முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவே நோன்பு நோற்கிறேன்

வெலிகம நகர பிதா ரெஹானுடன் நேர்காணல்

0 904

ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லா­ளரும், 55 வரு­டங்­க­ளாக வெலி­கம தேர்தல் தொகு­தியை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­திய முன்னாள் அமைச்சர் மேஜர் மண்டெக் ஜெய­விக்­ர­மவின் பேரனே வெலி­கம நகர சபையின் இன்­றைய நகர பிதா ரெஹான் விஜே­ரத்ன ஜெய­விக்­ரம.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரியில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­த­லின்­போது கூடு­த­லான வாக்கு விகி­தத்தால் இலங்­கையின் இளம் மேய­ராக தெரிவு செய்­யப்­பட்ட ரெஹான், முன்னாள் பாது­காப்பு அமைச்சர் ஜெனரல் ரஞ்சன் விஜே­ரத்­ன­வி­னதும் பேரன். வெலி­கம தேர்தல் தொகு­தியின் முன்னாள் சுதந்­திரக் கட்சி அமைப்­பாளர் சுஜித் ஜெய­விக்­ர­மவின் சகோ­த­ரரின் மகனும் முன்னாள் அமைச்சர் மனோ விஜே­ரத்­னவின் மரு­ம­கனும் ஆவார்.

கடந்த திங்­கட்­கி­ழமை அவரை கொழும்பில் சந்­தித்தோம். இதன்­போது, அவர் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய நேர்­கா­ணலை இங்கு தரு­கின்றோம்.

நேர்­கண்­ட­வர்கள்:
எஸ்.என்.எம்.சுஹைல்
எம்.ஆர்.எம்.வஸீம்

கேள்வி: நீங்கள் அரசியல் பின்னணியிலான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் அரசியலில் கால் பதித்தீர்களா?
பதில்: நான் கீழ் மட்­டத்­தி­லி­ருந்து அர­சி­யலை ஆரம்­பித்­தி­ருக்­கிறேன். அதா­வது நகர சபை­யி­லி­ருந்தே ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது. ஆனாலும், எமது குடும்­பத்­தி­னரின் அர­சியல் செல்­வாக்கும் தாக்கம் செலுத்­தி­யி­ருந்­தது.
எனது பெற்­றோர்­களோ, குடும்­பத்­தாரோ அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருப்­பது அர­சி­ய­லுக்­கான தகு­தியோ தகு­தி­யீ­னமோ அல்ல. ஆனாலும், எனது அர­சியல் பிர­வே­சத்­திற்கு குடும்ப அர­சியல் பின்­னணி சாத­க­மாக அமைந்­தது.

கேள்வி: உங்கள் குடும்பத்தினர் அண்மைக்காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததை பார்க்கிறோம். திடீரென 2018 இல் உங்கள் பிரவேசம் நிகழ்ந்தது.இதற்கு ஏதும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா?
பதில்: எமது குடும்­பத்தில் கூடு­த­லானோர் அர­சியல் செய்­தி­ருக்­கின்­றனர். அர­சியல் செய்த எமது குடும்­பத்தின் மூன்றாம் சந்­த­தியில் நான்தான் முதன்­மு­த­லாக அர­சி­யலில் பிர­வே­சித்­துள்ளேன். எனது சகோ­த­ரர்கள் அர­சி­ய­லுக்கு வர­வில்லை. வேறு தொழில்­களில் கவனம் செலுத்­து­கின்­றனர்.
டி.எஸ்.சேனா­நா­யக்க குடும்பத் தொடர்பும் ரஞ்சன் விஜே­ரத்ன மற்றும் மண்டெக் ஜெய­விக்­ரம உள்­ளிட்ட மூன்று பெரும் அர­சியல் குடும்­பத்தின் பரம்­ப­ரையை பிர­தி­ப­லிக்­கிறேன்.

