போதையை ஒழிக்க கல்குடாவில் எழுச்சிப் போராட்டம்!

0 305

எச்.எம்.எம்.பர்ஸான்

நாட்டில் போதைப்­பொருள் விற்­பனை மற்றும் பாவ­னைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்தே வரு­கின்­றன. இந்த ஆபத்­து கல்­குடா தொகு­தி­யையும் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த நாச­கார தொழில் நாட்டில் பல பாகங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற போதும், கல்­குடா தொகு­தியில் உள்ள பிறைந்­து­றைச்­சேனை பகுதி தேசிய ரீதியில் பேசப்­படும் ஒரு பிர­தே­ச­மாக காணப்­ப­டு­கி­றது.

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பிறைந்­து­றைச்­சேனை எனும் பகுதில் பல்­லாண்டு கால­மாக இந்த போதைப்­பொருள் விற்­பனை இடம்­பெற்­று­வ­ரு­வதை யாரும் மறைக்­கவோ மறுக்­கவோ முடி­யாது.

கஞ்சா, அபின், ஹெரோயின், ஐஸ், போதை மாத்­தி­ரைகள் என்று பல்­வேறு வகை­யான போதைப்­பொ­ருள்கள் இங்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.
அந்த பிர­தே­சத்தைப் பற்றி மாவட்ட செய­ல­கங்­க­ளிலும் பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளிலும் பேசப்­பட்டும், விழிப்­பு­ணர்­வுகள் மேற்­கொண்டும் போதைப்­பொருள் வியா­பா­ரிகள் அதனை விடாமல் தொடர்ந்தும் செய்து வரு­வது இந்த நாட்­டுக்கு ஒரு சாபக்­கே­டா­கவே அமைந்­துள்­ளது.

அந்தப் பகு­தியில் விற்­பனை செய்­யப்­படும் போதைப்­பொ­ருட்­களை பெற்றுக் கொள்ள உள்ளூர் மற்றும் வெளி­யூர்­களைச் சேர்ந்த போதை பாவ­னை­யா­ளர்கள் வருகை தரு­கின்­றனர். அது­மாத்­தி­ர­மல்­லாமல் வெளி மாவட்­டங்­களில் இருந்தும் நபர்கள் இதனை பெற்­றுக்­கொள்ள வருகை தந்த போது கைது செய்­யப்­பட்­டுள்ள சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

 

இப்­போது போதைப்­பொருள் விற்­பனை பிறைந்­து­றைச்­சேனை பகு­தியில் மாத்­தி­ர­மல்­லாமல் அது வியா­பித்து ஓட்­ட­மா­வடி, மீரா­வோடை, செம்­மண்­ணோடை, கொண்­டை­யங்­கேணி, நாவ­லடி போன்ற பகு­தி­க­ளிலும் புற்­றுநோய் போன்று பர­வி­யுள்­ளமை அனை­வ­ரதும் மனங்­க­ளிலும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதனால் சிறார்­க­ளையும், பாட­சாலை மாண­வர்­க­ளையும் பெற்­றோர்கள் பெரிதும் போராட்­டத்­துக்கு மத்­தியில் வளர்க்க வேண்­டிய ஒரு சூழல் காணப்­ப­டு­கி­றது.
இளை­ஞர்கள், பாட­சாலை மாண­வர்கள் என பல­த­ரப்­பட்­டோரும் இதற்குள் சிக்­கித்­த­விக்­கின்­றனர்.சமூ­கத்தில் நல்ல அந்­தஸ்தில் உள்ள நபர்­களின் பிள்­ளை­களும் இந்த தீய செய­லுக்கு அடி­மைப்­பட்டு தங்­க­ளது வாழ்வை சீர­ழித்து, குடும்ப கௌர­வத்­தையும் இழக்கச் செய்து வரு­வதை காண­மு­டி­கி­றது.

