வெள்ளம், சூறாவளி போன்ற அனர்த்தங்களின்போது பாதுகாப்புப் பெறுவோம்

0 1,300
  • ஏ.எல். நௌபீர்

வயல் நிலமெல்லாம் வெள்ளக் காடு, மலை நாட்டில் தொடர் மழை, மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு, வெள்ளப் பெருக்கு 50 க்கு மேற்பட்டோர் பலி, ஜனாதிபதி இரங்கல், பிரதமர் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணம். இவை நாம் வருடா வருடம் இலங்கையின் ஏதோ ஓரு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது  கூறும் அதே புளித்துப்போன ஆறுதல் வரிகள்.

பொதுவாகவே இலங்கையில் எவ்விதமான இயற்கை பேரிடர்களுக்கும் அதை எதிர்கொளவது பற்றிய அறிவு மிகவும் குறைவு.

எடுத்துக்காட்டாக மலைப் பிரதேசங்களான இரத்தினபுரி, நுவரெ எலிய, கேகாலை, கண்டி போன்ற பகுதிகளில் வருடா வருடம் சில மாதங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகின்றன. அண்மைக் கால சுனாமியின் பின்னர் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி ஒரு வகையான அதிர்வுக்குட்பட்டுள்ளதாகவும், அங்கே நிலம் அதன் இயற்கையான வன்மைத் தன்மையை இழந்து விட்டதாகவும் அதனால் சிறியதொரு மழை நிலைமையின் போதும் மண் பொதும்பி அதன் இயல்பு நிலையை இழந்து விடுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு புராதன மன்னர்களால் அமைக்கப்பட்ட குளங்களின் ஆழம் குறைந்து நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துபோய் விட்டதாகவும் நிபுணர்கள் சொல்கிறார்கள். இவ்வகை நிலைமைகளை எதிர்கொள்ள எவ்வாறு மக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள். Disaster Management System மக்களிடம் சென்றடைந்துள்ளதா?  அரச அதிகார மட்டத்திற்கு இதைப் பற்றிய முழு அறிவு உள்ளதா? மண்சரிவை தடுக்க பாதுகாப்பு சுவர் எழுப்புதலுக்கு உரிய நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக இதுவரை தெளிவாக விளங்க முடிவதில்லை.

மாறாக, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று மாதிரியான (model) போலியான மண்சரிவு நடைபெறுவது போன்று ஒத்திகை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? மண் சரிவில் சிக்கியவர்களை விரைவில் எவ்வாறு மீட்பது? மண் சரிவில் மக்களை மீட்கும்போது ஏற்படும் பாதிப்புகள்? மண் சரிவிற்கு பின்னரான புனர்வாழ்வு, மண் சரிவு அனர்த்தம், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளைக் கொண்டு தவறுகளை சரி செய்தல் போன்றவை நடை பெறுகின்றனவா எனில், இல்லை என்பதே பதில்.

இன்றைய இணைய உலகில் கருத்துக்கள் விரைவில் மக்களை சென்றடையும் என்பதால் வெள்ளத்தை எதிர்கொள்வதை பற்றிய இக்கட்டுரையும் ஒரு சிறு முயற்சியே. இக்கட்டுரை வெள்ளத்தின் போது மக்கள் பாதுக்காப்பாக இருப்பதை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்த பாதுகாப்பு பற்றி செல்வதற்கு முன்பு வெள்ள எச்சரிக்கை பற்றி சிலவற்றை பார்ப்போம்.

Flash Flood Warning (F.F.W) -திடீர் வெள்ளம் :

F.F.W என்பது திடீர் வெள்ளத்தை குறிப்பதாகும். இவ்வகையான  அறிவிப்பு விடுக்கும்போது மக்கள் தாழ்வான வெள்ள அபாயகர பகுதிகளிலுருந்து உயரமான பாதுக்காப்பான இடங்களை  நோக்கி உடனடியாக நகர வேண்டும்.

பொதுவாக இவ்வகை வெள்ளம் சில மணி நேரங்களில் நடைபெறும்

இவ்வகை வெள்ளம் மழை பெய்யாத இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

Flood Warning (F.W) -வெள்ள அபாயம்:

சாதாரண மழையினால் ஏற்படும் வெள்ளத்தை குறிக்கும் அபாய எச்சரிக்கை. குறிப்பாக மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பின்னர் தரப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை இது.

Flood Watch:

வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் சாதகமாக இருப்பதை குறிக்கும் சொல். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வெள்ளம் வராமலும் இருக்கலாம்.

Flood Advisory:

வெள்ளம் நிகழும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட காலத்தில் என குறிப்பிட்டு கூற உதவும் சொல். இவ்வகை அபாயத்தை கருத்திற் கொண்டு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளவில்லையெனின் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

வெள்ளப் பாதுகாப்பு என்பது மூன்று வகைகளாக மேற்கொள்ளப்படுகிறது.

1) வெள்ளத்திற்கு முன் (Before Flood)

2) வெள்ளத்தின் பொழுது (During Flood)

3) வெள்ளத்திற்கு பின் (After Flood)

வெள்ளத்திற்கு முன்:

சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு முன்பாகவே கணிக்கப் படலாம். ஆதலால் வெள்ளத்தினை எதிர்கொள்ள நமக்கு சிறிதுநேரம் கிடைக்கும். இந்த வெள்ளத்தினை எதிர்கொள்ளும் திட்டம் சரியாக இருப்பின் பல நேரங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம்  தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

Communication Plan :

வெள்ளம் பற்றிய நிலைமையினை தொடர்ச்சியாய் அறிந்துகொள்ள ஒரு நபரிடம் தொடர்பிலிருப்பது அவசியம். பாதுகாப்பான இடம், வெள்ளம் பற்றிய பாதிப்புகள் தொடர்பாக அறிய இவை முக்கிய பங்காற்றுகின்றன.

