துருக்கி: கல்லறைகளாக மாறும் வீடுகள்!

0 242

ஏ.ஆர்.ஏ. பரீல்

துருக்­கியில் ரெய்­ஹான்லி எனும் பகு­திக்கு அருகில் நான்கு தினங்­க­ளுக்கு முன்பு ஜனா­ஸாக்கள் லொறி­களில் எடுத்து வரப்­பட்டு கீழே இறக்­கப்­ப­டு­கின்­றன. சில ஜனா­ஸாக்கள் பல­கை­யி­லான பெட்­டி­க­ளுக்குள் மூடப்­பட்­டுள்­ளன. ஏனைய ஜனா­ஸாக்கள் போர்­வை­யினால் சுற்­றப்­பட்­டுள்­ளன.

முகத்தை கறுப்புத் துணி­களால் மறைத்­துக்­கொண்­டுள்ள பெண்கள் அழுது புலம்பி தங்கள் நெஞ்­சு­களை கைகளால் அடித்­துக்­கொள்­கி­றார்கள். அப்­ப­கு­தி­யெங்கும் சோகம் சூழ்ந்து கொண்­டுள்­ளது.

அண்­மையில் துருக்கி மற்றும் சிரி­யாவில் ஏற்­பட்ட பூமி­ய­திர்ச்­சி­யை­ய­டுத்து கடந்த சில தினங்­க­ளாக அங்கு நிலவிக் கொண்­டி­ருக்கும் நெஞ்சை உருக்கும் ஆயிரக் கணக்­கான சம்­ப­வங்­களில் ஒரு சம்­ப­வமே இது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீட்புப் பணி­யா­ளர்கள் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்­கி­டையில் இருந்து உயி­ருக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்த சிலரை மீட்­டெ­டுத்­தனர். தொடர்ந்தும் உயி­ருக்­காகப் போரா­டு­ப­வர்கள் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்­கி­டையில் இருப்­ப­தற்கு வாய்ப்­பில்லை என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

பலி­யானோர் எண்­ணிக்கை முப்­பத்து ஆறா­யி­ரத்­துக்கும் அதிகம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ள­துடன் இவ் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­க­ளி­லுள்ள வியா­பார நிலை­யங்­களின்  உரி­மை­யா­ளர்கள் தங்­க­ளது வர்த்­தக பொருட்­களை கொள்­ளை­யி­டு­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். வியா­பார நிலை­யங்­களின் விற்­பனைப் பொருட்கள் உரி­மை­யா­ளர்­களால் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.

பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­க­ளுக்கும், நக­ரங்­க­ளுக்கும் ஏனைய நக­ரங்­க­ளி­லி­ருந்து வருகை தரும் மக்­களும் சிதை­வு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் வீடு­களைக் கொள்­ளை­ய­டிப்­ப­தா­கவும் அங்­கி­ருந்து வெளி­வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
துருக்கி ஜனா­தி­பதி தையிப் அர்­துகான் பூமி­ய­திர்ச்சி அனர்த்­தத்­தை­ய­டுத்து பாரிய சவால்­களை எதிர்­கொண்­டுள்ளார். திட்­ட­மி­டப்­பட்­டுள்ள தேர்­தலில் இவ் அனர்த்தம் தாக்­கங்­களைச் செலுத்தும் என அர­சியல் ஆய்­வா­ளர்கள் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளனர்.
இதே­வேளை இந்த அனர்த்த நிலை­மையில் கொள்ளைச் சம்­ப­வங்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி அர்­துகான் தெரி­வித்­துள்ளார்.

சிரி­யாவில் போரா­ளி­களின்  கட்­டுப்­பாட்டில் இருக்கும் வடக்கு, மேற்கு பகு­தி­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சிரி­யாவின் உள்­நாட்டு யுத்தம் கார­ண­மாக பல தட­வைகள் இடம்­பெ­யர்ந்து வாழும் மக்கள் இந்த அனர்த்­தத்­தினால் பெரும் எண்­ணிக்­கையில் வீடு­களை இழந்­துள்­ளனர். அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருக்கும் பகு­தி­க­ளுடன் இப்­ப­கு­தியை ஒப்­பி­டும்­போது இப்­ப­கு­தி­க­ளுக்கு குறைந்­த­ள­வி­லான உத­வி­களே அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன.

