பள்­ளி­வா­சல்­களின் புன­ர­மைப்பு துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும்

0 160

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பழி தீர்க்கும் முக­மாக குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்பு நாட்டின் சில பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்து விடப்பட்­டன. அர­சியல் பின்­பு­லத்­துடன் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் இந்த வன்­செ­யல்­களால் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தாரம் அழிக்­கப்­பட்­டது. வீடுகள், கடைகள், தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன.

அல்­லாஹ்வின் மாளி­கை­யாக முஸ்­லிம்கள் ஏற்றுக் கொண்­டுள்ள பள்­ளி­வா­சல்கள் இன­வா­தி­க­ளினால் தாக்­கப்­பட்­டன. புனித குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டன. வன்­செ­யல்கள் தொட­ரா­தி­ருப்­ப­தற்­காக குறிப்­பிட்ட மாவட்­டங்­களில் ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

வன்­செ­யல்­க­ளினால் குரு­ணாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களே பாதிப்­புக்­குள்­ளா­கின.

கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் குரு­ணாகல், புத்­தளம், கம்­பஹா மாவட்­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் 826 சொத்­த­ழி­வுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­தந்த பிர­தேச செய­லா­ளர்­க­ளினால் புனர்­வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் இழப்­பீட்டு பணி­ய­கத்­திற்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சேத­மாக்­கப்­பட்­டுள்ள சொத்­து­க­ளுக்­கான நஷ்­டங்­களை மதிப்­பீடு செய்யும் பணிகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் விரைவில் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­மெ­னவும் அதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ள­தா­கவும் இழப்­பீட்டு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, 826 சொத்­த­ழி­வு­களில் பள்­ளி­வா­சல்­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளன. ஆனால் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சினால் புன­ர­மைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அந்தப் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

பிர­த­மரின் ஆலோ­ச­னைக்­க­மைய இரா­ணு­வத்­தி­ன­ரி­னதும் ஒத்­து­ழைப்­புடன் பாதிக்­கப்­பட்­டுள்ள 27 பள்­ளி­வா­சல்கள் புன­ர­மைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ர­வையும் வழங்­கி­யுள்­ளது. 27 பள்­ளி­வா­சல்­க­ளையும் புன­ர­மைப்­ப­தற்கு 67 ½ இலட்சம் ரூபா செல­வா­கு­மென மதிப்­பி­டப்­பட்டு அந்­நி­தியை ஒதுக்­கு­மாறு திறைச்­சே­ரிக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் திறைச்­சேரி உரிய நிதியை இது­வரை ஒதுக்­கீடு செய்­யா­மையே புன­ர­மைப்புப் பணிகள் தாம­த­ம­டை­வ­தற்குக் காரணம் என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் உதவிச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் 4 பள்­ளி­வா­சல்­களின் சேத விப­ரங்­களும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. அவை தொடர்பிலும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது எனவும் அவர் கூறினார்.
ஏப்ரல் 21 தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளினால் சேதங்­க­ளுக்­குள்­ளான கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­லயம் மற்றும் நீர்­கொ­ழும்பு – கட்­டு­வப்­பிட்டி செபஸ்­தியார் தேவா­லயம் என்­ப­வற்றின் புன­ர­மைப்புப் பணிகள் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன. கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் தேவா­லய புன­ர­மைப்புப் பணிகள் நிறை­வுற்­றுள்­ளன. ஆனால் இன­வா­தி­க­ளினால் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களின் புன­ர­மைப்புப் பணிகள் இது­வரை ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. திறைச்­சேரி அதற்­கான நிதி­யினை ஒதுக்­கு­வதில் காலம் தாழ்த்தி வரு­கி­றது.

மதஸ்­த­லங்கள் அவை எந்த சம­யத்­துக்கு உரித்­தா­னவை என்­றாலும் தாம­த­மில்­லாமல் புன­ர­மைக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும் புன­ர­மைப்புப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்த நிதி­யினை ஒதுக்­கு­வதில் திறைச்­சேரி அசி­ரத்­தை­யுடன் இருப்­பதை முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கவ­னத்தில் கொள்­வ­துடன் நிதி­ய­மைச்­சுக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும்.

பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்டு ஓரிரு தினங்­களின் பின்பு பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விரைவில் புனரமைப்பு செய்யப்படும் என உறுதியளித்திருந்தார். அவரது உறுதிக்கு இன்று வயது இரண்டு மாதங்கள். அரசியல்வாதிகள் அவர்கள் பிரதமராக இருந்தாலும் சரி அமைச்சர்களாக இருந்தாலும் சரி வாக்குறுதிகளை உரியகாலத்தில் நிறைவேற்ற வேண்டும்.
நாட்டில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் இன ஒற்றுமைக்கும் முன்னுரிமை வழங்கியுள்ள அரசு இவ்வாறான விடயங்களில் மந்தகதியில் நகராது துரிதகதியில் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.