முஸ்லிம் சமூகத்தின் மீது ஏன் இந்த பாரபட்சம்?

0 325

எம்.எம். ஸுஹைர்
(ஜனாதிபதி சட்டத்தரணி)

10.01.2023 செவ்­வாய்க்­கி­ழமை ‘த ஐலன்ட்’ பத்­தி­ரி­கையில் பிர­சு­ர­மான ஆங்­கிலக்
கட்­டு­ரையின் தமி­ழாக்கம்

 

சில அரச நிறு­வ­னங்­க­ளுக்கும், நாட்டின் முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் அங்­க­மாகத் திகழும் நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே தொடரும் பகைமை அல்­லது பனிப்போர், முஸ்லிம் சமூ­கத்தில் ஆழ­மான கரி­ச­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இப் பனிப்­போ­ரா­னது, உல­க­ளா­விய கண்­ட­னத்­துக்கு உள்­ளா­கிய, 2019.04.21 இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை மைய­மாகக் கொண்­டுள்­ளது என்­பது தெளி­வா­னது. முஸ்லிம் சமூகம் பிரத்­தி­யே­க­மாக அத்­தாக்­கு­த­லுக்கு எதி­ராகத் தமது ஏகோ­பித்த கண்­ட­னத்­தையும் வெளி­யிட்­டுள்ள போதிலும், அத்­தாக்­குதல் நடந்­தேறி நான்கு ஆண்­டுகள் நெருங்­கு­கின்ற நிலை­யிலும் முஸ்லிம் சமூ­கத்­தி­னதும், அதன் நிறு­வ­னங்­க­ளி­னதும் நலன்கள் தொடர்ச்­சி­யாக மீறப்­பட்டே வரு­கின்­றன.

அத்­த­கைய பகை­யு­ணர்­வுசார் திணிப்பு பார­பட்­ச­மா­ன­தாக உள்­ள­தோடு, ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முறையில் 2012ஆம் ஆண்டு வெறுப்புப் பிரச்­சா­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட சிறு­பான்மை விரோதச் செயல்­பா­டு­களின் ஓர் அங்­க­மா­கவும் காணப்­ப­டு­கி­றது. நாட்டின் முஸ்­லிம்­களைத் தொடர்ச்­சி­யாக வேற்­று­மைப்­ப­டுத்­து­வ­திலும், தீவி­ர­ம­யப்­ப­டுத்­து­வ­திலும், போரை ஆத­ரிக்கும் வெளி­நாட்டுக் கரங்­க­ளி­னதும், அவர்­க­ளது முக­வர்­க­ளி­னதும் வகி­பாகம் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட வேண்டும்.

நாட்டின் பொரு­ளா­தாரம் கடு­மை­யான நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யி­ருக்கும் நிலையில், நாட்டை முரண்­பாட்­டுக்குள் இட்டுச் செல்லும் வகையில் சமூ­கங்­க­ளுக்கு இடையே அல்­லது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் பிரி­வி­னை­களைத் தூண்­டு­வ­தற்கு எவ­ரையும் அனு­ம­திக்க முடி­யாது.

முஸ்­லிம்கள் மற்றும் அவர்­க­ளது கடந்த கால மற்றும் சம­கால சமயப் பிர­மு­கர்கள், அதன் வர­லாற்று நிறு­வ­னங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகி­யன தொடர்ச்­சி­யாகத் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சமூகம் கவ­லைப்­ப­டு­கி­றது. அத்­த­கைய செயல்­பா­டுகள் ஒடுக்­கு­மு­றைக்­குட்­பட்­ட­தா­கவும், இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மற்றும் பல சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களை மீறும் செய­லா­கவும் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் கரு­தப்­ப­டலாம். சமூகம் என்­பது வேறா­னது@ தீவி­ர­வா­தி­களும், குற்­ற­வா­ளி­களும் வேறா­ன­வர்கள்.

