ஹாதியாவின் பிணையின் பின்னால் இருந்த சவால்களும் போராட்டங்களும்

கல்முனை நீதிமன்றில் நடந்தது என்ன?

0 194

எம்.எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாசிமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­வித்து கடந்த15 ஆம் திகதி கல்­முனை மேல் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. எனினும் அதி­லி­ருந்து 48 மணி நேரம் கடந்த நிலை­யி­லேயே அதா­வது, 17 ஆம் திகதி மாலை 5.45 மணி­ய­ள­வி­லேயே அவர்­ சி­றையில் இருந்து வெளி­யேற அனு­ம­திக்­கப்­பட்டார்.

வழக்கின் பின்­னணி :
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­தவூரில் வைத்து அறிந்­தி­ருந்தும் (சாரா )ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
அந்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, சி.ஐ.டி. அதி­கா­ரிகள், ஒரு இரா­ணுவ வீரர் உள்­ள­டங்­க­லாக 30 சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ள­துடன், சான்­றா­வ­ண­மாக ஒரே ஒரு ஒப்­புதல் வாக்கு மூலம் மட்டும் நிர­லி­டப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் இந்த வழக்­கா­னது கடந்த 15 ஆம் திகதி கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்­கியின் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.
இதன்­போது, வழக்கின் முன் விளக்க மாநாடு நிறைவு செய்­யப்­பட்டு சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

சட்­டத்­த­ர­ணி­களின் பிர­சன்னம்:
வழக்கை நெறிப்­ப­டுத்த சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்சி ஹேரத் தலை­மையில் அரச சட்­ட­வா­தி­க­ளான சத்­துரி விஜேசூரிய மற்றும் எம்.எஸ்.எம். லாபிர் ஆகியோர் வழக்குத் தொடு­ந­ருக்­காக ஆஜ­ரா­கினர்.பிர­தி­வா­தி­யான ஹாதி­யா­வுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைரின் வழி­ந­டாத்­தலில்,சிரேஸ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வான் உவைஸ், வீ. அர்சாத் ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

குற்றப் பத்­தி­ரி­கையை திருத்த முன் வைக்­கப்­பட்ட கோரிக்கை :
இந் நிலையில், வழக்கு விசா­ரணை ஆரம்­பத்­தி­லேயே, குற்றப் பகிர்வு பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சான்றுப் பொருட்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­யலை திருத்தி மேலும் சில சான்றுப் பொருட்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்­களை புகைப்­படம், ஆவ­ணங்கள் மற்றும் நபர்­க­ளாக உள்­ளீர்க்க வழக்குத் தொடுநர் தரப்பின் பிரதி சொல்­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் கோரிக்கை முன் வைத்தார்.

எனினும் அந்த கோரிக்­கைக்கு பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கடும் ஆட்­சே­பனம் வெளி­யிட்டார். அவ­சர அவ­ச­ர­மாக முழு­மை­யற்ற குற்றப் பத்­தி­ரிகை ஒன்­றினை தாக்­கல்­செய்­து­விட்டு, இப்­போது அடிக்­கடி அதனை திருத்த முனை­வ­தா­கவும், இது குற்றப் பத்­தி­ரி­கையில் தவ­ற­வி­டப்­பட்ட விட­யங்கள் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
முன் விளக்க மாநாடு முடிந்த அடுத்த கணம் இவ்­வாறு சட்ட மா அதிபர் சார்பில் குற்றப் பத்­தி­ரி­கையின் குற்றச் சாட்­டினை திருத்­தாது, சான்­றா­வ­ணங்கள் மற்றும் சாட்சிப் பட்­டி­யலை திருத்த விளை­வது பிர­தி­வா­திக்கு அநீ­தி­யாக அமையும் என குறிப்­பிட்டார்.

குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சட்­டத்தின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்தம் ஊடாக உள்­ளீர்க்­கப்­பட்­டுள்ள 195 (அ) அத்­தி­யாயம், குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 168, 169 ஆம் அத்­தி­யா­யங்கள், சாட்­சிகள் கட்­டளைச் சட்­டத்தின் 24 ஆவது அத்­தி­யாயம், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 16 ஆவது அத்­தி­யாயம் உள்­ளிட்ட சட்டப் பிரி­வு­களை மையப்­ப­டுத்தி இரு தரப்­பி­னரும் நீண்ட சமர்ப்­ப­ணங்­களை முன் வைத்­தனர்.

இந் நிலையில், ஈற்றில் வழக்குத் தொடுநர் தரப்பின் கோரிக்­கையை நியா­ய­மா­னது என ஏற்­றுக்­கொண்ட நீதி­பதி, திருத்­தங்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்தார்.

