இனவாதத்தை இல்லாதொழிக்கும் பொறுப்பு உங்களுடையது

பிரதமருக்கு தேசிய சூரா சபை கடிதம்

0 524

நாட்டின் பிர­த­ம­ராக நீங்கள் மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­மைக்கு நாங்கள் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம். இதே­வேளை நாட்டில் தலைத்­தூக்­கி­யுள்ள இன­வாதம் மற்றும்  ஊழல் மோச­டி­களை இல்­லாமல் செய்யும் பொறுப்பு உங்­க­ளுக்­குள்­ளது என்­ப­தையும் வலி­யு­றுத்த விரும்­பு­கின்றோம் என தேசிய சூறா சபை  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்­ளது.

தேசிய சூறா சபையின் தலைவர் தாரிக்­மஹ்­மூதின் கையொப்­பத்­துடன்  அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த எடுத்த முயற்­சியும், அக்­க­றையும், சுதந்­தி­ர­மான நீதித்­து­றையும், எமது அர­சியல் வர­லாற்றில் நினை­வு­கூ­ரக்­கூ­டிய பதி­வு­க­ளா­கவும் எங்­க­ளது அர­சியல் கலா­சா­ரத்தில் உண்­மை­யான ஜன­நா­யக சீர்­தி­ருத்­தங்­களை அறி­மு­கப்­ப­டு­தத்­து­வ­தற்கு உங்­க­ளது அர­சாங்­கத்­துக்கு மேலு­மொரு சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. இந்த எதிர்­பார்ப்பு மக்­க­ளிடம் உள்­ளது . மாற்­றத்­திற்­காக 2015 ஆம் ஆண்டு சிங்­கள, தமிழ், முஸ்லிம் ஜன­நா­யக வாதிகள் ஒன்­றி­ணைந்­தார்கள். ஆனால் மாற்­றங்கள் மிக மெது­வா­கவே இடம் பெற்­றுள்­ளன.

நல்­லாட்சி அர­சாங்கம் பதவிக்கு வந்­ததும் கொண்­டு­வ­ரப்­ப­ட்ட சீர்­தி­ருத்­தங்­களில் 19 ஆவது சீர்­தி­ருத்தம் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். நாட்டின் அர­சி­யலில் தோன்­றிய பதற்­ற­மா­ன­நிலை இன்று முடி­வுக்கு வந்­துள்­ளது. இதற்­காக ஐக்­கிய தேசிய முன்­னணி ஆத­ர­­வா­ளர்கள், சமூ­கத்­த­லை­வர்கள், சிவில் சமூக அமைப்­புகள் உட்­பட பல்­வேறு தரத்­த­வர்கள்  ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளார்கள். கடந்த ஒக்­டோபர் 26 ஆம் திக­திய நிகழ்­வுக்கு முடிவு காணப்­பட்­டுள்­ளது.

உங்­க­ளது புதிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­ச­ரவை நிய­ம­னங்கள் அர­சி­ய­லுக்கு அப்பால் நேர்மை, பக்­குவம் மற்றும் தொலை­நோக்கு கொண்­ட­தாக அமையும் என நாம் எதிர்­பார்க்­கிறோம்.

மீண்டும் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் மூலம் ஊழ­லையும், இன­வா­தத்­தையும் இல்­லாமல் செய்­வ­தற்கு உங்­க­ளுக்கு மீண்டும் ஒரு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

நாங்கள் ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தற்­காக பல்­வேறு அமைப்­பு­க­ளுடன் இணைந்து ஜன­நா­ய­கத்தின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தி விழிப்­பு­ணர்­வு­களை நடாத்­து­கிறோம்.

அனைத்து சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்து  மீளக்கட்டியெழுப்புவதற்காக தேசிய சூறா கவுன்ஸில் செயற்படும். எதிர்கால சந்ததியினருக்காக, தாய் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.