ஹேனமுல்ல முகாம் மக்களின் வீடில்லா திண்டாட்டம்!

0 390

எஸ்.என்.எம்.சுஹைல்

கொழும்பு நகரில் வாழும் மக்­களில் 50 வீதத்­திற்கும் அதி­க­மானோர் சேரிப்­பு­றங்கள் அல்­லது வாழ்­வ­தற்கு பொருத்­த­மற்ற குடி­யி­ருப்­பு­க­ளி­லேயே வாழ்­கின்­றனர். இத்­த­கைய வீடுகள் நகரின் 9 வீத­மான நிலப்­ப­ரப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றன. 2019 ஆம் ஆண்டில் 68,812 குடும்­பங்கள் இத்­த­கைய சூழலில் வாழ்­ந்த­தா­க நகர அபி­வித்தி அதி­கார சபை தெரி­விக்­கி­றது. எனினும், தற்­போது அத்­தொகை மேலும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்கு வாய்ப்பு உண்டு.

இந்த நெருக்­க­டிக்கு தீர்வு காண, ஆசிய உட்­கட்­ட­மைப்பு முத­லீட்டு வங்­கியின் நிதி உத­வி­யுடன் மாதம்­பிட்­டிய பகு­தியில் தொடர்­மாடிக் கட்­ட­டத்தை அமைக்கும் திட்­டத்தை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தது. இதற்­க­மைய 2019 ஆம் ஆண்டு இந்த வீட்­டுத்­திட்டம் திறந்து வைக்­கப்­பட்­டது.

இவ் வீட்டுத் திட்­டத்­திற்குள், மாதம்­பிட்டி, ஹேன­முல்ல முகாம் பகு­தி­யி­லுள்ள மக்­களும் உள்­வாங்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து இம் மக்கள் வசித்த பகு­திகள் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டன. வீடு­களின் கூரைகள் அகற்­றப்­பட்டு அவ்­வி­டத்­தி­லி­ருந்து மக்கள் வெளி­யேற பணிக்­கப்­பட்­டனர். எனினும், அப்­பி­ர­தே­சத்தில் வாட­கைக்கு குடி­யி­ருந்த அல்­லது ஒரே வீட்­டுக்குள் கூட்டுக் குடும்­ப­மாக இருந்­த­வர்­களில் சில குடும்­பங்­க­ளு­மாக 52 குடும்­பங்கள் வெளி­யே­றாது அவ்­வி­டத்­தி­லேயே இருந்­து­விட்­டனர்.

இந்­நி­லையில், குறித்த பகு­தியில் பிறந்து வளர்ந்த அல்­லது ஏற்­க­னவே இருப்­பி­ட­மி­ருந்து அப்­ப­கு­தியில் வெளி இடங்­களில் வசித்­த­வர்கள் மீண்டும் அப்­பி­ர­தே­சத்தில் குடி­யேறி சில வரு­டங்கள் அங்­கேயே இருந்து வந்­தனர்.

இந் நிலையில் ஹேன­முல்ல முகாம் பகு­தியில் சட்­ட­வி­ரோ­த­மாக இருக்கும் மக்­களை அங்­கி­ருந்து வெளி­யி­யே­றும்­படி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை கடந்த வாரம் அறி­வித்தல் அனுப்­பி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்­த­வர்கள் எதிர்ப்பு தெரி­வித்து ஆர்ப்­பாட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­த­துடன், தமக்கு வீடு­களை தரு­மாறு கோரிக்­கையும் விடுத்­தனர்.

இந்த விவ­காரம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கருத்­து­களை பெற்­றுக்­கொள்ள நேற்று முன்­தினம் மாதம்­பிட்டி, ஹேன­முல்ல முகாம் பகு­திக்கு சென்றோம்.

முஹம்­மது மொஹிதீன் சம்­சுதீன்
52 வயது
தொழி­லில்லை, 4 பிள்­ளைகள், இரு­தய நோயாளி, மனைவி தினக்­கூலி

“இந்த இடத்தில் 20 வரு­ட­மாக கூலிக்கு இருக்­கிறோம். தற்­போது இங்கு வீடுடைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ளோம். எமக்கு இருப்­ப­தற்கு சிறிய வீடொன்று தர வேண்டும். எம்மால் வாடகை செலுத்த முடி­யாது. மனைவி கூலித் தொழி­லுக்கு செல்­வதன் ஊடா­கவே எமது வாழ்­வா­தா­ரத்தைக் கொண்டு நடத்­து­கிறோம், எனவே, கூலி கொடுப்­ப­தற்கும் எங்­க­ளிடம் பண­மில்லை. அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி எமக்கு வீடு பெற்றுத் தர வேண்டும்.”

முஹம்­மது அமீர்தீன் அப்துர் ரஹ்மான்
41 வயது, 5 பிள்­ளை­களின் தந்தை, அலு­மி­னிய பொருத்து வேலை

“முன்னாள் ஜனா­தி­பதி கோத்­த­ாபய ராஜ­பக்ஷ பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­த­போது எமக்கு வீடொன்றை பெற்­றுத்­த­ரு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்தேன். இதன்­படி எனக்கு வீடு­த­ரு­வ­தாக உத்­த­ர­வாத கடி­தமும் அப்­போது கிடைத்­தது. 2019 ஆம் ஆண்டு இந்த பகு­தி­யி­லி­ருந்து மக்கள் தொடர்­மா­டிக்கு மாற்­றப்­பட்­ட­போது, நாம் அங்கு வீடொன்றை பெற்­றுக்­கொள்ள தயா­ராக இருக்­க­வில்லை. நாம் இங்கு 600 சதுர அடி­யையும் விட பெரிய வீட்­டி­லேயே இருக்­கிறோம். அங்கு 400 சதுர அடிகள் கொண்ட வீடே தரப்­பட இருந்­தது. எனவே, எமக்கு இரு வீடுகள் தர வேண்டும் என்று கோரி­யி­ருந்தோம். அக்­கோ­ரிக்கை நிறை­வேற்­றப்­ப­டா­மையால் இங்­கேயே இருந்­து­விட்டோம். வீடு கிடைக்­கா­த­வர்கள் பதி­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். அந்த பட்­டி­யலில் நாமும் இருக்­கிறோம்”.