கேள்வி: வெலிகம என்பது பல்லின மக்களை பிரதிபலிக்கும் தொகுதியாகும். நாட்டிலுள்ள இனவாத சூழல் உங்கள் அரசியல் பயணத்தில் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகிறது?
பதில்: வெலி­கம நகர் முஸ்­லிம்களின் செல்­வாக்­கு­மிக்க ஒரு பகுதி. இங்கு ஆளும் கட்­சி­யான பொது­ஜன பெர­மு­னவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் தலை­மைகள் இருந்­த­போ­திலும் அவர்கள் அங்­குள்ள முஸ்லிம் மக்­களின் தேவைகள் மற்றும் பிரச்­சி­னைகள் குறித்து துணி­வுடன் பேச முன்­வ­ரு­வ­தில்லை. வெலி­கம மக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதால் அங்­குள்ள சிங்­கள மக்கள் என்­னுடன் கோபித்­த­தில்லை. வெலி­கம சிங்­கள மக்­களும் முஸ்­லிம்­க­ளுடன் ஒன்­றித்து வாழ விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இதை இன்­றைய புதிய மாற்­ற­மாக காண்­கிறேன்.

கேள்வி: வெலிகம நகர சபைக்கான பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் முன்னெடுக்கப்படுகின்றதா?
பதில்: நகர சபை ஆட்சி அமைக்­கப்­ப­டும்­போதும், அர­சாங்­கங்கள் அமைக்­கப்­ப­டும்­போதும் ஒவ்­வொரு செயற்­திட்­டங்கள் வெலி­கம நகர சபைக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றன. பெரும்­பாலும் வீதி அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளா­கத்தான் இருந்­தி­ருக்­கி­றது. உட்­கட்­டமைப்பு வேலைத்­திட்­டங்கள் வரு­வ­தில்லை. அடுத்த ஆட்சி அமைக்­கப்­ப­டும்­போது, குறித்த உட்­கட்­டு­மான வேலைத்­திட்­டங்கள் நிறுத்­தப்­படும் நிலையே காணப்­ப­டு­கின்­றது.
முன்னாள் அர­சாங்­கத்­தினால் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் செயற்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இன்­றைய பொது­ஜ­ன­ பெ­ர­முன அர­சாங்கம் அதனை நிறுத்­தி­யது. இன்னும் ஓரிரு வரு­டங்­களில் அதே திட்டம் மீளவும் வரும் என எதிர்­பார்க்­கிறேன்.

கேள்வி: தெற்கில் இலத்திரனியல் உற்பத்திகள் தொடர்பான வியாபாரத்திற்கு வெலிகம நகரம் பிரசித்திபெற்று விளங்குகின்றது. எனவே, இதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்கள் ஏதும் முன்னெடுக்கப்படுகின்றனவா?
பதில்: ஒரேன்ஞ் இலக்ட்ரிக் நிறு­வ­னத்­துடன் இணைந்த செயற்­திட்­ட­மொன்­றுதான் ஓரிரு வாரத்­துக்குள் நடை­மு­றைக்கு வர­வி­ருக்­கி­றது. மெஜஸ்ட்ரிக் சிட்டி போன்­ற­தொரு வர்த்­தக தொகு­தி­யொன்றும் ஆரம்­பிக்­க­வி­ருக்­கிறோம். அத­னுடன் இணைந்­த­தாக மின்­னியல் கல்­லூ­ரி­யொன்றும் ஆரம்­பிக்­க­வி­ருக்­கிறோம். அத­னூ­டாக இங்­குள்ள இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழிற்­திற­னு­ட­னான வேலை வாய்ப்­பு­களை பெற வாய்ப்பு கிடைக்கும். இரண்டு வரு­டத்­துக்குள் இந்த வேலைத்­திட்­டங்கள் முடி­வ­டையும்.

கேள்வி: இன்னும் இரண்டு வருடத்திற்குள் உங்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிடும். அதற்குள் ஆட்சி மாறிவிட்டால், இந்த திட்டமும் கைவிடப்பட்டுவிடுமல்லவா?
பதில்: நான், இந்த திட்­டத்தை மக்­களின் பயன்­பாட்­டிற்கு கொண்டு செல்­வ­தற்­கான அத்­தனை நட­வ­டிக்­கை­யையும் செய்­து­மு­டிப்பேன். யார் திறந்து வைத்­தாலும் பர­வா­யில்லை. மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்டால் போதும்.