சாட்சி விசா­ரணை :
இத­னை­ய­டுத்து சாட்சிக் கூண்­டுக்கு முதல் சாட்­சி­யா­ள­ராக , வழக்­கா­வ­ணத்தின் 30 ஆம் இலக்க சாட்­சி­யா­ள­ராக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த மேஜர் சுது­சிங்க அழைக்­கப்­பட்டு சாட்­சியம் பெறப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பின்னர், பொலி­ஸா­ருடன் இணைந்து முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள், நிந்­தவூர் பகு­தியில் வெடி­பொ­ருட்கள் உள்­ளிட்­ட­வற்றை மீட்ட போது அங்கு சென்று பாது­காப்­ப­ளித்­தமை, சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகுதி வீட்டில் நடந்த வெடிப்பு சம்­ப­வத்தை மையப்­ப­டுத்­திய நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­றமை தொடர்பில் மேஜர் சுது­சிங்க சாட்­சி­ய­ம­ளித்தார். அத்­துடன் சாய்ந்­த­ம­ருது வெடிப்பு சம்­ப­வத்தின் பின்னர், ஹாதி­யா­வையும், அவ­ரது மக­ளையும் மீட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்க தான் முன்­னெ­டுத்த கட­மைகள், மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் அவர் பிரஸ்­தா­பித்தார்.

மகளை ஆரத் தழு­விய ஹாதியா:
இந் நிலையில் வழக்கு விசா­ர­ணைகள் மதிய போசன இடை­வே­ளைக்கு நிறுத்­தப்­பட்ட போது, நீதி­மன்ற சிறைக் கூண்டில் ஹாதியா தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அப்­போது வழக்கு விசா­ர­ணை­களை அவ­தா­னிக்க ஹாதி­யாவின் குடும்ப உறுப்­பி­னர்கள் நீதி­மன்­றுக்கு வந்­தி­ருந்த நிலையில், ஹாதி­யாவின் 5 வயது மகளும் அவர்­க­ளுடன் வந்­தி­ருந்தார்.
இடை­வே­­ளையில், தனது மகளை ஹாதியா, சிறைக் கூண்டின் கம்­பி­க­ளுக்­கி­டையே ஆரத் தழு­வி­யமை உணர்வு பூர்­வ­மாக இருந்­தது.

மேஜரின் செல்பி :
இது இவ்­வா­றி­ருக்க, இடை­வேளை நேரத்தில் ஹாதி­யாவின் மகளை அவ­தா­னித்த, சாட்­சி­யாளர் மேஜர் சுது­சிங்க, அவ­ருடன் செல்­ல­மாக பேசி­ய­மையை காண முடிந்­தது. குறிப்­பாக தன்னை ஞாபகம் இருக்­கின்­றதா என கேட்­டுக்­கொண்டே, ஹாதி­யாவின் உற­வி­னர்கள், மற்றும் ஹாதி­யாவின் அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொன்டு மேஜர் சுது­சிங்க அச்­சி­று­மி­யுடன் நீதி­மன்ற அறைக்கு வெளியே செல்பி புகைப்­படம் எடுத்­துக்­கொண்டார்.

ஹாதி­யாவின் ஹிஜாபை கழற்ற முயன்ற வழக்குத் தொடுநர் தரப்பு :
இடை­வே­ளையின் பின்னர் வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது, சாட்சி நெறிப்­ப­டுத்­தலை பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தொடர்ந்தார். அப்­போது சாய்ந்­த­ம­ருதில் வைத்து மேஜர் சுது­சிங்க மீட்ட பெண் ஹாதியா தான் என ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க அவர் விளைந்தார்.

இதன்­போது, அப்­போது இருந்த தோற்­றத்­துக்கும் இப்­போது இருக்கும் தோற்­றத்­துக்கும் இடையே வித்­தி­யாசம் இருப்­பதை மேஜர் சுது­சிங்க குறிப்­பிட்டு, அடை­யாளம் காண்­பது கடினம் என குறிப்­பிட விளைந்தார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத், அரச சட்­ட­வாதி லாபிரின் ஆலோ­ச­னையை பெற்­ற­துடன், அவ்­வா­லோ­சனை பிர­காரம் ஹாதியா அணிந்­தி­ருந்த ஹிஜாபை கழற்­றினால் அடை­யாளம் காண முடி­யுமா என சாட்­சி­யா­ள­ரிடம் வின­வினார்.

