முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிரான தேரரின் பிரேரணை

0 1,438

முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்­தங்கள் இறு­திக்­கட்­டத்தை அடைந்­துள்ள நிலையில் சில பெரும்­பான்மை இன­வா­திகள் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்கு தடை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கி­றார்கள். முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்­தினுள் நிலவும் கருத்து வேறு­பா­டுகள் இதற்குச் சாத­க­மான நிலை­யினை உரு­வாக்­கி­யுள்­ளன.

திரு­மணச் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வர தனி­நபர் பிரே­ர­ணை­யொன்­றினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றினை ஏற்­பாடு செய்து தெரிவித்­துள்ளார்.

‘நாட்டில் அனை­வ­ருக்கும் ஒரு திரு­மணச் சட்­டமே இருக்­க­வேண்டும். முஸ்லிம் சமூகம் நிச்­ச­ய­மாக இதனை ஏற்­றுக்­கொள்ளும்’ எனவும் தெரி­வித்­துள்ளார். இந்த ஆலோ­ச­னையைப் பிரே­ர­ணை­யாக ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டமும் கைய­ளிக்­க­வுள்­ள­தாகக் கூறி­யுள்ளார்.

கடந்த 20 வரு­டங்­களில் 90 ஆயிரம் தமிழ், சிங்­க­ள­வர்கள் இஸ்லாம் மதத்­திற்கு மாற்­றப்­பட்டு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றம்­சு­மத்­தி­யுள்ளார். கலப்புத் திரு­ம­ணங்கள் பலாத்­கார மத­மாற்­றத்தின் கீழ் நடை­பெ­று­வ­தில்லை. கலப்புத் திரு­ம­ணங்கள் காதல் திரு­ம­ணங்க ளாகவே பெரும்­பாலும் அமை­கின்­றன. எனவே அங்கு பலாத்­கா­ரத்­திற்கு இட­மில்லை.

இவ்­வா­றான திரு­ம­ணங்கள் விவா­க­ரத்தில் முற்­றுப்­பெ­றும்­போது முஸ்லிம் தனியார் சட்­டத்தின் கீழ் பிள்­ளைகள் முஸ்லிம் சமூ­கத்தில் தடுத்து வைக்­கப்­ப­டு­கி­றார்கள் என அத்­து­ர­லியே ரதன தேரர் தவ­றான கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார். பல­தா­ர­மணம் செய்து கொள்­வ­தற்­கென்றே ஒரு சில பெரும்­பான்மை சகோ­த­ரர்கள் இஸ்லாம் மதத்­திற்கு மாறி முஸ்லிம் பெண்­களைத் திரு­மணம் செய்து கொள்­கின்­றனர். அவர்கள் சில காலத்தின் பின்பு விவா­க­ரத்து பெற்றுக் கொண்டு பிள்­ளை­களை பௌத்த மதத்­திலே வளர்க்­கி­றார்கள். இதனை அத்­து­ர­லியே ரதன தேரர் ஏன் வெளிப்­ப­டுத்­த­வில்லை என்­பது சந்­தே­கத்­திற்­கி­ட­மா­க­வுள்­ளது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரரின் கருத்­துகள் இன­வா­தத்தைப் பரப்­பு­வ­தா­கவே அமைந்­துள்­ளது. தனி­நபர் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­படும் போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதனை எதிர்ப்­ப­தற்கு இப்­போ­தி­லி­ருந்தே தயா­ராக வேண்டும். அதற்­கான புள்­ளி­வி­ப­ரங்­களைச் சேக­ரிக்க வேண்டும்.

அத்­தோடு சுமார் 10 வரு­ட­கால முயற்­சியின் பின்பு முஸ்லிம் தனியார் சட்டத் திருத்­தங்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இந்தச் சட்டத் திருத்­தங்­களை தாம­தி­யாது பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரித்துக் கொள்­ள­வேண்­டி­யது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பொறுப்­பாகும். இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­முக்கு கடி­த­மொன்­றி­னையும் அனுப்பி வைத்­துள்ளார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த பரிந்­து­ரைகள் அரச சட்­ட­வ­ரைஞர் திணைக்­க­ளத்­திற்கு நீதி­ய­மைச்­ச­ரினால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் பரிந்­து­ரை­களை சட்­ட­வ­ரை­பாக மாற்­று­வ­தற்கு நீண்­ட­காலம், சுமார் ஒரு வருட காலம் தேவைப்­படும் என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்­துள்ளார்.

சட்டத் திருத்­தங்­களை தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­திலே அங்­கீ­க­ரித்துக் கொள்­வ­தற்கு என்ன நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கலாம் எனவும் அவர் அறி­வுரை வழங்­கி­யுள்ளார். முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும், நீதி­ய­மைச்சும் இணைந்து உட­ன­டி­யாக திருத்­தங்­க­ளுக்­கான சட்­ட­வ­ரை­பொன்றை சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பிப்­பதே மாற்­று­வழி என்றும் அவர் கூறி­யுள்ளார். அவ்­வா­றெனில் சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து இரண்டிலொன்று பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றிக் கொள்­ளலாம் என்றும் தெரி­வித்­துள்ளார்.

எமது மூதா­தை­யர்­களால் எமக்­கென்று வடிவமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாத்துக்கொள்வது எமது கடமையாகும்.
இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்களை விரைவில் பாராளுமன்றத்தில் அங்கீகரித்து, காதிநீதிமன்ற கட்டமைப்பைத் தரமுயர்த்த ஆவன செய்வது எமது அரசியல் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிரான தவறான பிரசாரங்களை, தவறானது என நிரூபிப்பதும் அவர்களது கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.