உதா­ர­ண­மாக, நாட்டில் அமைதி மற்றும் சமூக ஒழுங்கு என்­பன பேணப்­பட வேண்டும் என்­ப­தற்­காக, அர­க­லய செயல்­பாட்­டா­ளர்­களைத் தீவி­ர­வா­திகள் என முத்­திரை குத்த முடி­யாது. 1971 மற்றும் 1989ஆம் ஆண்­டு­களில் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரின் எழுச்சி மற்றும் 1970களில் வட இலங்­கையில் இரண்டு முக்­கிய சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளாக எல்.டீ.டீ.ஈ.யின் எழுச்சி ஆகி­ய­வற்­றி­லி­ருந்து தேசிய அர­சியல் தலை­வர்கள் பாடம் கற்­றுக்­கொண்டு, வீதியில் இறங்கி ஓர் எளிய போராட்­டத்­தைக்­கூட நடத்தும் திற­னைக்­கூட கொண்­டி­ராத முஸ்லிம் சமூ­கத்­துடன் இவ்­வாறு நடந்து கொள்­வது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும்.

அமை­தி­வாத அர­சியல் மற்றும் வணிகத் தலை­மைத்­து­வத்தின் பிடியில் இச்­ச­மூகம் இருக்க, உணர்ச்­சி­வ­சப்­ப­டக்­கூ­டிய மத மற்றும் கலாச்­சாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு எதி­ரான ஒடுக்­கு­மு­றை­யான செயல்­பா­டுகள், வன்­மு­றையைத் தூண்­டக்­கூ­டிய புதிய தீவி­ர­ம­யப்­ப­டுத்தும் சக்­தி­களை உரு­வாக்­கலாம். எவரும் வன்­மு­றையில் ஈடு­ப­டு­வதை இந்­நாட்டால் அனு­ம­திக்க முடி­யாது. ஆகவே, இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்குத் துரி­த­மாகத் தீர்­வு­கா­ணப்­பட வேண்டும்.

நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும், நடு­நிலை தவ­றாமல் செயல்­ப­டு­வ­தற்கும், சமூ­கத்­துக்கு மத்­தியில் ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும், நம்­பிக்­கையை ஊக்­கு­விப்­ப­தற்கும், அர­சாங்­கத்தின் உட­னடிக் கவ­னத்தை வேண்டி நிற்கும் பிரச்­சி­னைகள் பல இருப்­பினும், அவற்றுள் சில­வற்றைக் கீழே பட்­டி­ய­லிட முடியும்.