இந்த கேள்வி நீதி­பதி உள்­ளிட்ட நீதி­மன்றில் இருந்த அனை­வ­ரையும் தர்­ம­சங்­க­டத்­துக்குள் தள்­ளி­யதை ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் முக­பா­வ­னை­களின் ஊடாக காணக் கூடி­ய­தாக இருந்­தது.

அக்­கேள்வி கேட்­கப்­பட்டு மறு­க­ணமே எழுந்த ஹாதி­யாவின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், மேஜர் சுது­சிங்க சாய்ந்­த­ம­ருது வெலி­வே­ரியன் வீட்­டி­லி­ருந்து ஹாதி­யாவை மீட்­டமை தொடர்­பான விட­யத்தை, பிர­தி­வாதி தரப்பு ஆட்­சே­பனை இன்றி ஏற்­றுக்­கொள்­வ­தாக (அட்­மிட்டெட்) நீதி­ப­திக்கு அறி­வித்தார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் அவ்­வாறு அறி­வித்­ததை அடுத்து, ஹாதி­யாவை மேஜர் சுது­சிங்க பிரத்­தி­யே­க­மாக அடை­யாளம் காட்­டத்­தேவை இல்லை என நீதி­பதி அறி­வித்­ததால், ஹிஜாபை அகற்ற வேண்­டிய தேவை இல்­லாமல் போனது.
இந் நிலையில் சாட்­சி­யாளர் மேஜர் சுது­சிங்­க­விடம், பிர­தி­வாதி சார்பில் குறுக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், அது மாலை வேளையில் இடை நிறுத்­தப்­பட்­டது.

மாலையில் வழங்­கப்­பட்ட பிணை :
அதன்­படி, நீதி­பதி ஜெய­ராமன் ட்ரொஸ்கி, ஏற்­க­னவே ஹாதி­யாவின் சட்­டத்­த­ர­ணிகள் முன் வைத்த பிணைக் கோரிக்­கைக்கு அமை­வாக நீதி­மன்றின் உத்­த­ரவை அறி­வித்தார்.
பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணிகள் முன் வைத்த வாய்­மொழி மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள், வழக்குத் தொடுநர் தரப்பு பிணையை ஆட்­சே­பித்து முன் வைத்த எதிர் வாதங்­களை ஆராய்ந்து நீதி­பதி ஜெய­ராமன் ட்ரொஸ்கி தனது பிணை குறித்த தீர்­மா­னத்தை அறி­வித்தார்.

பிணைக் கோரிக்­கையில் முன் வைக்­கப்­பட்ட விட­யங்­களும் ஆட்­சே­ப­னை­களும் :
ஹாதி­யா­வுக்கு பிணை கோரி முன் வைக்­கப்­பட்ட கோரிக்கை விண்­ணப்­பத்தில், அவரின் சட்­டத்­த­ர­ணிகள் பல்­வேறு விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­துக்கு புதி­தாக கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­தங்கள் பிர­காரம் அச்­சட்­டத்தின் 15 பி பிரிவின் கீழ், குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு ஒரு வரு­டத்­துக்குள் வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­ப­டாத விடத்து பிர­தி­வா­திக்கு பிணை­ய­ளிக்க வேண்டும் என்ற விட­யத்­துக்கு அமைய பிணை கோரப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் ஹாதி­யாவின் உடல் ஆரோக்­கியம், நீண்ட நாட்­க­ளாக சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் என்­ப­னவும் ஹாதி­யாவின் சட்­டத்­த­ர­ணி­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தன.எனினும் அந்த கார­ணி­க­ளுக்கு அமைய பிணை­ய­ளிக்க சட்ட மா அதிபர் கடும் ஆட்­சே­பனை முன் வைத்­தி­ருந்தார்.

கல்­முனை நீதி­மன்ற வர­லாற்றில் முதல் தடவை:
இந் நிலையில், ஹாதி­யாவின் பிணைக் கோரிக்கை தீர்ப்பை அறி­வித்த கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி, முதலில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் புதிய திருத்­தங்­க­ளுக்கு அமைய, மேல் நீதி­மன்­றுக்கு பிணை­ய­ளிக்கும் அதி­காரம் உள்­ளது என்­பதை முதலில் திறந்த நீதி­மன்றில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தீர்க்­கப்­பட்ட வழக்­கு­களின் துணை­யுடன் முன் வைத்தார்.

அதன்­படி கல்­முனை மேல் நீதி­மன்ற வர­லாற்றில் முதல் தட­வை­யாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான வழக்­கொன்றில் பிர­தி­வா­திக்கு பிணை­ய­ளித்து தீர்ப்­ப­ளிப்­ப­தாக நீதி­பதி அறி­வித்தார்.

