ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு  அளித்தால் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்

ஞானசார தேரரை விடுதலை செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்தை அவமதிக்கக் கூடாது என தெரிவித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல், அவ்வாறெனில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போது, சுதந்திர தினத்தன்று அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென ஜனாதிபதி…

முஸ்லிம் மாணவர்களை மன்னித்து விடுவியுங்கள் அமைச்சர் சஜித்துக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்

அநுராதபுரம், ஹொரவப்பொத்தான கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் தொடர்பிலும் மனிதாபிமான அடிப்படையில்  மன்னிப்பு வழங்குமாறு கோரிகை விடுத்து வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா கடிதமொன்றை அனுப்பியுள்ளது. குறித்த புகைப்படம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதியளவில் எடுக்கப்பட்டது எனவும், குறித்த தொல்பொருள் பகுதியில் இதுவொரு தொல்பொருள் அல்லது…

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முன் பின்விளைவுகளை கருத்தில் கொள்ளக

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள், நீதியை எதிர்பார்த்துள்ளவர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். எனவே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னர் ஜனாதிபதி இவ்விடயங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமெனப்…

ஹஜ் யாத்திரை 2019: 4460 பேர் பயணத்தை உறுதிசெய்துள்ளனர்

இலங்கைக்கு இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரித்து வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு 4460 பேர் தங்கள் பயணத்தை உறுதி செய்துள்ளார்கள். மீளளிக்கப்படத்தக்க பதிவுக்கட்டணமான 25 ஆயிரம் ரூபா 4460 ஹஜ் விண்ணப்பதாரிகளினால் செலுத்தப்பட்டு பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;…