முஸ்லிம் சிவில் சமூகம் மற்றும் மதப் பிர­மு­கர்கள் வாய­டைக்­கப்­பட்­டனர்: எந்­த­வொரு முறைப்­பாடோ, நீதி­மன்ற உத்­த­ரவோ அல்­லது சட்­ட­ரீ­தி­யான அதி­கா­ரமோ இன்றி, பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புக்­களை வெளிப்­ப­டை­யாக சோத­னைக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு அரச பொறி­மு­றைகள் தொடர்ச்­சி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளன. இந்தத் தொடர்ச்­சி­யான வரு­கை­களும், தொலை­பேசி அழைப்­புக்­களும், அத்­த­கைய முஸ்லிம் அமைப்­புக்கள் சமூ­கத்­துக்கும் நாட்­டுக்கும் ஆற்­றக்­கூ­டிய சேவையை குறைக்­கவும், மட்­டுப்­ப­டுத்­தவும் செய்­துள்­ளன. இவ்­வி­ட­யத்தில், ஒன்­று­கூ­டு­வ­தற்­கான சுதந்­திரம் மற்றும் பேச்சுச் சுதந்­தி­ரத்தை மீறும் செயல்­பா­டு­களில் அரச நிறு­வ­னங்கள் ஈடு­பட்­டுள்­ள­தாக மனித உரி­மை­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னிகர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அண்மைக் காலத்தில், மதிப்­பிற்­கு­ரிய முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களில் சிலர் அரச நிறு­வ­னங்­களால் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டனர். இச்­செயல் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­ப­டாத துன்­பு­றுத்­த­லாகக் கரு­தப்­ப­டலாம். ஒரு சில தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுக்கு சில அரச நிறு­வ­னங்கள் நிதி­யு­த­வி­களைச் செய்­துள்­ள­தாக ஒரு குற்­றச்­சாட்டு நிலவும் இப்­பின்­ன­ணியில் – அந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் ஆதா­ர­மற்­ற­வை­யாக இருப்­பினும் – அனைத்து அரச நிறு­வ­னங்­களும் பாரா­ளு­மன்­றத்­துக்குப் பொறுப்புக் கூறு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மாத்­திரம் வழக்குத் தொடுத்தல்: பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு, ஒக்­டோபர் 23ஆம் திகதி 2019 எனத் திக­தி­யி­டப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான தம்­மு­டைய அறிக்­கை­யிலும் (பக்கம் 93லிருந்து), ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு, ஜன­வரி 31ஆம் திகதி 2021 எனத் திக­தி­யி­டப்­பட்ட தம்­மு­டைய இறுதி அறிக்­கை­யிலும், ‘முஸ்­லிம்­களைத் தாக்­கு­வ­தற்­காகப் பெரும்­பான்மை இன­வாதக் குழுக்­களைத் தூண்­டி­விட்­ட­மையே, முஸ்லிம் இளை­ஞர்­களைத் தீவி­ர­வா­தத்­துக்குள் தள்ளி, அதன் விளை­வாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­குதல் இடம்­பெற்­றது’ என நாட்டின் பெரும்­பான்மை இன­வா­தத்தைச் சாடி­யுள்­ளது. எனினும், மேற்­கு­றிப்­பிட்ட அறிக்­கை­களின் படி, தொட­ரப்­பட்ட வழக்கு நட­வ­டிக்­கைகள் அனைத்தும் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­தாக மாத்­தி­ரமே அமைந்­தி­ருந்­த­துடன், அளுத்­கமை (2014), கின்­தொட்டை (2017), அம்­பாறை (2018) மற்றும் திகன (2018) ஆகிய இடங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றையில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வொரு வழக்கும் தொடுக்­கப்­ப­ட­வில்லை. பெரும்­பான்மை தீவி­ர­வா­தத்­தி­ட­மி­ருந்து சிறு­பான்­மை­யினர் பாது­காப்­பாக உள்­ளனர் என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சி­னதும் அதன் பாது­காப்புத் தரப்­பி­ன­ரதும் பொறுப்­பாகும். இதுவே சிறு­பான்மைத் தீவி­ர­வா­தத்தை தடுப்­ப­தற்­கான சிறந்த உத்­த­ர­வா­த­மு­மாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் என்ற போர்­வையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பனிப்போர்: அதே நேரம், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வங்கள் பர­வ­லா­கவும், நியா­யப்­ப­டுத்த முடி­யாத வித­மா­கவும், இஸ்லாம், புனித அல்­குர்ஆன், இஸ்­லா­மியப் புத்­த­கங்கள், மதிப்­புக்­கு­ரிய வெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு இஸ்­லா­மிய அறி­ஞர்கள், பள்­ளி­வா­யல்கள், மத்­ர­ஸாக்கள், இஸ்­லா­மியத் திரு­மணச் சட்டம், முஸ்லிம் சிவில் நிறு­வ­னங்கள் என அனைத்­தையும் தாக்­கு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. மத சகிப்­புத்­தன்­மை­யின்மை மற்றும் மதங்­க­ளுக்கு இடை­யே­யான முறு­கலின் மூல கார­ணியை அடை­யாளம் காண்­ப­தற்கும், இன மற்றும் மதங்­க­ளுக்கு இடை­யே­யான நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், அர­சாங்கம் உறு­தி­யான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்ள வேண்டும் என மேற்­கு­றித்த அறிக்­கையில் பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருந்­தது (பக்கம் 372). உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் என்ற போர்­வையில், திரை­ம­றைவில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக ஒரு பனிப்போர் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டாத இப்போர், சமூ­கத்­தி­லுள்ள ஒரு சிலரைத் தீவி­ர­ம­யப்­ப­டுத்தி, ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உத­வியை நாடு­வ­தற்கு அவர்­களை வற்­பு­றுத்தும். அவர்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான உதவி எமக்குத் தேவைப்­ப­டு­கி­றது.