சிரி­யாவின் வட மேற்கு பகுதி மக்­களை அடை­வ­தற்கு இது­வரை எம்மால் முடி­யா­மற்­போ­யுள்­ளது. அங்கு செல்­வ­தற்கு ஒரே ஒரு வழியே திறந்­துள்­ளது என ஐக்­கிய நாடு­களின் உதவி தலைமை அதி­காரி மார்டின் கிரிப்பித்ஸ் டுவிட்டர் செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார். ஐக்­கிய நாடு­களின் உத­வி­களை வழங்­கு­வ­தற்கு துருக்­கி­யி­லி­ருந்து சிரி­யா­வுக்கு ஒரே ஒரு வழி திறந்­துள்­ளது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். அப்­ப­குதி மக்கள் தாம் கைவி­டப்­பட்­டுள்­ள­தா­கவே கரு­து­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அனர்த்தம் ஏற்­பட்டு  பல­நாட்கள் கடந்து விட்­ட­போதும் இடி­பா­டு­க­ளுக்­குள்­ளான வீடு­களில் மக்கள் செய்­வ­த­றி­யாது அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யி­ருந்­ததை மீட்­புப்­ப­ணி­யா­ளர்கள் கண்டு பிடித்­துள்­ளனர். இடி­பா­டு­க­ளுக்­குள்­ளான வீடுகள் ஆயி­ரக்­க­ணக்­கா­னோரின் கல்­ல­றை­க­ளாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கட்­டி­டங்­களின் இடி­பா­டு­க­ளுக்­கி­டை­யி­லி­ருந்து ஒரு தகப்­பனும் மகளும், குழந்­தையும் மற்றும் 10 வயது சிறு­மி­யொ­ரு­வரும் மீட்­பு­ப­ணி­யா­ளர்­களால் மீட்­கப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வா­றான சம்­ப­வங்கள் மிக அரி­தா­ன­தாகும். இதே வேளை பலி­யா­ன­வர்கள் தொடர்ந்தும் மீட்­கப்­பட்டு வரு­வதால் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கட்­டிட நிர்­மா­ணத்தின் தரம் 
பூமி­ய­திர்ச்­சி­யினால் ஆயி­ரக்­க­ணக்­கான  கட்­டி­டங்கள் இடிந்து சிதைந்து வீழ்ந்­தமை கட்­டி­டங்கள் உரிய தரத்தின் கீழ் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை என்­பதை உறுதி செய்­துள்­ளது.
பூமி­ய­திர்ச்­சி­யினால் இவ்­வா­றான பாரிய அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு கட்­டி­டங்கள்  உரிய தரத்தின் கீழ் நிர்­மா­ணிக்­கப்­ப­டா­மையே பிர­தான காரணம் என்­பது கண்டு பிடிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து கட்­டிட நிர்­மா­ணத்­து­றையைச் சேர்ந்­த­வர்கள் பலர் சந்­தே­கத்தின் பேரில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

துருக்­கியில் அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள 10 மாகா­ணங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான கட்­டி­டங்கள் தரை­மட்­ட­மா­கி­ய­தற்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­க­ளென 131 சந்­தேக நபர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக துருக்­கியின் உதவி ஜனா­தி­பதி புவாட் ஒக்டே தெரி­வித்­துள்ளார்.

“நாம் இவ்­வி­டயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்­தி­யுள்ளோம். இவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்­வரை அவ­தா­ன­மாக இருப்போம். இந்த அனர்த்­தத்தில் மிகவும் மோச­மாக பாதிப்­புக்­குள்­ளான கட்­டி­டங்கள் மற்றும் மக்­களைப் பலி­யெ­டுத்த கட்­டி­டங்கள்,  மக்­களை காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய கட்­டி­டங்கள், தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட நிர்­மாண உரி­மை­யா­ளர்கள், நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக  நீதி­மன்ற நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்ற தேர்­தல்­க­ளுக்கு சவால்
துருக்­கியில் ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்தல் எதிர்­வரும் ஜூன் மாதம் நடாத்­தப்­ப­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. பூமி­ய­திர்ச்சி அனர்த்தம் அர்­து­கானின் அத்­தேர்தல் ஏற்­பா­டு­க­ளுக்கு சவா­லினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த அனர்த்­தத்­துக்கு முன்பே ஜனா­தி­ப­தியின் செல்­வாக்கு சரி­வினை எய்­தி­யி­ருந்­தது. துருக்­கிய பணம் (Currency) பெறு­ம­தியின் வீழ்ச்சி, உயர் பண­வீக்கம் கார­ண­மாக ஜனா­தி­பதி அர்­து­கானின் செல்­வாக்கு வீழ்ச்சி கண்­டி­ருந்­தது.

பூமி­ய­திர்ச்­சி­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சிலர் மற்றும் எதிர்­கட்சி அர­சி­யல்­வா­திகள் அர­சாங்கம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக நிவா­ரணம் வழங்­க­வில்லை, மீட்­புப்­ப­ணியும் துரி­த­மாக செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என குற்றம் சுமத்­து­கின்­றனர்.
1999 ஆம் ஆண்டு இடம் பெற்ற பூமி­ய­திர்ச்சி அனர்த்­தத்தின் பின்பு இரா­ணுவம் துரி­த­க­தியில் செயற்­பட்டு உத­வி­களை வழங்­கி­யது. ஆனால் தற்­போ­தைய அனர்த்­தத்­தின்­போது இரா­ணுவம் உட­ன­டி­யாக செயற்­ப­ட­வில்லை. உட­ன­டி­யாக அழைக்­கப்­ப­ட­வில்லை.
இக்­குற்­றச்­சாட்­டுக்கு பதி­ல­ளித்­துள்ள ஜனா­தி­பதி அர்­துகான் போக்­கு­வ­ரத்து கட்­ட­மைப்­பு­களின், பாதை­களில் பாதிப்­புகள் உரு­வா­கி­யி­ருந்­தாலும் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார்.