மேகலா,
33 வயது,
4 பிள்­ளை­களின் தாய்

“2019 ஆம் ஆண்டும் இங்­குதான் நாம் வாட­கைக்கு இருந்தோம். வீட்டு உரி­மை­யா­ளர்கள், வீடு உடைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக எமக்கு அறி­வித்­தனர். பின்னர் நான் தாய் வீட்­டுக்கே சென்­று­விட்டேன். தாய்க்கு ஒரு வீடுதான் கிடைத்­தது. உடன் பிறப்­புகள் ஐவர், வீட்­டி­லுள்ள ஒரு­வ­ருக்கு அங்கு செல்ல முடிந்­தது. அதனால் நாம் இங்­கேயே இருந்­து­விட்டோம். இப்­போது மீண்டும் எம்மை வீட்டை விட்டு வெளி­யே­று­மாறு பணித்­தி­ருக்­கி­றார்கள்.
நாம் 15 வரு­ட­மாக இதே பகு­தியில் கூலிக்கு இருக்­கிறோம். கண­வனின் கூலித் தொழி­லையே நம்­பி­யி­ருப்­பதால் எம்மால் வீடொன்றை பெற்றுச் செல்ல முடி­யாது. ஆகவே, எமக்கு வீடொன்றை பெற்­றுத்­தந்தால் வாட­கையை கொடுத்­தா­வது நிம்­ம­தி­யாக இருக்க முடியும்”.

முஹம்­மது ஹனீபா முஹம்­மது சித்தீக்
5 பிள்­ளை­களின் தந்தை
சிற்­றுண்டி வியா­பாரம்
“12 வரு­ட­மாக இதே இடத்தில் வாட­கைக்கு இருக்­கிறேன். தேர்தல் இடாப்பு பதிவும் இங்­குதான் இருக்­கி­றது. வீடு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அர­சாங்­கத்­திடம் பல வழி­க­ளிலும் முயற்சி செய்­தி­ருக்­கிறேன். வீட­மைப்பு திட்­டங்­களில் எம்­மையும் உள்­ளீர்ப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது வீடுகள் உடைக்­கப்­பட்­டுள்­ளதால், உட­ன­டி­யாக வீட்டைப் பெற்­றுத்­தர நட­வ­டிக்கை எடுங்கள்”.
பஸ்லு அவ்பிம்
37 வயது,
3 பிள்­ளை­களின் தாய்,
பெண் தலைமை தாங்கும் குடும்பம்
“நாம் தொடர்ச்­சி­யாக வாடகை வீட்­டி­லேயே இருந்­து­வந்தோம். எமக்கு 2019 ஆம் ஆண்டு வீடு தந்­தி­ருக்க வேண்டும், தரப்­ப­ட­வில்லை. வீடின்­மையால் உடைக்­கப்­பட்ட மகளின் வீட்டை சரி செய்­து­கொண்டு நாங்கள் இங்கு இருக்­கிறோம். எமக்கு வசிப்­ப­தற்கு வீடு வேண்டும்”.
ரவத்­து­வெ­வகே ரஞ்­சினி ரோஹித,
47 வயது,
2 பிள்­ளை­களின் தாய்

“நான் தொழி­லுக்கு செல்­வ­தில்லை. மிகுந்த கஷ்­டத்­துக்கு மத்­தி­யி­லேயே வாழ்வை நடத்­து­கிறோம். வீட்டில் எமது பிள்­ளை­க­ளுக்கு உறங்­கு­வ­தற்கு கூட இட­மில்லை. அவர்­க­ளுக்­காக வீடொன்றை தாருங்கள் என்று கேட்­கிறோம். இங்கு ஒவ்­வொரு வீடு­க­ளிலும் இரண்டு, மூன்று குடும்­பங்கள் மிகக் கஷ்­டத்­து­டனே வசிக்­கின்­றன”.

ஹேன­முல்ல பகு­தியில் அன்­றாட கூலித்­தொ­ழிலில் ஈடு­பட்டு வாழ்­வா­தா­ரத்தை நடத்தும் குடும்­பங்­களே வசிக்­கின்­றன. அவர்களால் புதிய வீடொன்றை வாங்குவதற்கோ அல்லது வீடொன்றை வாடகைக்கு பெற்றுக்கொள்வதற்கோ எந்தவிதமாக வசதிகளும் இல்லை என்பதை மக்கள் தெரிவித்த கருத்துகள் மூலம் உணர முடிந்தது. அத்தோடு, அவர்கள் நீண்ட காலமாக வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலை தொடருமானால் அவர்கள் பொருளாதார ரீதியில் மேலும் நெருக்கடிகளைச் சந்திப்பர். பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படும். எனவே, ஏதோ ஒரு காரணத்தினால் வீடுகள் கிடைக்காதுள்ள மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றுவது அரசாங்கத்தினது கடப்பாடாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.