சூடானில் மீண்டும் அரபு வசந்தம் ஒன்றை ஏற்படுத்த சிலர் முயற்சி

தனது நாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 2011 ஆம் அண்டு இடம்பெற்றதைப் போன்ற அரபு வசந்தமொன்றை ஏற்படுத்த முனைவதாகவும் இனம்தெரியாத வெளிக்குழுக்கள் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு முனைவதாகவும் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்ரோவிற்கு விஜயம் செய்து எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் எல்-சிசியைச் சந்தித்த பஷீர் 'சூடானில் காணப்படும் அமைதியின்மை சூடானில் மற்றுமொரு அரபு வசந்தத்தை தோற்றுவிக்கும் முயற்சியாகும்' எனத் தெரிவித்தார். கடந்த மாதம் பாணின் விலை அதிகரிக்கப்பட்டதைத்…

தேர்தலை அறிவிக்கவிடின் பதவியிலிருந்து இராஜினாமா

ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் வரையில் மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர்வரை மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்குமாயின், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்வேன் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களில்…

பலஸ்தீன பிரஜையை கொன்றவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் பலஸ்தீன நபர் கொல்லப்பட்டமை அதிர்ச்சியளிப்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளதென என மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நிக்லோய் மிலண்டனோவ் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகளின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை நீதியின்முன் நிறுத்துமாறும் அவர் இஸ்ரேலிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். ரமல்லாஹ்வுக்கு வடகிழக்கே அமைந்துள்ள அல்-முக்ஹைர் கிராமத்தில் குடியேற்றவாசிகளும் இஸ்ரேலியப் படையினரும் இணைந்து நடத்திய…

ஞானசார தேரருக்கு விடுதலையளிக்குக

நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞானசாரதேரருக்கு…