Emergency Kit:

அவசரகால தேவைகளான உணவு, பொருட்கள், தண்ணீர், மருந்துகள் போன்றவை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர்த்து டோர்ச், முதலுதவி பெட்டி, ரப்பர் காலனி, கையுறை, வானொலி என தேவையானவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Risky Area:

ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது எது பாதுகாப்பான வழி, பயணிப்பதற்கு, பயணிக்கும் இடம் என அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

Notification:

அரசு தரும் தொடர்ச்சியான வெள்ள நிலைமைகள் பற்றிய செய்திகளுடன் தொடர்பில் இருத்தல் அவசியம்..

Preparing Home :

மணற் பைகள் மூலம் நீர் உட்புகா வண்ணம் அடுக்கலாம். ஆனால் இதற்கு நாம் எதிர் பார்க்கும் நேரத்தை விட கூடுதல் நேரம் பிடிக்கும்

மழை நீர் சாக்கடையுடன் கலப்பதை தவிர்த்தல் நலம்.

Flood Insurance வீடுகளுக்கு போடுதல்

வளர்ப்பு பிராணிகள் மேல் அக்கறையுடன் கவனித்தல்.

Charge Electronics :

செல்போன், ரேடியோ இவை முழுமையாக சார்ஜ் செய்யுங்கள்.

கூடுதல் பேட்டரிகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave:

வெள்ளம் உங்கள் வீட்டை சூழும் என தெரிந்தால் விரைவில் வெளியேறுங்கள்.

During Flood :

தண்ணீர் அளவும், வேகமும் அனைத்து சூழலையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. ஆதலால் வெள்ளத்தில் சிக்கினால் வானொலி, தொலைக்காட்சி மூலம் வெளியேறுவதற்கான தகவலை பெறுங்கள்.

Get to Higher Ground :

வீட்டின் உயரமான பகுதியில் தங்குங்கள். வெள்ளம் ஓடும் இடத்தில் நிற்பதை தவிருங்கள்.

Obey Evacuate Orders:

வெளியேறுவதற்கான திட்டம் அறிவிக்கபட்டால் அதை முறையாய் பின்பற்றுங்கள்.

Electrical Safety :

மின்சார பெட்டி தண்ணீரில் மூழ்கி இருந்து spark, cracking sound , popping போன்ற ஒலிகள் கேட்டால் உடனே வெளியேறி விடுங்கள்.

Avoid Flood Water:

6 inch தண்ணீர் போதுமானது உங்களை வீழ்த்த.

வெள்ளம் ஓடும் நீரில் வண்டிகளை ஓட்டாதீர். வண்டியினை சிறிதாக திருப்பினும் அடித்து செல்லப்படுவீர்.

நீருக்கு அடியில் பல அபாயங்கள் இருப்பதால் போதுமான பாதுகாப்பு இல்லாமல் இறங்காதீர்கள்.

After Flood :

சண்டையில் கிழியாத சட்டை போல , வெள்ளத்தால் பாதிப்படையா வீடுகள் இல்லை.  புனர்வாழ்வு (Rehabilitation) என்பது முக்கியமான விடயம்.

Stay Informed:

வெள்ளத்திற்கு பின்  நிலைமைகள் அறிந்து பயணியுங்கள்.

நீரினை கொதிக்க வைத்து அருந்துங்கள்.

மின்சார கசிவு , எரிவாயு சிலிண்டர் கசிவு ஆகியவை பற்றி ஆய்வுசெய்து பின் வீட்டினில் பயணியுங்கள்.

Avoid Flood waters :

வெள்ளத்தால் தேங்கிய நீரில் நிற்பது பல ஆபத்துக்களை உள்ளடக்கியது. விஷப்பூச்சிகள் முதல் மின்சார பாதிப்பு, நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு வரை உள்ளது.

Avoid Disaster Area:

பாதிக்கப்பட்ட இடத்தில் அனுமதி இல்லாமல் நுழையாதீர்.

Signs:

விழிப்புணர்வு அட்டைகள் இருப்பின் அதனை மதியுங்கள்.

Wait for all clear:

தங்குவதற்காக இடம் மாற்றி அமைக்கப்பட்டால் அங்கேயே அதிகாரிகள் கூறும் வரை தங்குங்கள்.

இவ்வாறு வெள்ளத்தின் பாதிப்பினை பல வகையான முறையில் கையாள வேண்டும். ஆனால் கொலன்னாவ வெள்ளமோ, கடந்த வருட  மழையினால் ஏற்பட்ட வெள்ளமோ வந்த போது நமது நாட்டில் மேலே குறிப்பிட்ட செயல்கள் செய்யப்பட்டதா என்பதை சிந்திப்பது அவசியமாகிறது. ஊழல், எமது நாட்டிலே வினைத் திறனற்ற, அரசியல்வாதிகளின் ஊது குழலான அதிகாரிகளால் நிரம்பியுள்ள நிலையில், இவ்வகையான துறைகளில் வெள்ள அனரத்தப் பாதுகாப்பு பற்றி அறிவு குறைவாகவே இருக்கிறது.

சுற்றுச் சூழல் அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இது போன்ற நிலமைகளில் செயற்படுமளவு திருப்தியாக இல்லை. இவற்றிலும் பார்க்க பொது மக்கள் சுயாதீன அமைப்புக்கள், தொண்டர் அமைப்புக்கள் எமது நாட்டில் சிறப்பாக இயங்குகின்றன.  அவற்றுக்கான முறைமை (mechanisms) சரியாக வகுக்கப் படும் போது இன்னும் சிறப்பான சேவையைப் பெறலாம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.