சிவில் யுத்தம் கார­ண­மாக சிரி­யா­வுக்கு உதவி வழங்கல் சிக்­கலில் 
சிரி­யாவில் கடந்த 12 வரு­ட­கா­ல­மாக இடம்­பெற்­று­வரும் சிவில் யுத்தம் கார­ண­மாக நிவா­ரண பணிகள் தடங்­க­லுக்­குள்­ளா­கி­யுள்­ளன. உத­விகள் அரச நிர்­வா­கத்தின் கீழி­ருக்கும் பிராந்­தி­யங்­க­ளி­லி­ருந்து கடும்­போக்கு எதிர்க்­கட்சி குழுவின் கட்­டுப்­பாட்டின் கீழுள்ள பகு­தி­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தற்கு இஸ்­லா­மிய அமைப்­பொன்றின் அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதி­க­மான பிராந்­தி­யங்­களை ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS) எனும் இஸ்­லா­மிய அமைப்பே தனது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­துக்­கொண்­டுள்­ளது. எனவே இவ்­வ­மைப்­பி­ட­மி­ருந்து அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது என ஐநாவின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை அரச கட்­டுப்­பாட்டின் கீழுள்ள பகு­தி­யி­லி­ருந்து உத­விகள் துருக்­கி­யி­லி­ருந்து வடக்­குக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­வதை ஒரு போதும்  அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என சிரியா இட்லிப் நகரில் நிலை கொண்­டுள்ள ஹயாத் தஹ்ரீர் அல்ஷாம் எனும் குழு தெரி­வித்­துள்­ளது.

என்­றாலும் துருக்கி மற்றும் சிரி­யா­வுக்­கி­டையில் மேல­திக இரண்டு எல்லை மையங்­களை நிறுவி ஐ.நா. நிவா­ரண உத­வி­களை அனுப்பி வைப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக ஐ.நா.பேச்­சாளர் ஜென்ஸ் லாயர்கே தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் நேச நாடான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் வெளி­வி­வ­கார  அமைச்சர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிரி­யாவின் ஜனா­தி­பதி பஸார் அசாத்தை சந்­தித்தார். பூமி­ய­திர்ச்சி அனர்த்தம் இடம்­பெற்­றதன் பின்பு அரபு நாட்டின் அமைச்­ச­ரொ­ருவர் மேற்­கொண்ட முக்­கிய சந்­திப்பு இது­வாகும்.

பூமி­ய­திர்ச்சி அனர்த்­தத்தின் பின்பு பல அரபு நாடுகள் ஜனா­தி­பதி அசாத்­துக்கு உத­விகள் வழங்­கி­யுள்­ளன. ஐரோப்­பாவின் முதல் உதவி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிரி­யாவின் தலை­ந­க­ரான டமஸ்­கஸை வந்­த­டைந்­தது.

ஐ.நா.வின் சிரி­யா­வுக்­கான பிர­தி­நிதி பெடர்சன், ஐ.நா. சிரி­யா­வுக்கு உத­விகள் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார். ‘நாம் அனைவருக்கும் ஒன்றைக் கூற விரும்புகின்றோம். இந்தக்கட்டத்தில் அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு பொதுவானதொரு உதவிக்காக அனைவரும் ஒன்றிணையுங்கள்  சிரிய மக்களுக்கு  உதவி செய்யுங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் நேற்று வரை கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின்படி துருக்கியில் 35,418 பேரும், சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். எனினும் பலியானவர்கள் மதிப்பிட்ட தொகையிலும் இரு மடங்காக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதேவேளை துருக்கியில் கஸியன்டெப் பிராந்தியத்தில் இடிந்து விழுந்த கட்டிடமொன்றின் இடிபாடுகளுக்குள்ளிருந்து ஒரு வாரம் கழித்து கடந்த திங்கட்கிழமை சிபெல் கயா என்ற 40 வயதுப் பெண்ணொருவரும், 62 வயதுப் பெண்­ணொ­ரு­வரும் மேலும் 13 வய­தான முஸ்­தபா என்ற சிறு­வனும் 10 வய­தான சிறு­மி­யொ­ரு­வரும் மீட்­கப்­பட்­டுள்­ளனர். அனர்த்தம் ஏற்­பட்டு 183 மணித்­தி­யா­லங்­களின் பின்பு இவர்கள் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளமை அதி­ச­யிக்­கத்­தக்­க­தாகும்.

துருக்­கியில் 80 ஆயிரம் பேர் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றனர். ஒரு மில்­லியன் மக்கள் வீடு­க­ளின்றி தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கிறார்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.