சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகைப்படம் , காணொளி எடுக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க செல்பவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையூறு விளைக்காமல் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகவிளலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் அனைவருக்கும் நன்றி.
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையூறு விளைக்காமல் செயற்படுங்கள்.