20 ஆவது திருத்தத்திற்கு நாம் ஆதரவளியோம்

நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

0 554

ஜே.வி.பி.யின் தனிப்­பட்ட விருப்­புக்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­படும் 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு நாம் ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை எனத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் ஏனைய கட்­சி­களின் தலை­வர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்­பட்டால், அதற்கு ஆத­ர­வ­ளிக்க நாம் தயா­ரெ­னவும் தெரி­வித்தார்.

கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்­கி­டையில் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போது, நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வதில் தனக்கு தனிப்­பட்ட ரீதி­யிலும் எந்த பிரச்­சி­னையும் இல்லை என எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்­த­ரா­ஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

எனினும், 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்­துடன், நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையும் சிதை­வ­டைந்­துள்­ளது என்றால், நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையால் எந்­த­வி­த­மான பயனும் இல்லை என்­பதே அதற்­கான கார­ண­மாகும். அத்­தோடு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கட்சி விருப்­புக்­க­ளையும், தனிப்­பட்ட விருப்­புக்­க­ளையும் நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்­திற்கு நாம் ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை. ஆனால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவளிக்க நாம் தயார் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.