மஹிந்தவின் இல்லத்தில் மீலாத் விழா

0 233

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மீலாத் நபி விழா கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்­பி­லுள்ள அவரது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நடை­பெற்­றது.

மாலை 5.00 மணிக்கு ஆரம்­ப­மான இந்­நி­கழ்­வுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலைமை வகித்தார். நிகழ்வில் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மர்ஜான் பளீல், காதர்­மஸ்தான் உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.
மத்­திய கிழக்கு நாடு­களின் தூது­வர்கள் மற்றும் இரா­ஜ­தந்­தி­ரிகள் எனப்­ப­லரும் கலந்து கொண்­டனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரி­யாரும் பங்கு கொண்­டி­ருந்தார்.

ஆங்­கி­லத்­திலும் சிங்­க­ளத்­திலும் பயான் நிகழ்த்­தப்­பட்­ட­துடன் இஸ்­லா­மிய நிகழ்­வு­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­ சப்ரி வர­வேற்புரையை நிகழ்த்­தினார்.

ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நன்­றி­யுரை வழங்­கினார். அவர் தனது உரையில் ‘முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மீலாத் நபி விழாவை தொடர்ந்து வரு­டாந்தம் ஏற்­பாடு செய்து சிறப்­பாக நடத்தி வரு­கிறார். அவர் ஜனா­தி­ப­தி­யாக, பிர­த­ம­ராக பதவி வகித்த காலத்தில் மாத்­தி­ர­மல்ல தற்­போது பத­வி­களில் இல்­லாத காலத்­திலும் இவ்விழாவை நடத்துகிறார். முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமானவர் அவர். அவரை நாம் பாராட்டுகிறோம்’ என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.