ஏறாவூரை சோகத்தில் ஆழ்த்திய இரு இளவயது மரணங்கள்!

0 398

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதில் ஏற்­பட்ட இரண்டு திடீர் மர­ணங்கள் அப்­ப­கு­தியை பெரும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை (6) ஆம் திகதி ஏறாவூர் – மீரா­கேணி மைய­வாடி வீதியைச் சேர்ந்த ஹபீப் றிபத் எனும் 25 வய­து­டைய இளைஞன் சவூதி நாட்டில் இடம்­பெற்ற வாகன விபத்தில் மர­ண­ம­டைந்­துள்ளார்.

ஏறாவூர் நகர சபையில் பணி­பு­ரியும் ஜுனைதீன், ஆயிஷா தம்­ப­தி­யின் மக­னான ஹபீப் றிபத் சுமார் ஒரு வரு­டத்­துக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவூதி அல் மறாய் நிறு­வ­னத்தில் வேலைக்­காக சென்­ற­தாக குடும்­பத்­தினர் தெரி­வித்­தனர்.
இவ்­வாறு வேலைக்குச் சென்ற இவர் கடந்த 06.01.2023 ஆம் திகதி சவூதி நேரம் பிற்­பகல் 5 மணி­ய­ளவில் வாகன விபத்தில் சிக்கி மர­ண­ம­டைந்­துள்­ள­தாக தமக்கு தகவல் கிடைத்­த­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

 

சவூதி விபத்தில் பலியான ஹபீப் றிபத்

குறித்த இளைஞன் தான் வேலை செய்யும் நிறு­வன வாக­னத்தில் சார­தி­யுடன் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது அங்கு இடம்­பெற்ற விபத்தில் ஸ்தலத்­திலே மர­ண­ம­டைந்­துள்ளார்.

அந்­நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பனி­மூட்டம் கார­ண­மா­கவே இவ் விபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக அறிய முடிகிறது.

இவ்­வாறு மர­ண­ம­டைந்த இளைஞன் ஹபீப் றிபதின் ஜனா­ஸாவை சவூதியிலேயே நல்­ல­டக்கம் செய்ய அவ­ரது குடும்­பத்­தினர் அனு­மதி வழங்­கி­யுள்­ளனர்.
இவ்­வாறு மர­ண­ம­டைந்த இளை­ஞனின் சகோ­தரர் ஒரு­வரும் சவூதி நாட்டில் பணி­பு­ரிந்து வரு­வ­தா­கவும், அவர் ஜனா­ஸாவை வைத்­தி­ய­சா­லையில் பொறுப்பேற்று நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான ஏற்பாடுகளை மேற்­கொண்­ட­தா­கவும் குடும்­பத்­தினர் மேலும் தெரி­வித்­தனர்.

நான்கு பிள்­ளை­களைக் கொண்ட குடும்­பத்தைச் சேர்ந்த ஹபீப் றிபத் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாட­சா­லையின் பழைய மாண­வ­ராவார்.

தான் பிறந்து வளர்ந்த ஏறாவூர் பகுதில் திரு­மணம் முடிப்­ப­தற்­காக வேண்டி திரு­மண பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வந்த நிலை­யிலே இவ் இளைஞன் இவ்­வாறு மர­ண­ம­டைந்­துள்ளார்.

அவர் இன்னும் இரண்டு வரு­டங்­களின் பின்னர் நாட்­டுக்கு வந்து திரு­மண பந்­தத்தில் இணைந்து கொள்­வ­தற்­கான ஏற்­பாட்டில் இருந்­த­தா­கவும் நண்­பர்கள் தெரி­வித்­தனர்.
இவ்­வா­றான சோகச் சம்­பவம் நடை­பெற்று மறுநாள் ஏறாவூர் மீரா­கேணி பகு­தியில் மற்­று­மொரு துயரச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அதுதான் கடந்த சனிக்­கி­ழமை 7 ஆம் திகதி ஏறாவூர் சவுக்­கடி கடலில் நீரா­டிய மாணவன் நீரில் மூழ்கி மர­ண­ம­டைந்த சம்­ப­வ­மாகும்.

நீரில் மூழ்கி மரணித்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான்

ஏறாவூர் மீரா­கேணி ஹுதாப் பள்ளி வீதியைச் சேர்ந்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான் எனும் மாண­வனே நீரில் மூழ்கி மர­ண­ம­டைந்­துள்ளார்.

இவ்­வாறு மர­ண­ம­டைந்த மாண­வனின் தந்தை சுமார் மூன்­றரை வரு­டங்­களின் பின்னர் மாணவன் மர­ணிப்­ப­தற்கு ஒரு நாளைக்கு முன்பே அதா­வது வெள்­ளிக்­கி­ழமை (6) ஆம் திகதி நாட்­டுக்கு வந்­துள்ளார்.

இவ்­வாறு நாட்­டுக்கு வந்த அவர் குடும்­பத்­துடன் சந்­தோ­சமாக ஏறாவூர் சவுக்­கடி கட­லுக்கு சென்ற போதே இந்த துய­ரச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வாறு நீரில் மூழ்கி மர­ண­ம­டைந்த மனாப்தீன் அப்துர் ரஹ்மான் எனும் மாணவன் ஏறாவூர் அலிகார் தேசிய பாட­சா­லையில் உயர்­தர கலைப்­பி­ரிவில் கற்று வந்­துள்ளார்.
இவர், இம்­மாதம் 23 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்­சைக்கும் தோற்­ற­வி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தந்தை, சகோ­தரர் ஆகி­யோ­ருடன் கடலில் நீராடிக் கொண்­டி­ருந்த அப்துர் ரஹ்மான் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி மர­ண­ம­டைந்­துள்ளார்.

அவ­ருடன் நீராடிக் கொண்­டி­ருந்த அவ­ரது சகோ­தரர் உபைதுர் ரஹ்­மானும் நீரில் மூழ்கி காப்­பாற்­றப்­பற்று மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

நீரில் மூழ்கி மர­ண­ம­டைந்த அப்துர் ரஹ்­மானின் ஜனாஸா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (8) காலை 10 மணி­ய­ளவில் ஏறாவூர் காட்­டுப்­பள்ளி மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இவ்­வாறு ஏறாவூர் மீரா­கேணி பகு­தியில் இடம்பெற்ற இரண்டு இளைஞர்களின் திடீர் மரணம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மர­ண­ம­டைந்த இரு இளைஞர்களின் பாவங்­களை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்­னித்து அவர்­க­ளுக்கு உயர்­த­ர­மான சுவனம் கிடைக்­கவும், அவர்­களின் பிரிவால் கவ­லை­யுடன் வாழ்ந்­து­வரும் குடும்­பத்­தா­ருக்கு அல்லாஹ் மன ஆறு­தலை வழங்­கவும் பிரார்த்திப்போமாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.