கொவிட் ஜனாஸா அடக்கம்: சுகாதார வழிகாட்டல்கள்

0 492
  • சடலம் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்ப­ட­மாட்­டாது,
    குளிப்­பாட்ட முடி­யாது
  • சமய கிரி­யையில் 2 மத குருக்கள்
    5 உற­வி­னர்கள் பங்­கேற்­கலாம்
  • 10 நிமி­டங்கள் மட்­டுமே சமய
    கிரி­யை­க­ளுக்கு அனு­மதி
  • உற­வி­னர்­களால் பிரேதப் பெட்டி
    கட்­டாயம் வழங்­கப்­பட வேண்டும்

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்­கான வழி­காட்­டல்­களை சுகா­தார அமைச்சு நேற்று முன்­தினம் இரவு வெளி­யிட்­டுள்­ளது. சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­த­னவின் கையொப்­பத்­துடன் இந்த சுற்று நிருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே EPID 400/ 2019 ஆம் இலக்கம் 2020.01.04 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம் மற்றும் 2020.07.21 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம் என்­ப­வற்றின் திருத்­தமே டி.ஜி.எச்.எஸ். கொவிட் 19/347 2021 எனும் இந்தப் புதிய சுற்று நிரு­ப­மாகும். இந்த சுற்று நிரு­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் வரு­மாறு :

