பயில் நிலை பிக்குகள் மூவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் : கல்முனை விகாராதிபதி கைது நாளை வரை விளக்கமறியலில்

0 214

(எம்.எப்.எம்.பஸீர்)
பெளத்த விகா­ரையில் வைத்து பயில் நிலை பிக்­குகள் மூவரை பாலியல் துஸ்­பி­ர­யோகம் செய்­த­தாக கூறப்­படும் சம்­பவம் ஒன்­றினை மையப்­ப­டுத்தி கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி ரண்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். நேற்று முன் தினம் (13) அவரை விஷேட பொலிஸ் குழு கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது. இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட அவரை உட­ன­டி­யாக கல்­முனை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­த­தா­கவும் அதன் போது, தேரரை நாளை 16 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­யகம் உறுதி செய்­தது.

கல்­முனை ­விகாரையில் புதி­தாக இணைந்த 3 பயில் நிலை பிக்­குகள் திடீர் சுக­யீனம் கார­ண­மாக கல்­முனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) இறு­தியில் அவர்­களின் பெற்­றோ­ரினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

பின்னர் குறித்த வைத்­தி­ய­சாலை சட்ட வைத்­திய அதி­கா­ரியின் ஆலோ­ச­னைக்­க­மைய அம்­பாறை பொது வைத்­தி­ய­சா­லையில் உள்ள பிக்­கு­க­ளுக்­கான தனி­யான சிகிச்சை பிரி­விற்கு இம்­மூன்று பயில் நிலை பிக்­கு­களும் வைத்­திய பரி­சோ­த­னைக்­காக மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் அம்­பாறை பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட பயில் நிலை பிக்­கு­களும் தாம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தலைமை தேர­ரினால் பாலியல் துஸ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்பட்­ட­தாக சட்ட வைத்­திய அதி­கா­ரி­யிடம் குறிப்­பிட்­டுள்­ளனர்.

குறித்த மூவரிம் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாகி இருப்­பது சட்ட வைத்­திய அதி­கா­ரியின் வைத்­திய அறிக்கை ஊடா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு அந்த விடயம் அம்­பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை அடுத்து இச்­சம்­பவம் தொடர்பில் கடந்த முதலாம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசா­ரணைப் பிரி­வினர் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதன் பின்னர் குறித்த சம்­பவ விசா­ரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் அறி­வு­றுத்­தலின் பிர­காரம் கடந்த 05 ஆம் திகதி கல்­முனை தலை­மை­யக பொலிஸ் நிலை­யத்­திற்கு அனுப்­பட்டு 06 ஆம் திகதி நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள பொலிஸார் தேரரைக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­துள்­ளனர்.

பாலியல் துஸ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளான சகோ­த­ரர்­க­ளான 08,13,14 வயதுகளை உடைய பயில் நிலை பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என கூறப்படுகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.