கொள்கை மாற்றம், மனித உரிமை நிலை­வ­ரங்­களை ஆராய்ந்த நீதி­பதி:
இலங்­கையின் அண்­மைக்­கால கொள்கை மாற்­றங்கள், சர்­வ­தேச மனித உரிமை நிலை­வ­ரங்கள், தனி மனித சுதந்­திரம் உள்­ளிட்­ட­வற்றை மிக ஆழ­மாக ஆராய்ந்து, மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி நீல் இத்­த­வல, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஒமர் ஹிஸ்­புல்லாஹ் விவ­கார வழக்கில் (CA/PHC/APN/10/22) அளித்த தீர்ப்பை ஆழ­மாக உள்­ளீர்த்து பிணை­ய­ளிக்கும் தீர்­மா­னத்­துக்கு வந்­த­தாக நீதி­பதி அறி­வித்தார்.

ஹாதி­யா­வுக்கு சிறு­நீ­ரக பிரச்­சினை :
இத­னி­டையே ஹாதி­யாவின் ஆரோக்­கிய நிலை தொடர்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் தொடர்ச்­சி­யாக நீதி­மன்றின் அவ­தா­னத்­துக்கு கொண்­டு­வந்­தி­ருந்த நிலையில், அவ­ருக்கு கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை மற்றும் தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் அளிக்­கப்­பட்ட சிகிச்­சைகள்,முன்­னெ­டுக்­கப்­பட்ட பரி­சோ­த­னைகள் குறித்தும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

அதன்­படி ஹாதியா தொடர்­பி­லான வைத்­திய பரி­சோ­தனை அறிக்கை கல்­முனை நீதி­மன்­றுக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அதன் பிர­காரம் ஹாதி­யாவின் ஒரு சிறு­நீ­ரக செயற்­பாடு தொடர்பில் பிரச்­சினை இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இத­னையும் பிணை உத்­த­ரவின் இடையே நீதி­பதி மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்­தினார்.

நீண்­ட­கால தடுப்பு :
இந் நிலை­யி­லேயே சுமார் 4 வரு­டங்கள் அரசின் காவலில் (தடுப்பு மற்றும் சிறைச்­சாலை) ஹாதியா தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் அவ­தானம் செலுத்­திய நீதி­பதி, அதனை விசேட கார­ணி­யாக ஏற்­றுக்­கொண்டு, ஏனைய விட­யங்­க­ளையும் விரி­வாக ஆராய்ந்து உள்­ளீர்த்து பிணை­ய­ளிப்­ப­தாக அறி­வித்தார்.

அதன்­படி 25 ஆயிரம் ரொக்கப் பிணை, 25 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் ஹாதி­யாவை செல்ல அனு­ம­தித்த நீதி­பதி, அவ­ருக்கு வெளி­நாட்டு பயணத் தடை விதித்து, ஒவ்­வொரு மாதமும் சி.ஐ.டி.யில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட வேண்டும் என்ற நிபந்­த­னை­யையும் விதித்தார்.

நீதி­மன்ற உத்­த­ர­வின்றி தடுத்து வைக்­கப்­பட்ட ஹாதியா:
கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்­கியின் பிணை உத்­த­ரவின் பின்­னரும், பாத்­திமா ஹாதியா, தொடர்ந்தும் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் பொறுப்பில் விளக்­க­ம­றியல் கைதி­யாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். ஹாதி­யாவை வேறு ஏதேனும் ஒரு வழக்கின் ஊடாக தொடர்ந்தும் தடுப்பில் வைத்­தி­ருக்க பாரிய முயற்­சிகள் நடந்த நிலை­யில் அந்நட­வ­டிக்கை பாரிய சந்­தே­கத்­துக்­கு­ரி­யது. வேறு வழக்­கு­களில் ஹாதி­யா­வுக்கு விளக்­க­ம­றியல் உத்­த­ர­வொன்று பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்தால், அது சிறைச்­சாலை திணைக்­க­ளத்­துக்கு தெரி­யாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவ்­வா­றான நிலை­யி­லேயே ஒவ்­வொரு விட­ய­மாக கூறி சிறைச்­சாலை திணைக்­க­ளமும், சி.ஐ.டி.யும் ஹாதி­யாவை தடுப்­புக்­கா­வலில் வைத்­தி­ருக்க பாரிய முயற்­சி­களை முன்­னெ­டுத்­தன.
கோட்டை நீதி­மன்றில் உள்ள வழக்கில் அவரை ஆஜர் செய்ய வேண்டும் என்­பதால் இவ்­வாறு தடுத்து வைத்­துள்­ள­தாக சிறைச்­சா­லைகள் பேச்­சாளர் ஊட­கங்­க­ளிடம் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும், ஹாதி­யா­வுக்கு வேறு வழக்­குகள் எதுவும் இல்லை எனவும், கோட்டை நீதி­மன்றில் இருக்கும் பி அறிக்கை பிர­காரம் தொடுக்­கப்­பட்ட வழக்கே கல்­முனை மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் ஹாதி­யாவின் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர்.