கேள்வி: மத்திய அரசு ஒரு கட்சியிடமும் வெலிகம நகர சபை இன்னொரு கட்சியிடமும் இருக்கின்ற நிலையில் நகராட்சியை முன்னெடுப்பதில் ஏதும் தடங்கல்கள் இருக்கின்றனவா?
பதில்: இன்று பொது­ஜன பெர­முன அர­சாங்கம் ஆட்டம் கண்­டி­ருக்­கி­றது. அவர்­களின் பதவிக் காலம் வெகு­நாட்கள் நீடிக்­குமா என்ற நிலை, அவர்­களின் செயற்­பா­டு­க­ளினால் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் விட­யத்தில் இவர்கள் மிக மோச­மாக செயற்­ப­டு­கின்­றனர். 180 நாடுகள் கொவிட் 19 இனால் மர­ணிப்­ப­வர்­களின் உடலை அடக்கம் செய்­த­போதும் இந்த அர­சாங்கம் எடுத்த தீர்­மா­னமும், அதனால் முஸ்­லிம்கள் வேத­னை­ய­டைந்­த­தையும் மறந்­து­விட முடி­யாது.
சிறு­பான்மை மக்­களை புறந்­தள்­ளி­விட்டு ஆட்சி அதி­கா­ரத்தில் நீடிக்க முடி­யாது. தெற்கில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை போல், வடக்கு கிழக்­கிலும் அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்த அர­சாங்­கத்­திடம் அவ்­வா­றான நிலைப்­பா­டில்லை. அதனால் பொது­ஜன பெர­முன அர­சாங்கம் சில மாதங்­களில் வீழ்ந்­து­விடும். எனவே, விரைவில் எமது ஆட்சி வந்­து­விடும். ஆகவே, நகர ஆட்­சியை மத்­திய அரசின் ஒத்­து­ழைப்­போடு மிகச் சிறப்­பாக முன்­னெ­டுப்­ப­தற்­கான வாய்ப்பு விரைவில் வரும்.
இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் என்னை பத­வி­யி­லி­ருந்து நீக்க சதிகள் இடம்­பெற்­றன. என் மீது எந்தக் குற்­றச்­சாட்­டு­களும் இல்­லா­த­தனால் என்னை அவர்­களால் எதுவும் செய்ய முடி­யா­மற்­போ­னது.

கேள்வி: தெற்­கி­லி­ருந்து இன்­னொரு மங்­கள உயிர்­பெ­று­கிறார் என்று எங்­களால் நம்ப முடி­யுமா?
பதில்: மங்­கள சம­ர­வீர கட்­சியின் மாவட்டத் தலை­வ­ராக இருந்­தவர். என்னை வெலி­கம நகர பிதா­வாக பரிந்­து­ரைத்­தவர். மங்­கள ஒரு தீவிர தாரா­ள­வாத அர­சி­யல்­வாதி, உண்­மையை உரைக்க பயப்­ப­ட­மாட்டார். எல்லா மதத்­தி­ன­ரையும் மதிக்கும் தன்­மை­கொண்­டவர்.
மங்­கள என்­கிற ஆளுமை (தனித்­துவம்)அர­சி­யலில் இருந்து ஓய்­வு­பெற்­று­விட்டார் என்று கூற முடி­யாது. அவர் எவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுப்பார் என்றும் ஊகிக்க முடி­யாது. எதிர்­கா­லத்தில் இலங்­கையில் ஒரு அர­சியல் புரட்­சிக்கு தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறார் என்று நம்­பு­கிறேன்.
தெற்கில் அவ்­வா­றான ஆளுமை (தனித்­துவம்) மிகவும் குறைவு. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அவ்­வா­றான ஆளு­மைகள் மாவட்­டம்­தோறும் அதி­க­ம­தி­க­மாக தேவைப்­ப­டு­கின்­றனர். அப்­போதுதான் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பலாம்.
எதிர்­கால சந்­த­தி­யினர் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டும்­போது, இன,மத­வா­தத்­தி­லி­ருந்து விலகி ஒண்­றி­ணைந்து செயற்­படும் கொள்­கையை பின்­பற்­று­வார்­க­ளே­யானால் நாம் முன்­னேற்றம் காண முடியும்.

