கடந்­த­கால தோல்­வி­களை வெற்­றி­க­ளாக மாற்றி வருங்­கா­லத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவேன்

இற்­றைக்கு நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலை­வ­ராகத் தேர்ந்­தெ­டுத்த மக்கள், தன்­மீது கொண்ட எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட பல வேலைத்­திட்­டங்கள் வெற்­றி­ய­டைந்­துள்­ளதைப் போலவே சில வேலைத்­திட்­டங்கள் தோல்­வி­ய­டைந்த சந்­தர்ப்­பங்­களும் காணப்­ப­டு­கின்­றன. அத­னூ­டாகப் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­களை மேலும் உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்­பதை போன்றே தோல்­வி­களை வெற்­றியை நோக்கி வழி­ந­டத்த வருங்­கா­லத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி…

நாட்டில் 1299 மரண தண்டனை கைதிகள்

2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை உறு­தி­யாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட மற்றும் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு மேன்­மு­றை­யீடு செய்­துள்ள 1299 கைதிகள் நாட்டின் சிறைச்­சா­லை­களில் இருப்­ப­தாக நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சு கூறி­யுள்­ளது. அவர்­களில் 1215 ஆண் கைதி­களும் 84 பெண் கைதி­களும் இருக்­கின்­றார்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மொத்­த­மாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்டுள்ள 1299 கைதி­களுள் 789 ஆண் கைதி­களும் 34 பெண் கைதி­களும் தமது தண்­ட­னைக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்­துள்­ள­தாகத்…

இராணுவ அலுவலக பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்ர நியமனம்

இரா­ணுவத் தள­ப­திக்கு அடுத்­த­ப­டி­யாக உள்ள உயர் பத­வி­யான இரா­ணு­வத்தின் அலு­வ­லக பிர­தானி பத­விக்கு மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் பெரும் சர்ச்­சைக்­குள்­ளான மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.  இரா­ணு­வத்தின் அலு­வ­லக பிர­தா­னி­யாக செயற்­பட்ட  மேஜர் ஜெனரல் சம்பத் பெர்­னாண்டோ கடந்­தாண்டு டிசம்பர் 31 ஆம் திக­தி­யுடன் ஓய்­வு­பெற்ற நிலையில் இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்கவால் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட 10 மேஜர் ஜென­ரல்­களில் இருந்து அவர் இவ்­வாறு இரா­ணுவ அலு­வ­லக…

முஸ்லிம் அதிகார அலகு எனும் முஸ்லிம் பெரும்பான்மை

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் கிழக்கு வாழ் முஸ்­லிம்கள் 34 வீதத்­தி­லி­ருந்து 12 வீத­மாகக் குறைந்து விடு­வார்கள். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு பிர­தேச அதி­காரப் பர­வலே என்­பதால் முஸ்­லிம்­க­ளுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். எனவே தமி­ழரின் சுய நிர்­ண­யத்­துக்கும் இறை­மைக்கும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் புறம்­பாக அவர்­களைப் போல் முஸ்­லிம்­களும் தனித்­து­வ­மாக வாழ கிழக்கில் ஒரு மாகாணம் அமைக்­கப்­பட வேண்டும் என அஷ்ரப் கோரினார்.