தடுத்து வைக்க எடுக்­கப்­பட்ட முயற்­சிகள்:
எவ்­வா­றா­யினும் பாத்­திமா ஹாதியா, சிறைச் சாலை பேச்­சாளர் கூறி­யதைப் போல கோட்டை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை. மாற்­ற­மாக அவரை L95839/21 எனும் வழக்கு கோவையின் கீழ் நீர் கொழும்பு நீதி­மன்றில் சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஆஜர் செய்­தனர்.

அந்த வழக்­கி­லக்கம், கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீதான குண்டுத் தாக்­குதல் குறித்த வழக்­கி­லக்கம் என்­பதும், அவ்­வ­ழக்கு நீதிவான் நீதி­மன்றில் நிறைவு செய்­யப்­பட்டு, கொழும்பு மேல் நீதி­மன்ற சிறப்பு ட்ரயல் அட்பார் அமர்வு முன்­னி­லையில் 24 பேருக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணையின் கீழ் இருப்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.
அந்த கோவையில் பாத்­திமா ஹாதியா சந்­தேக நப­ரா­கவோ பிர­தி­வா­தி­யா­கவோ பெய­ரி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

சி.ஐ.டி.யின் இறுதி முயற்­சியும் தோல்வி:
இந்­நி­லையில் கடந்த 17 ஆம் திகதி பாத்­திமா ஹாதியா நீர் கொழும்பு நீதி­வானின் உத்­தி­யோ­க­பூர்வ அறையில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது சி.ஐ.டி. அதி­காரி ஒரு­வரும் முன்­னி­லை­யா­கி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும் குறித்த வழக்கில் ஹாதி­யாவை சந்­தேக நப­ராக பெய­ரி­டவும், அவ­ருக்கு விளக்­க­ம­றியல் உத்­த­ரவை பிறப்­பிக்­கவும் நீதிவான் மறுத்­துள்ளார். இதனால் சி.ஐ.டி.யின் முயற்சி தோல்­வி­ய­டைந்­துள்­ளது. வேறு வழக்­குகள் தொடர்­பிலும் ஹாதி­யாவை உள்­ளீர்க்க முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், அவையும் தோல்­வி­ய­டைந்­துள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது.

மனித உரி­மைகள் ஆணைக் குழுவும் களத்தில்:
இந்­நி­லையில் ஹாதியா, எந்த சட்ட ரீதியிலான உத்தரவுகளும் இன்றி 48 மணி நேரங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் விளக்கம் கோரியுள்ளது.

சட்டத்தரணிகளும் தொடர் போராட்டம்:
இந்­நி­லையில் ஹாதி­யாவின் சட்­டத்­த­ர­ணிகள் ஹாதி­யாவின் நலன் தொடர்பில் தொடர்ந்து போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். குறிப்­பாக சிறைச்­சாலை திணைக்­க­ளத்­தினர் மற்றும் நீதி­மன்­றங்கள் ஊடாக அவர்கள் ஹாதி­யாவின் நல­னுக்­காக போராட்­டங்­களை தொடர்ந்தனர்.

முயற்சிகள் தோல்வியடைந்ததால் விடுவிக்க இணக்கம்:
இந்நிலையில், ஹாதியாவை தொடர்ச்சியாக தடுத்து வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், நிலைமை மோசமடைவதை உணர்ந்த சிறைச்சாலைகள் திணைக்களம் 17 ஆம் திகதி மாலை 5.45 மனியளவில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.

அடுத்த தவணை:
அதன்படி, ஹாதியா எந்த சட்ட ரீதியான உத்தரவுகளும் இன்றி 48 மணி நேரம் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாரிய போராட்டங்களின் பின்னர் சுமார் 4 வருடங்களின் பின்னர் கம்பிகளின் தடைகளின்றி தனது மகளை ஆரத் தழுவிக்கொள்ள சந்தர்ப்பத்தைப் பெற்று பிணையில் வீடு சென்றுள்ளார்.

ஹாதி­யா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு, மேல­திக சாட்சி மற்றும் குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக எதிர்­வரும் மே 17, 18 ஆம் திக­தி­க­ளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.