கேள்வி: கொவிட் ஜனாஸா பிரச்சினை நாட்டில் உருவானபோது, வெலிகம பகுதியில் பலவந்தமாக எரிப்புக்கான முஸ்தீபு இடம்பெறவிருந்த நிலையில் நீங்கள் அதனை தடுத்திருந்தீர்கள். நீங்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததா?
பதில்: என்­னு­டைய கொள்­கைகள் மற்றும் இயல்­பு­களை என்னால் கைவிட முடி­யாது. எனது கட்­சியில் எனக்கு அழுத்­தங்கள் ஏதும் பிர­யோ­கிக்­கவும் இல்லை. வெலி­க­மயில் ஜனாஸா எரிப்பு முஸ்­தீபு நடந்­தமை எனது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் கால­மாகும். நான் முஸ்லிம் வாக்­கு­களை இலக்­கா­கக்­கொண்டு செயற்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்­தினர். மாத்­தறை மாவட்­டத்தில் 80 வீதம் சிங்­கள வாக்­கு­கள்தான் இருக்­கின்­றன. முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் 30 ஆயிரம் வரை­யில்தான் இருக்கும் என நினைக்­கிறேன். அந்த வாக்­கு­களை மட்டும் இலக்­கு­வைத்து செயற்­பட நான் முட்டாள் அல்ல. என்­னு­டைய இயல்­புதான் ஜனாஸா விட­யத்தில் நியா­ய­மாக செயற்­ப­ட­வைத்­தது.
ஒவ்­வொரு இனக் குழு­மத்­திலும் கடும்­போக்­கு­வா­திகள் இருக்­கின்­றனர். அந்த அடிப்­ப­டையில் சிங்கள சமூ­கத்தில் எனக்கு வாக்­குகள் இல்­லாமல் போயி­ருக்­கலாம். குறித்த சந்­தர்ப்­பத்தில் மாத்­தறை மாவட்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் மௌனித்து இருந்த போது நான் பேசி­யதை மாத்­தறை மாவட்ட முஸ்லிம் மக்கள் நன்கு அறி­வார்கள்.

கேள்வி: தெற்கில் சில உள்ளூராட்சி மன்ற அதிகார பகுதிகளில் தவிர பெரும்பாலான பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் அதிகாரத்தின் கீழிருக்கும் வெலிகம பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என உங்கள் மீது ஏதும் அழுத்தங்கள் வருவதுண்டா?
பதில்: எனது தீர்­மா­னத்தில் பிர­த­மரோ, ஜனா­தி­ப­தியோ இது­வரை தலை­யி­ட­வில்லை. ஏனைய பகு­தி­களில் மாட்­டி­றைச்­சிக்கு தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் நான் எந்த தடைக்கும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. ஏனை­யோ­ருக்கு மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­மாறு வற்­பு­றுத்­த­வு­மில்லை, மாட்டை கொல்­லு­மாறு சொல்­ல­வு­மில்லை. மாத்­தறை நகரில் முஸ்­லிம்கள் 20 வீத­மா­ன­வர்கள் இருக்­கின்­றனர். அவர்கள் மாட்­டி­றைச்சி உட்­கொள்­கின்­றனர். அவர்­களை தடுக்க முடி­யாது. மாட்­டி­றைச்சி உண்ணக்கூடாது என்­பது எனது விருப்பம். எனது விருப்­பத்தை எல்­லோ­ருக்கும் திணிக்க முடி­யா­தல்­லவா. இங்கு மாட்­டி­றைச்சி விற்­பதை தடுக்­கக்­கோரி பெரிய அழுத்­தங்கள் ஏது­மில்லை.