இவ்­வாறு போதைப்­பொருள் விற்­பனை செய்­யப்­படும் நபர்கள் கைது செய்­யப்­ப­டு­வதும் சிறிது நாட்­களில் விடு­த­லை­யா­வதும் வழக்­க­மா­கி­யுள்­ளது.

அதே­போன்­றுதான் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு போதைப்­பொருள் பாவித்து விட்டு அதனை விநி­யோகம் செய்­ய­வி­ருந்த ஐந்து இளை­ஞர்­களை இளைஞர் குழுவொன்­று பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­த­போது அவர்­க­ளிடம் தகுந்த ஆதா­ரங்கள் இல்­லை­யென்று அன்­றைய தினமே விடு­விக்­கப்­பட்­ட­னர்.

அவ்­வாறு விடு­த­லை­யாகி வரும் நபர்கள் எந்­த­வித பய­மு­மின்றி தொடர்ந்தும் அதே வியா­பா­ரத்தை செய்து இளம் சமூ­கத்தை சீர­ழித்து வரு­கின்­றனர்.

இந்த போதைப்­பொருள் விற்­ப­னையை தடுக்க கடந்த காலங்­களில் பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­த­போதும் அது கை கூ­ட­வில்லை என்றே அனை­வரும் ஆதங்­கப்­ப­டு­கின்­றனர்.

இந் நிலையில் புற்­றுநோய் போன்று பரவி வரும் இந்த போதைப்­பொருள் பாவ­னையை இல்­லாமல் செய்து இளம் தலை­மு­றை­யி­னரை பாது­காக்க பிர­தேச பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் விழித்­துக்­கொண்­டுள்­ளனர்.

அந்­த­வ­கையில், போதைப்­பொருள் விற்­பனை செய்­ப­வர்கள் பாவிப்­ப­வர்­களின் திரு­மண நிகழ்­வுகள், மரணச் சடங்­குளை பள்­ளி­வா­சல்கள் முன்­னின்று நடத்­தாது என்றும் குடும்ப, பொரு­ளா­தார உற­வு­களை முற்­றாக துண்­டிப்­பது போன்ற பல்­வேறு தீர்­மா­னங்­களும் எடுக்கப்­பட்­டுள்­ளன.

அதே­போன்று, கடந்த மாதம் ஐஸ் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யாகி வவு­னியா புனர்­வாழ்வு நிலை­யத்தில் புனர்­வாழ்வு பெற்­று­வந்த மாஞ்­சோலை பகு­தியைச் சேர்ந்த நப­ரொ­ருவர் மர­ணித்­தி­ருந்தார். அவ­ரது ஜனா­ஸாவை அப் பகுதி பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் பொறுப்­பேற்க மறுத்­தனர்.

இந்­நி­லையில் அந்த ஜனா­ஸாவை அவ­ரது குடும்­பத்­தினர் காணி­யொன்றில் தொழுகை நடாத்தி பள்­ளி­வாசல் மைய­வா­டியில் ஒரு பகு­தியில் நல்­ல­டக்கம் செய்­தனர்.
அதே­போன்று ஏரா­ள­மான இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு சிறைச்­சா­லை­க­களுக்கும், புனர்­வாழ்வு நிலை­யங்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் குறித்த பிர­தேசத்­தில் போதையை ஒழிப்பதற்­கான போராட்டம் வீரியம் பெற்று வரு­கி­ற­து.

இளைஞர் குழுக்கள் ஒன்­றி­ணைந்து இந்த விழிப்­பு­ணர்வு போராட்­டத்தை இரவு, பக­லாக மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

போதைப்­பொருள் விற்­பனை செய்­யப்­படும் இடங்­களை கண்­கா­ணித்து அங்கு போதைப்­பொ­ருள்­களை பெற்­றுக்­கொள்ள வரும் நபர்­களை மடக்கிப் பிடித்து பாது­காப்புப் படை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கின்­றனர்.

