பள்ளிவாசல், குழு மோதல்கள் சமரசத்தை ஏற்படுத்த உலமா சபை முயற்சி

0 357

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டின் சில பகு­தி­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் அண்மைக் கால­மாக இடம் பெற்­று­வரும் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் சம்­ப­வங்கள், முரண்­பா­டு­க­ளை­ய­டுத்து அரச புல­னாய்வுப் பிரிவு அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களின் விப­ரங்­களைச் சேக­ரித்து வரும் நிலையில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை இவ்­வா­றான மோதல் சம்­ப­வங்கள் ஏற்­ப­டாத வண்ணம் தடுக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­றது.

இது தொடர்­பாக அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் நிர்­வாகக் குழு பல கட்ட பேச்சுவார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான பேச்­சு­வார்த்­தை­களின் முன்­னேற்றம் குறித்து ‘விடி­வெள்ளி’ உலமா சபையின் உயர்­ப­தவி நிலை உல­மாக்­களைத் தொடர்பு கொண்டு வின­வி­யது.

‘பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்று வரும் இவ்­வா­றான மோதல் சம்­ப­வங்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு அரச தரப்பு உல­மா­ச­பையின் ஒத்­து­ழைப்­பி­னைக்­கோ­ரி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கி­றது.

‘இலங்கை முஸ்­லிம்கள் அனை­வரும் கொள்கை முரண்­பா­டு­களைக் களைந்து பொது நோக்­கத்­துக்­காக ஒன்று பட­வேண்டும். அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை இது தொடர்பில் வழி­காட்­டல்­களை வெளி­யிட்­டுள்­ளது.

முஸ்­லிம்கள் எந்த அமைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் வேறு­பா­டு­களை மறந்து ஒன்றுபட­ வேண்டும் என்றே வழி­காட்­டல்கள் தெரி­விக்­கின்­றன.

உலமா சபையின் வழி­காட்­டல்­களை ஏற்­றுக்­கொள்­ளாது செயற்­படும் அமைப்­பு­களின் உறுப்­பி­னர்கள் மோதல் சம்­ப­வங்­களில் ஈடு­பட்டால் அவர்­க­ளு­க்­கு எதி­ராக உலமா சபை­யினால் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. உலமா சபையின் அங்­கத்­த­வர்­க­ளாக இருந்தால் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க முடியும். இந்­நி­லையில் முஸ்­லிம்கள் அனை­வரும், அனைத்­து­அ­மைப்­பு­களும், வேறு­பா­டு­களை மறந்து உலமா சபையின் தலை­மைத்­து­வத்தின் கீழ் ஒன்றுபட்டு வழி­காட்­டல்­களைப் பின்­பற்ற வேண்டும். இவ்­வா­றான ஒரு நிலைமை உரு­வானால் மாத்­தி­ரமே பள்­ளி­வா­சல்­களில் இடம் பெறும் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­களைத் தவிர்க்க முடியும் என உலமா சபையின் உயர்­மட்ட பத­வி­நிலை உல­மாக்கள் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தனர்.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வக்பு சபை மற்றும் அர­சாங்­கத்தின் உயர்­மட்­டத்­தி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ள­தாகத் தெரியவருகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.