கேள்வி: நீங்கள் நோன்பு நோற்கப்போவதாக அறிவித்திருந்தீர்கள். நோன்பு பிடித்தீர்களா, உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?
பதில்: முதலாம் நாள் எனக்கு இல­கு­வாக இருந்­தது. இரண்டாம் நாள் எனக்கு பெரி­தாக கஷ்டம் இருக்­க­வில்லை. முன்றாம் நாள் நோன்பும் சாதா­ர­ண­மா­கவே சென்­றது. ஆனால் நான்காம் நோன்­பன்றும் ஐந்தாம் நாளன்றும் தவ­று­த­லாக நீர் அருந்­தி­விட்டேன். தவ­றாக நீர் அருந்­து­வது நோன்பை முறிக்­காது என்று தெரிந்­தி­ருந்தேன். ஆகையால், அவ்­விரு தினங்­களும் நோன்பை தொடர்ந்தேன்.
நோன்பு நேர அட்­ட­வ­ணையை கைய­டக்கத் தொலை­பே­சியில் வைத்­தி­ருக்­கிறேன். அதன்­படி நோன்பு பிடிப்­பதை பேணு­கிறேன். இந்த நேர அடிப்­ப­டையில் நேற்று (கடந்த ஞாயி­றன்று) முன்னாள் சபா­நா­யகர் எம்.எச்.முஹம்­மதின் பேரர்­க­ளோடு வீட்டில் நோன்பு துறந்தேன்.
நோன்பு நோற்­பதால் உட­லுக்கு புத்­து­ணர்ச்சி கிடைக்­கி­றது. நோன்பு இருப்­பதால் உடம்­பி­லுள்ள மேல­திக கொழுப்பு இல்­லா­ம­லாக்­கப்­ப­டு­கின்­றது.

கேள்வி: முஸ்லிம்கள் இறை பொருத்தத்திற்காக நோன்பு நோற்கின்றார்கள். நோன்பு நோற்பதால் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
பதில்: இலங்கை தாய­கத்தில் பௌத்­தர்­க­ளா­கிய நாங்கள் மூத்த சகோ­த­ரர்கள், இளைய சகோ­த­ரர்களை பொறுப்­புடன் பார்த்­துக்­கொள்­வது மூத்த சகோ­த­ரர்­களின் கட­மை­யாகும். அவர்­க­ளுடன் யுத்தம் செய்­வதோ, கொல்­வதோ எமது கொள்­கை­யாக இருக்­க­லா­காது. அவர்­களை அர­வ­ணைக்க வேண்டும்.
எல்லா முஸ்­லிம்­களும் அடிப்­ப­டை­வா­திகள் அல்லர். அப்­படி கூறு­வது தவ­றாகும். எல்லா சமூ­கத்­திலும் கடும்­போக்­கு­வா­திகள் இருக்­கின்­றனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பின்னர் நீண்ட கால­மாக ஒன்­றி­ணைந்து வாழ்ந்த முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் கடைகள் எரிக்­கப்­பட்­டன. இந்­நி­லை­மையை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் அர­சி­யல்­வா­தி­களே.
நியூ­ஸி­லாந்து பிர­த­மரைப் போல், முஸ்லிம் மக்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து அந்­நி­யோன்­னி­ய­மாக இருப்­பது எப்­படி என்று முன்­மா­தி­ரி­யாக வாழ்ந்து காட்டும் பொறுப்பு எனக்கு இருக்­கி­றது. முஸ்­லிம்­க­ளுடன் மட்­டு­மல்ல, தமி­ழர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து அவர்­க­ளுடன் தைப்­பொங்கல் கொண்­டா­டவும் இருக்­கிறேன்.
நான் நோன்பு இருப்­பதன் பிர­தான நோக்கம், இலங்­கை­யி­லுள்ள எல்லா சமூ­கத்­த­வர்­க­ளி­னதும் உணர்­வு­களை புரிந்து கொள்­வ­தற்­கே­யாகும். சிங்­கள பௌத்­த­னாக இருந்­து­கொண்டு ரெஹான் எங்­க­ளுடன் இணைந்து நோன்பு நோற்­கிறார் என்று முஸ்­லிம்கள் கூறு­கின்­றார்கள் அல்­லவா? சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் கூடு­த­லா­ன­வர்கள் இவ்­வா­றான கருத்­து­களை பகிர்ந்­தி­ருந்­தனர்.