தாக்­கு­தலைத் தடுப்­பதில் காணப்­பட்ட குற்­ற­வியல் சார்ந்த அசட்டை: 21/4 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு போதிய கால அவ­காசம் இருந்தும், பொறுப்­பி­லி­ருந்­த­வர்கள் அத்­தீ­வி­ர­வாதத் தாக்­கு­தல்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு எவ்­விதத் தற்­காப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் கைகொள்­ளாமல் 16 நாட்­க­ளுக்கு மேலாக அதனைப் புறக்­க­ணித்து வந்­தமை, திருச்­சபைத் தலை­வர்­களால் தொடர்ந்தும் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரும் ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாகும். பெப்­ர­வரி 11ஆம் திகதி வெளி­யான லங்­கா­தீப தின­சரி இதழின் பிர­தான தலைப்புச் செய்­தியின் படி, அப்­போ­தைய ‘குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தடுப்­ப­தற்கும், தற்­கொலைக் குண்­டு­தாரி ஸஹ்ரான் ஹாஷிமைக் கைது செய்­வ­தற்கும் வாய்ப்­புக்கள் இருந்த போதும் அவர்கள் அதனைச் செய்­ய­வில்லை’ என குற்றப் புல­னாய்வுப் பிரிவே நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்­தது.

‘ஏகத்­துவம் அல்­லது தௌஹீத்’ அல்­லது ‘வஹா­பிகள்’ மீதான தாக்­குதல் இஸ்­லாத்தின் மீதான தாக்­கு­த­லாகும்: கிறிஸ்­தவக் கொள்­கை­யான ‘திரித்­து­வம்’, அதி­லி­ருந்து வேறு­ப­டுத்திக் காட்டும், ‘தௌஹீத்’ என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற, ‘ஓரிறைக் கொள்­கையை’ ஒரு தீவி­ர­வாதச் சிந்­தாந்­த­மாகச் சித்­த­ரிப்­ப­தற்­கான முயற்­சிகள் சமீப கால­மாக சில அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. எனினும், ஓரிறைக் கொள்­கையை நம்­பிக்கை கொள்­வ­தென்­பது – ‘ஸுஃபிகள்’ என அழைக்­கப்­ப­டுவோர் மற்றும் ‘வஹா­பிகள்’ (ஏகத்­து­வ­வா­திகள்) என இழி­வாக அழைக்­கப்­ப­டுவோர் உள்­ள­டங்­க­லாக – இஸ்­லா­மியக் கோட்­பாட்டின் அடிப்­ப­டைசார் அம்­ச­மாகும். இச்­செ­யற்­பா­டுகள் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 10ஐ மீறும் செய­லாகும். பிர­சித்த பெற்ற சவூதி அரே­பிய இஸ்­லா­மிய அறி­ஞ­ரான முஹம்­மது இப்னு அப்துல் வஹாப் (1703 – 1787) மற்றும் ஏனைய அறி­ஞர்கள் மற்றும் இலங்கை மற்றும் இந்­தி­யாவைத் தள­மாகக் கொண்டு இயங்­கி­வரும் இஸ்­லா­மிய அமைப்­புக்கள் தீவி­ர­வாதச் சிந்­தாந்­தத்தைப் பரப்­பு­வ­தாக, எவ்­வித ஆதா­ரங்­களும் இன்றி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர். இக்­குற்­றச்­சாட்­டுகள், உல­க­ளவில் நன்கு அறி­யப்­பட்ட, போரை ஆத­ரிக்கும் மேற்­கத்­திய நாடு­களின் இஸ்­லா­மி­ய-­முஸ்லிம் வெறுப்புப் பிர­சா­ரங்­களை இலங்­கை­யி­லுள்ள சில வெறுப்புப் பிர­சா­ர­கர்கள் முட்­டாள்­த­ன­மாகப் பின்­பற்­று­வதை நியா­யப்­ப­டுத்தும் வீண் முயற்­சி­க­ளாகும். இவை பெரும்­பான்மை சமூ­கத்­தி­லி­ருந்து சிறு­பான்மை சமூ­கத்தை பிள­வு­ப­டுத்­தவும், சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்தில் பிரி­வி­னை­களை உண்­டாக்­கவும் தற்­போது கையா­ளப்­படும், ஏற்­றுக்­கொள்ள முடி­யாத முயற்­சி­யாகும்.

