வள: 604, (638), 640, 641.
பிடிேய கெதர: 595, 596, 597, 634, 633, (639), 642, 643, 644, 645.
வத்­தே­கம: 594, 598, 599, 600, 620, 621, 622.
பர­ண­கம: 623, 624, 625, 627, 628, 631, 632.
கஹல்ல : 605, 606, 608, 613, 614.
அப­தென்ன: 616, 617, 618, 619, 629, 630. முதல் ஐந்து வட்­டா­ரங்­க­ளுடன் முஸ்லிம் கிராம சேவகர் பிரி­வுகள் இணைக்­கப்­பட்டு முஸ்லிம் பிரதி நிதித்­துவம் அப்­பி­ரி­வு­களில் சிறு­பான்மை ஆக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­த­ம­ரிடம் கோரிக்கை
எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை நாடெங்கும் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்தும் அல்­லது குறைக்கும் வகை­யிலே அமைந்­துள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யூதீன் மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா என்போர் பிர­த­மரும், விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ருமான தினேஷ் குண­வர்­த­ன­விடம் தெரி­வித்­துள்­ளனர். அத்­தோடு திட்­ட­மிட்­ட­படி குழுவின் அறிக்­கையை வெளி­யி­ட­ வேண்­டா­மெ­னவும் கோரி­யுள்­ளனர்.

எல்லை நிர்­ணய அறிக்கை சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தைக் குறைக்கும் வகை­யிலே அமைந்­துள்­ளது. இதனை யாரிடம் முறை­யிட வேண்­டு­மென நாம் எல்லை நிர்­ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­விடம் வின­வினோம்.

“முறைப்­பா­டு­களை விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரிடம் முன்­வைக்­கலாம். முறை­ப்பா­டுகள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு எல்லை நிர்­ணய மீளாய்வு குழு­வொன்­றினை நிய­மிக்கும் அதி­காரம் அமைச்­ச­ரி­டமே உள்­ளது’’ என அவர் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் வேண்­டு­கோ­ள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் எல்லை நிர்ணயங்களை மாற்றியமைப்பதற்கு காலம் செல்லலாம்.

இந்தத் தாம­தத்தை நோக்­கியே இது­வரை அரச தரப்பும் நகர்­வு­களை முன்­னெ­டுத்­துள்­ளது எனக் குறிப்­பி­டலாம். ஏனென்றால் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்பு நடத்­தா­ம­லி­ருப்­பதே ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் திட்­ட­மாகும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர்
ரவூப் ஹக்கீம்
‘உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் புதிய எல்லை நிர்­ணயம் வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மல்ல ஏனைய பகு­தி­க­ளிலும் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­தியுள்ளது. அதனால் அவ­ச­ரப்­பட்டு அறிக்­கை தொடர்பில் செயற்பட ­வேண்டாம் என நாம் பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறோம். எமது கோரிக்­கைக்கு பிர­தமர் செவி­சாய்ப்பார் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ்ஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கை­யையும் உறுப்பினர் எண்ணிக்கையையும் 50 வீதத்தால் குறைப்­ப­தற்­கா­கவே புதிய எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மா­கவும் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் உள்­ளூ­ராட்சி சபை­களின் உறுப்­பினர் எண்­ணிக்­கையை 50 வீதத்தால் குறைப்­பதைத் தவிர்த்து 1/3 வீத­மாக குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும்­ப­டியும் அதன் அடிப்­ப­டையில் எல்லை நிர்­ண­யத்தை அமைத்­துக்­கொள்­ளும்­ப­டியும் பிர­த­ம­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கிறோம்.

2/3 பிர­தி­நி­தித்­துவம் உள்­வாங்­கப்­படும் வகையில் எல்லை நிர்­ணயம் அமைந்தால் இப்­பி­ரச்­சி­னைக்கு ஓர­ளவு தீர்வு காணலாம். அத்­தோடு வட்­டார மற்றும் விகி­தா­சார அடிப்­ப­டை­யி­லான கலப்பு முறை­யி­லன்றி பழைய தேர்தல் முறையின் கீழ் (விகி­தா­சார முறை) உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடாத்தும் படியும் கோரி­யுள்ளோம். எல்லை நிர்­ணயம், மற்றும் உள்­ளூ­ராட்­சி­ மன்­றத்­தேர்தல் எல்லா சமூ­கங்­க­ளுக்கும் நியாயம் கிட்டும் வகையில் அமைய வேண்டும்.

சபையில் ஒரு கட்­சியின் பெரும்­பான்­மையை ஸ்திரப்­ப­டுத்திக் கொள்ளும் வகையில் தேர்தல் அமைய வேண்டும். இல்­லையேல் ஒரு கட்­சிக்­குள்­ளேயே பிரச்­சி­னைகள் ஏற்­படும். எங்கள் கட்­சிக்­குள்ளும் கடந்த காலங்­களில் பிரச்­சினை ஏற்­பட்­டது. இவ்­வா­றான நிலை­மைகள் உரு­வா­காத வண்ணம் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இயங்க வேண்டும்.
எல்லை நிர்­ணய அறிக்கை விவ­கா­ரத்தில் சில ஏற்­பா­டு­களைச் செய்து கொள்­ளலாம் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. எமது கோரிக்­கைகள் சாத்­தி­யப்­படும் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. மக்­கள் விடு­தலை முன்­ன­ணியும் எல்லை நிர்­ணய அறிக்கை விவ­கா­ரத்தில் முரண்­பட்டே உள்­ளது.

ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு கட்சி
எமது நாட்டில் எந்­த­வொரு ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டாலும் அதில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கி­றது. இதே­போன்று எல்லை நிர்­ணயம் என்று ஒன்று நடந்தால் வட, கிழக்கு முஸ்லிம்கள் அச்­சப்­ப­டு­கி­றார்கள். உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான புதிய எல்லை நிர்­ண­யத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது என ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம் ஹசன் அலி தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்­சி­ மன்ற எல்லை நிர்­ணயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், “எல்லை நிர்­ணயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்­சி­களை அழைத்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பெரும்­பான்­மை­யின கட்­சி­க­ளோடு தனி­யாக பேச்சுவார்த்தை நடத்­தப்­பட்­டது. கலந்­து­ரை­யாடலில் எல்லை நிர்­ண­யங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­வது பற்றி நான் சுட்­டிக்­காட்­டினேன்.

எல்லை நிர்­ண­யக்­கு­ழு­வுக்கு உறுப்­பி­ன­ராக முஸ்லிம் ஒரு­வரும், தமிழர் இரு­வரும் நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். ஏனைய உறுப்­பி­னர்கள் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள். நிய­மிக்­கப்­படும் தமிழ், முஸ்லிம் உறுப்­பி­னர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள். அத்தோடு அரச உயர் அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். அதனால் அவர்களால் அரசாங்கத்தின் கொள்கையே அரங்கேற்றப்படுகிறது.

எல்லை நிர்ணயக்குழுவுக்கு புத்திஜீவிகள் மட்டத்திலிருந்து சுயாதீனமான உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும். பல்கலைக்கழக மட்டத்திலிருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படும்வரை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை சமூகத்துக்கு அநீதியே இடம் பெறும் என்றார்.

சமூகம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்
எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் உரிய தெளிவுகள் அற்ற நிலையிலே இருக்கிறது. எல்லை நிர்ணயத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பெறுமதியையும் முஸ்லிம் சமூகம் மதிப்பீடு செய்வதில்லை. இதனாலே எல்லை நிர்ணயப் பணிகள் ஆரம்பிக்கப்படும்போது எல்லை நிர்ணயக்குழு பொதுமக்கள், சமூக அமைப்புகளிடமிருந்து அறிக்கைகள், கருத்துக்கள், பரிந்துரைகள் என்பனவற்றைக்கோரி பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டபோதிலும் எமது சமூகம் மெளனமாகவே இருந்து வந்துள்ளது. சமூகத்தின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அவர்கள் செயலில் இறங்குவதில்லை.

உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய எல்லை நிர்ணயத்தின்போது முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட அதிக அக்கறை கொள்ளாது ஏனோ தானோ என்று இருந்துள்ளன. சமூகத்தை இது விடயத்தில் தெளிவுபடுத்த அவை தவறியுள்ளன. இதனாலேயே எமது பிரதிநிதித்துவத்தை நாம் இழந்துவிட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இவ்விடயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள், சமூக இயக்கங்கள், அரசியல்வாதிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். செயலில் இறங்கவேண்டும். இதனையே சமூகம் எதிர்பார்க்கிறது.

நகல் அறிக்கை கையளிப்பு
இதே­வேளை நேற்று முன்­தினம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான புதிய எல்லை நிர்­ண­யத்தின் நகல் வரைபு அறிக்கை பிர­த­மரும், விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. எல்லை நிர்­ண­யக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய நகல் அறிக்­கையை பிர­த­ம­ரிடம் கைய­ளித்தார்.

அறிக்கை சிறு­பான்­மை­யி­ன­ருக்குப் பாத­க­மாக சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை கேள்­விக்­குள்­ளாக்கி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்ற முறைப்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. நகல் அறிக்கை உள்­ளூ­ராட்சி மன்ற அலு­வ­ல­கங்­களில் பொது­மக்கள் பார்­வைக்­காக காட்­சிப்­ப­டுத்தத் திட்­ட­மிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். அறிக்கை காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு ஒரு­வார காலத்­துக்குள் முறைப்­பா­டு­களும் பொது­மக்­களின் ஆலோ­ச­னை­களும் எல்­லை­நிர்­ணய குழுவின் தலைமை அலு­வ­லகம் கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வேண்டும் என குழுவின் உறுப்­பினர் கே.தவ­லிங்கம் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் முஸ்லிம் சமூகம் இது­வி­ட­யத்தில் விரைந்து செயற்­ப­ட­வேண்டும். தங்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­வாங்கிக் கொள்ளும் வகையில் ஆவணங்களையும் நிலத்தொடர்புகளையும் குழுவுக்கு அனுப்பி வைக்கவேண்டும். இது எமது அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.