கேள்வி: நீங்கள் நோன்பு நோற்பது குறித்து பகிரங்கமாக அறிவித்த பின்னர் முஸ்லிம் சமூகத்திடமிருந்து எவ்வாறான வரவேற்புகள் கிடைத்தன?
பதில்: திரு­கோ­ண­மலை, பெந்­தொட்ட, பேரு­வளை, கொழும்பு, பாசி­குடா என நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் தினந்­தோறும் எனது தொலை­பே­சிக்கு அழைப்பு எடுக்­கின்­றனர். எனது வீட்­டுக்கு வந்து வாழ்த்து தெரி­விக்­கின்­றனர். மாலை­யா­கும்­போது பலர் நோன்புக் கஞ்சி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அதிகாலையில் உணவு உட்கொள்வதற்கு அழைப்பு விடுக்கின்றனர். நோன்பு துறப்பதற்கு வரச்சொல்கின்றனர். 30 நாட்கள்தான் இருக்கிறது. ஆனால், நூற்றுக் கணக்கானோர் அழைப்பு விடுக்கின்றனர்.

கேள்வி: நோன்பு நோற்க, துறப்பதற்கான ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது?
பதில்: எனக்கு அதிகாலையில் சாப்பிட்டால் கேஸ் ரைட்டிஸ் அதிகரிக்கும், அதனால், பேரீத்தம் பழங்களும் பாலும் உட்கொள்வேன். நோன்பு துறந்த பின்னர் கஞ்சி, பலூடா உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வேன்.
முதலாம், இரண்டாம் நோன்புக்கு 4.35 மணியாகும்போதுதான் விழித்தெழுந்தேன். எனினும், உடனடியாக பிரிஜ்ஜில் இருந்த பேரீத்தம் பழங்கள் மற்றும் பால் என்பவற்றை உட்கொண்டேன்.

கேள்வி: சிங்கள புதுவருடமும் நோன்பு ஆரம்பித்ததும் ஒரே நாளாகும். அப்படியான நிலையில் உங்களின் புதுவருட சடங்குகளை எப்படி ஒழுங்குப்படுத்திக் கொண்டீர்கள்?
பதில்: எங்கள் வீட்­டில்தான் எமது குடும்ப புது­வ­ருட சடங்­குகள் இடம்­பெற்­றன. அனைத்து சடங்­கு­க­ளிலும் கலந்­து­கொண்டேன். உண­வு­களை மாத்­திரம் வேறாக எடுத்து வைத்து நோன்பு துறக்கும் நேரத்தின் பின்னர் உட்­கொண்டேன். இது கொஞ்சம் கஷ்­ட­மா­கத்தான் இருந்தது.

கேள்வி: சில தினங்கள் நோன்பு நோற்றுள்ளீர்கள். அந்த அனுபவத்தை வைத்து நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: நோன்பு காலம் மிகவும் கஸ்­ட­மான காலம். அத்­தி­யா­வ­சிய செயற்­பா­டு­களை தவிர்ந்­து­கொள்ள வேண்­டிய நாட்கள் இவை. ரமழான் நோன்பு முக்­கி­ய­மான வைப­வ­மாகும். உங்­க­ளுக்கு பெரும் அருட்­கொ­டை­யா­கத்தான் நோன்பு கிடைத்­தி­ருக்­கி­றது. அதனை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொள்­ளுங்கள். அனை­வ­ருக்கும் ரம­ழானின் பயன்கள் முழு­மை­யாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.