வசீம் தாஜுதீனுக்கு நீதி கோரி பேரணி

0 352

மர்­ம­மான முறையில் படு­கொலை செய்­யப்­பட்ட இலங்­கையின் பிர­பல ரக்பி வீரர் வசீம் தாஜு­தீனின் 10 ஆவது நினைவு தினம் நேற்று முன்­தினம் அனுஷ்டிக்­கப்­பட்­டது.
இதன்­போது மறைந்த ரக்பி வீரர் வசீம் தாஜு­தீனின் உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்கள் அடங்­கிய குழு­வினர் கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள அவ­ரது பாட­சா­லை­யி­லி­ருந்து காலி முகத்­திடல் வரை பேர­ணி­யாகச் சென்­றனர்.

மறைந்த வசீம் தாஜு­தீனின் நினை­வாக கொழும்பு காலி முகத்­தி­டலில் அமைந்­துள்ள ‘கோட்­டாகோ­கம’ போராட்ட தளத்தில் விசேட நினை­வேந்தல் நிகழ்வு ஒன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

தாஜு­தீனின் கொலை தொடர்­பான விசா­ர­ணைகள் அவர் இறந்து பத்து வரு­டங்கள் கடந்த பின்­னரும் தொடர்ந்து முடங்கிக் கிடக்­கின்­றன.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி காரில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது வசீம் தாஜுதீன் கொல்­லப்­பட்டார். அவர் கார் விபத்தில் இறந்­த­தாக முதலில் கூறப்­பட்ட நிலையில், பின்னர் அவர் கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.