பார­பட்­ச­மான கட்­டுப்­பா­டுகள்: இஸ்­லா­மியப் பாடப் புத்­த­கங்கள் மீது மாத்­திரம் விதிக்­கப்­பட்­டுள்ள பார­பட்­ச­மான கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக புனித அல்-­குர்ஆன் மற்றும் ஏனைய இஸ்­லா­மிய நூல்­களை இறக்­கு­மதி செய்­வதில் பாரிய நெருக்­க­டியை முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கு­கின்­றனர். டாக்டர் ஸாகிர் நாயக் அவர்­களின் “PEACE TV” எனும் பிர­பல்­ய­மான தொலைக்­காட்சி அலை­வ­ரிசை தடை­செய்­யப்­பட்­டுள்­ளமை முஸ்­லிம்­களின் தக­வ­ல­றியும் உரி­மையை மீறு­வ­தாக அமைந்­துள்ள அதே வேளை, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பல தரப்­பட்ட எதிர்ப்புப் பிரச்­சா­ரங்­களில் ஈடு­ப­டக்­கூ­டிய இந்­தியத் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சைகள் தடை­யின்றி ஒளி­ப­ரப்புச் செய்­யப்­ப­டு­கின்­றன.

இஸ்­லா­மியப் பாடப் புத்­த­கங்கள் திருத்­தி­ய­மைக்­கப்­பட வேண்டும் என வற்­பு­றுத்­தப்­ப­டு­கின்­றமை: பாட­சா­லை­களில் முஸ்லிம் மாண­வர்கள் பயன்­ப­டுத்தும் பாடப் புத்­த­கங்­களைத் திருத்­தி­ய­மைக்­கு­மாறு, இஸ்லாம் பற்­றிய அறிவு இல்­லாத அல்­லது இஸ்­லாத்தை கண்­ணி­யப்­ப­டுத்­தாத நபர்­களைக் கொண்டு அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணாக, வற்­பு­றுத்­தப்­ப­டு­கின்­றனர். இஸ்­லா­மிய கல்­வி­யா­ளர்கள் இப்­பா­டப்­புத்­த­கங்­களைப் புதுப்­பிக்கும் தொடர்ச்­சி­யான செயல்­மு­றையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தாலும் கூட, இத்­த­கைய தடைகள் முஸ்­லிம்கள் மீது மட்­டுமே விதிக்­கப்­பட்­டுள்­ளன.

வட கிழக்கு: தமிழ் சமூகம் முகம் கொடுத்து வரும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­கா­ணப்­பட வேண்டும். அவ்­வாறு செய்­வதால், கிழக்­குவாழ் முஸ்­லிம்­க­ளுக்குப் புதி­தாகப் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டக்­கூ­டாது. எல்.டீ.டீ.ஈ. காலத்தில் கிழக்­குவாழ் முஸ்லிம் விவ­சா­யி­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டமை போன்ற அநீ­திகள் தீர்வை வேண்டி நிற்­கின்­றன.

முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்கு என 1990ஆம் ஆண்டு அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­டிடம் கைவி­டப்­பட்­டமை: முஸ்லிம் விவ­கார அமைச்சு வேறாக அமைக்­கப்­பட வேண்டும் என அப்­போ­தைய கலாச்­சார விவ­கா­ரங்கள் அமைச்­ச­ராக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த லக்ஷ்மன் ஜய­கொடி அவர்­களின் முன்­மொ­ழி­வுக்கு அமை­வாக, ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க அவர்­களின் தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை, முன்­மொ­ழி­யப்­பட்ட கட்­டி­டத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கி­யது. எனினும், அது புத்­த­சா­சன அமைச்சின் பரிந்­து­ரையின் பெயரில், அரச முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்கு வெளியில் உள்ள ஏனைய நிறு­வ­னங்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இது 1999ஆம் ஆண்டின் அமைச்­ச­ரவை அனு­ம­தியை மீறு­வ­தாக அமைந்­துள்­ளது. இக்­கட்­டி­டத்தில் தற்­போது முஸ்லிம் சமயப் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்கி வரு­கி­றது. முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுடன் தொடர்­பு­டைய, முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தின் பிரிவு 6 மற்றும் 7க்கு உட்­பட்­ட­தான காதிகள் சபை, கொழும்­பி­லுள்ள காதி நீதி­மன்­றங்கள், ஹஜ் குழுக்கள், மதி­யுரைச் சபைகள் போன்ற பல அரச நிறு­வ­னங்கள், தமது தொழிற்­பாட்­டுக்கு முறை­யான இட­வ­ச­தியை வேண்டி நிற்­கின்­றன. வக்பு சபை, வக்பு நியா­ய­சபை மற்றும் முஸ்லிம் சமயப் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுக்கும் தமது செயல்­பா­டு­க­ளுக்­காக மேல­திக இட­வ­சதி தேவைப்­ப­டு­கி­றது. உத்­தி­யோ­க­பூர்வ விவ­கா­ரங்­க­ளுக்­காக இந்­நி­று­வ­னங்­க­ளுக்குச் சமூ­க­ம­ளிப்­ப­தற்கு கொழும்பு நோக்கிப் பய­ணிப்­ப­வர்­க­ளுக்குத் தமது காரி­யங்­களை ஆற்­றிக்­கொள்ளும் வித­மாகப் போதி­ய­ளவு இட­வ­ச­திகள் அங்கு காணப்­ப­டு­வ­தில்லை. 2000ஆம் ஆண்டு முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்கு என அப்போதைய பிரதமரும், தன்னுடைய தந்தையுமான ரத்னசிரி விக்ரமாநாயக்கவினால் வழங்கப்பட்ட இடத்தை, தற்­போது ஏன் புத்­த­சா­சன அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க மீளப் பெற்­றுக்­கொள்ள முயல்­கிறார்? புத்­த­சா­சன அமைச்சு, இந்­துக்கள், முஸ்­லிம்கள் மற்றும் கிறிஸ்­த­வர்­களின் கலாச்­சார மற்றும் மத விவ­கா­ரங்­களைக் கையா­ளாது, சிறு­பான்­மை­யி­ன­ருடன் சர்ச்­சைக்­கு­ரிய பிரச்­சி­னை­களில் ஈடு­ப­டு­வதைத் தவிர்ந்­து­கொள்ள வேண்டும்.

பள்­ளி­வாயல் விவ­கா­ரங்கள் தொடர்­பாகப் பரிச்­ச­ய­மற்ற உத்­தி­யோ­கத்­தரை முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கான மேல­திக பணிப்­பா­ள­ராக நிய­மித்தல்: மதிப்­பிற்­கு­ரிய கிறிஸ்­தவப் பெண் உத்­தி­யோ­கத்தர் ஒருவர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய மத, முஸ்லிம் கலாசார மற்றும் பள்ளிவாயல் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதில் அவருக்குள்ள இயலுமை கேள்விக்குரியதாகும். இவ்விடயங்களைத் திறமையுடன் கையாளக்கூடிய மூன்று முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இப்பதவியை அவர் தற்போது வரை ஏற்கவில்லை.

கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்கள் 3 ½ வருடங்களுக்கு மேலாகப் பிணை வழங்கப்படாமல் அல்லது நியாயமான விசாரணைகள் நடத்தப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்: 21/4 தாக்குதல்கள் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கைது செய்வதற்கும், அவர்களைப் பல மாதங்கள் தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டமை யாவரும் அறிந்த உண்மையே. பெருமளவானோருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், பெரும்பாலான வழக்குகளில் பிணை வழங்கப்படுவதற்கான சட்டமா அதிபரின் ஒப்புதல் இல்லாமையால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு நியாயமான விசாரணையைக் கூட நடத்த முடியாமல் உள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.