இவ்­வாறு தொடர்ந்தும் அந்த பகு­தியில் இளை­ஞர்கள் கண்­கா­ணிப்பில் ஈடு­பட்டு வரு­வ­தனால் சில போதைப்­பொருள் வியா­பா­ரிகள் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

போதைப்­பொருள் வியா­பா­ரி­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக மாறி­வரும் இந்த விழிப்­பு­ணர்வு போராட்­டத்தை மேற்­கொண்டு வரும் இளை­ஞர்கள் மீது போதைப்­பொருள் வியா­பா­ரிகள் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டுகளை பதிவு செய்­துள்­ள­துடன், அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­க­ளையும் தாக்கல் செய்­துள்­ளனர்.

எனினும் இவ்­வா­றான முறைப்­பா­டு­க­ளுக்கும், வழக்கு தாக்­கலுக்கும் தாம் அஞ்சப் போவ­தில்லை என்று தெரி­வித்­துள்ள விழிப்­பு­ணர்வு குழு­வினர், தாம் சட்­டத்தை ஒரு­போதும் கையில் எடுக்­காமல் வன்­மு­றை­களில் ஈடு­ப­டாமல் நாட்டின் சட்­ட­திட்­டங்­களை மதித்து இளம் சமூ­கத்தை பாது­காக்க இந்த போதை ஒழிப்பு விழிப்­பு­ணர்வு பணி­களை தொடர்ந்தும் மேற்­கொள்வோம் என்று தெரி­வித்­தனர்.

இவ்­வா­றான விழிப்­பு­ணர்வு திட்­டத்தின் தொடரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை (27) செம்­மண்­ணோடை பள்­ளி­வா­சல்கள் மற்றும் சமூக நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் ஜும்ஆ தொழு­கையின் பின்னர் மாபெரும் விழிப்­புணர்வு ேபாராட்டம் ஒன்­றினை முன்­னெ­டுத்­தனர்.

செம்­மண்­ணோடை அல் ஹம்ரா வித்­தி­யா­லய மைதா­னத்தில் இடம்­பெற்ற இவ் விழிப்­பு­ணர்வு நிகழ்வில் பெருந்­தி­ர­ளான பொது­மக்கள் கலந்து கொண்டு தங்­க­ளது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர்.

இந் நிகழ்வில் வாழைச்­சேனை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எம்.டி.டி.நிலங்க, வாழைச்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எஸ்.எம்.எல்.ஆர். பண்­டார ஆகியோர் கலந்து கொண்டு உரை­யாற்­றி­னர்.

அதில், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எம்.டி.டி.நிலங்க உரை நிகழ்த்­து­கையில்,
ஐஸ் போதைப்­பொ­ருளை பாவிக்­கக்­கூ­டி­ய­வர்கள் மிகக்­கு­று­கிய காலத்­துக்குள் மர­ணித்துப் போகக்­கூ­டிய ஒரு மோச­மான நிலை காணப்­ப­டு­கி­றது.

தற்­போது அதி­க­ள­வி­லான பெண்­களும் ஐஸ் போதைப்­பொ­ருட்­களை பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இதனை நாம் மிக விரை­வாக இல்­லா­ம­லாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை எடுக்க வேண்டும்.

பெண்கள் அதிகம் வீட்­டுக்குள் இருப்­ப­தனால் அவர்கள் எங்கே சென்று பயன்­ப­டுத்­து­கி­றார்கள் என்று தேடித்­தி­ரிய தேவை­யில்லை. வீட்­டுக்குள் இருந்தே அவர்­களை பாது­காத்துக் கொள்­ளலாம்.