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்­தினால் அனு­ம­திக்­கப்­பட்ட அண்­மித்த மயா­னத்­திலே அடக்கம் செய்­யலாம் அல்­லது தகனம் செய்­யலாம்.
இனங்­கா­ணப்­ப­டாத சட­லங்கள், உரி­மை­கோ­ரப்­ப­டாத சட­லங்கள் அர­சாங்­கத்தின் செலவில் தகனம் மட்­டுமே செய்­யப்­படும்.
மரணம் வைத்­தி­ய­சா­லையில் இடம் பெற்றால் சவ அறைக்கு சட்ட வைத்­திய அதி­காரி அல்­லது உரிய உத்­தி­யோ­கத்தர் உடல் பையினை மரணம் இடம்­பெற்ற வைத்­தி­ய­சா­லைக்கு வழங்­க­வேண்டும்.
மர­ணித்த உடல்­களை 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு வைத்­தி­ய­சாலை விடு­தியில் வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. உரிய ஆவ­ணங்கள் தயா­ரா­ன­வுடன் சடலம் உட­ன­டி­யாக சவச்­சாலை ஊழி­யர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும். உடல் பை சவச்­சாலை பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். அவர்கள் PPE (பாது­காப்பு ஆடை) அணிந்­தி­ருக்­க­வேண்டும்.
உற­வி­னர்­களால் பிரேதப் பெட்டி கட்­டா­ய­மாக வழங்­கப்­ப­ட­வேண்டும்.
உற­வி­னர்கள் சிறி­ய­ளவில் இறுதி மத கிரி­யை­களை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­சா­லையின் உத­வி­யுடன் ஏற்­பாடு செய்­யலாம்.
சடலம் தகனம் செய்­யப்­ப­டு­வ­தென்றால் உற­வி­னர்கள் தகனம் செய்யும் நேரம், இடம் என்­ப­வற்றை பிரேத அறைக்குப் பொறுப்­பா­ன­வ­ருக்கு அறி­விக்­க­வேண்டும்.
இறு­திக்­கி­ரியை மத அனுஷ்­டா­னத்­துக்கு இரண்டு மத­கு­ருக்கள் அனு­ம­திக்­கப்­ப­டுவர். சுகா­தார அதி­கா­ரி­களின் மேற்­பார்­வையின் கிழேயே இது இடம் பெறும். 5 உற­வி­னர்­களும் அதற்கு அனு­ம­திக்­கப்­ப­டுவர்.
10 நிமி­டங்கள் சமய அனுஷ்­டா­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும். சுகா­தார அதி­கா­ரி­களின் மேற்­பார்­வையின் கீழ் சமூக இடை­வெளி மற்றும் சுகா­தார வழி­காட்­டல்­க­ளின்­படி இது இடம்­பெ­ற­வேண்டும்.
சட­லத்தை தொடு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது.
சடலம் அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்கு அல்­லது தகனம் செய்­யப்­ப­டு­வ­தற்கு சுகா­தார அதி­கா­ரி­களின் மேற்­பார்­வையின் கீழ் போக்­கு­வ­ரத்து ஏற்­பாடு செய்­யப்­படும்.
பொலிசார் இதற்கு பாது­காப்பு வழங்­கு­வார்கள். பொலிஸ்மா அதிபர் இதற்­கான அறி­வு­றுத்­தல்­களை வழங்­குவார்.
சடலம் அடக்கம் அல்­லது தகனம் செய்­யப்­படும் வரை குறிப்­பிட்ட பகு­தியின் சுகா­தார வைத்­திய அதி­காரி அல்­லது பொது சுகா­தார அதி­காரி மற்றும் பொலிசார் மேற்­பார்வை செய்­ய­வேண்டும்.
சுகா­தார சேவைகள் பணி­பாளர் நாய­கத்­தினால் அனு­ம­திக்­கப்­பட்ட அடக்க ஸ்தலத்­தி­லேயே கொவிட் தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வார்கள்.
தகனம் செய்­யப்­பட்ட உடல்­களின் சாம்பல் உற­வி­னர்­களால் கோரிக்கை விடுக்­கப்­பட்டால் வழங்­கப்­படும்.
வைத்­தி­ய­சா­லையில் அன்றி வேறு இடங்­களில் எவ­ரேனும் மர­ணித்தால் பிரேத அறைக்கு சடலம் கிடைக்­கப்­பெற்­றதும் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளா­னவர் என பரி­சோ­த­னையின் பின் உறு­தி­ப­டுத்­தப்­பட்டால் பிரேத அறை பணி­யா­ளர்கள் சட­லத்தை உடல் பைக்குள் இட்டு அதற்­கென ஒதுக்­கப்­பட்ட பகு­தியில் வைக்க வேண்டும்.
பிரேத பரி­சோ­தனை நடாத்­தப்­பட்டால், பிரேத பரி­சோ­த­னையின் பின்பு உடல் அதற்­கான பையில் இடப்­பட்டு அதற்­கென ஒதுக்­கப்­பட்ட இடத்தில் வைக்­கப்­படும். (இறு­திக்­கி­ரியை மஜிஸ்­திரேட் / திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரியின் உத்­த­ர­வுக்­க­மைய ஏற்­பாடு செய்­யப்­படும்)
அடக்கம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட இடத்­திலே தீவொன்­றிலே இடம் பெறும்.
அடக்கம் செய்­வ­தற்­கான உகந்த இடத்தை மாவட்ட சூழல்­க­மிட்டி, மாவட்ட செய­லாளர், சுகா­தார சேவை பணிப்­பாளர் நாய­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­யொ­ருவர், சுகா­தார சேவைகள் மாகாண பணிப்­பாளர், பிராந்­திய பணிப்­பாளர் மற்றும் ஏனைய சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் என்போர் ஆராய்ந்து தீர்­மா­னிக்­கப்பர். இந்தத் தீர்­மானம் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்­தினால் அறி­விக்­கப்­படும்.
சடலம் 1.5-/3.0 மீற்றர் ஆழத்தில் அடக்கம் செய்­யப்­ப­ட­வேண்டும்.
மர­ணித்­த­வர்­களின் கெள­ரவம், கலா­சாரம் மத, குடும்ப பாரம்­ப­ரி­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். மர­ணித்­த­வரின் குடும்ப உறுப்­பி­னர்­களின் கெள­ரவம் சட­லத்தை அகற்­று­வ­தற்­கான செயல்­முறை முழு­வதும் மதிக்­கப்­ப­ட­வேண்டும்.
சட­லத்தைப் பார்­வை­யிட அனு­ம­திக்­கும்­போது சடலம் பிரேத பையில் இடப்­பட்­டி­ருக்­க­வேண்டும். பிரேத பெட்­டிகள் எக்­கா­ரணம் கொண்டும் அடக்கம் அல்­லது தகனம் செய்­யப்­படும் இடங்­களில் திறக்­கப்­ப­ட­மாட்­டாது.
பொறுப்­ப­ளிக்­கப்­படும் சுகா­தார ஊழி­யர்கள் மாத்­தி­ரமே சட­லத்தை கையாள வேண்டும். சடலம் அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்கோ தகனம் செய்­யப்­ப­டு­வ­தற்கோ உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டக்­கூ­டாது. சட­லத்­துடன் தொடர்­பு­படும் அனை­வரும் நிலை­யான தொற்று தடுப்­புக்­கட்­டுப்­பாடு மற்றும் முன்­னெச்­ச­ரிக்­கை­களை கடைப்­பி­டிப்­பது உறுதி செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
புதை குழியின் அடி­மட்டம் ­வேண்டும். பிரேத பெட்­டிகள் எக்­கா­ரணம் கொண்டும் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் இடங்களில் திறக்கப்படமாட்டாது.
பொறுப்பளிக்கப்படும் சுகாதார ஊழியர்கள் மாத்திரமே சடலத்தை கையாள வேண்டும். சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கோ தகனம் செய்யப்படுவதற்கோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படக்கூடாது. சடலத்துடன் தொடர்புபடும் அனைவரும் நிலையான தொற்று தடுப்புக்கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது உறுதி செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதை குழியின் அடிமட்டம் நிலக்கீழ் நீர் மட்டத்திலிருந்து 2.0M உயரத்தில் இருக்க வேண்டும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.