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்­பொருள் பதார்த்­தங்­க­ளினால் செய்­யப்­ப­டு­கின்ற லொலிபொப் மாத்­தி­ரைகள் வடி­வி­லான இந்த போதைப் பழக்­கத்தை உங்­க­ளு­டைய சிறார்­க­ளுக்கு இவர்கள் அறி­மு­கப்­ப­டுத்­த­லாம்.கட்­டா­ய­மாக உங்­க­ளது பிள்­ளைகள் விட­யத்தில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

இவ்­வா­றான போதைப்­பொருள் தடுப்பு வேலை­களை நீங்கள் கடந்த காலங்க­ளில் ஆரம்­பித்திருக்க வேண்­டும்

இப்­போ­தா­வது நீங்கள் ஆரம்­பித்து இருப்­பது நல்­லது. இது நிச்­ச­ய­மாக உங்­க­ளு­டைய எதிர்­கால சந்­த­தியை பாது­காக்கும்.

இந்த போதைப்­பொருள் பழக்­கத்தில் இருந்து உங்­க­ளு­டைய சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக, அத்­தோடு தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்க நாங்கள் முழு­மை­யான பங்­க­ளிப்பை செய்வோம் என்றார்.

அதே­போன்று, வாழைச்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எஸ்.எம்.எல்.ஆர். பண்­டார பேசு­கையில்,
வாழைச்­சேனை பொலிஸ் பிரிவில் ஒரு வரு­டத்­துக்குள் மாத்­திரம் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ராக அதி­க­ள­வி­லான முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
போதைப்­பொருள் விற்­ப­னை­களில் ஈடு­படும் நபர்­க­ளுக்கு நாங்கள் எந்­த­வித கரு­ணை­களும் காட்­ட­மாட்டோம். அவர்­களை கைது செய்து சட்­டத்தின் முன்­ நி­றுத்த அத்­தனை விட­யங்­க­ளையும் மேற்­கொள்வோம்.

வாழைச்­சேனை – நாவ­லடி பகு­தியில் 8 மாத குழந்­தையின் தாய் ஒரு­வரை போதைப்­பொ­ருள்­க­ளுடன் கைது செய்­துள்ளோம். அந்த பெண்ணை விடு­விக்கக் கோரி பல்­வே­று­பட்ட நபர்கள் எங்­க­ளுக்கு அழுத்­தங்­களை தந்­தார்கள். ஆனால் நாங்கள் அவர் மீது எந்­த­வித அனு­தா­பங்­களும் காட்­டாமல் குழந்­தை­யுடன் சிறையில் வைத்துள்ளோம்.
ஆரம்­பத்தில் எங்­களால் மட்­டும்தான் இந்த பணி­களை செய்­ய­வேண்­டிய நிலை இருந்­தது. ஆனால் இப்­போது நீங்கள் எல்லாம் சமூ­கத்­தோடு சேர்ந்து இதற்கு எதி­ராக வந்­தி­ருப்­பது எங்­க­ளுக்கு பெரி­ய­தொரு பலத்தை தந்­தி­ருக்­கி­றது.

இந்த போதைப்­பொருள் பாவ­னையில் இருந்து உங்­க­ளது சமூ­கத்தை பாது­காக்க நீங்கள் எடுத்துக் கொண்­டுள்ள முயற்­சிக்கு நான் மிகவும் தலை­வ­ணங்­கு­கிறேன்.
பள்­ளி­வா­சல்கள், சமய நிறு­வ­னங்கள் எங்­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றனர். இது­போ­லவே தொடர்ந்தும் இந்த விழிப்­பு­ணர்வு திட்டங்களை நீங்கள் ஏற்படுத்துங்கள்.

நாங்கள் அவர்­க­ளுக்கு எதி­ரான சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை எந்­த­வி­த­மான தய­வு­தாட்­சணம் இல்­லாமல் ஏற்­ப­டுத்தி தருவோம் என்றார்.

இவ்­வி­ழிப்­பு­ணர்வு நிகழ்வில் சிரேஸ்ட சட்­டத்­த­ரணி எம்.எம்.எம்.ராசிக், வாழைச்­சேனை பிர­தேச சபை உறுப்­பினர் ஏ.எல்.ஏ.கபூர், மற்றும் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கத்­தி­னர்கள், பிர­தேச முக்­கி­யஸ்­தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.