மீண்டும் பேசுபொருளாகும் தேசிய அரசாங்க யோசனை

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான முயற்­சி­களை ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், இது தொடர்­பான யோசனை கடந்த வியாழக்கிழமை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­விருந்தது. எனினும் பல கட்சிகளின் எதிர்ப்புக் காரணமாக குறித்த தினம் பிரேரணை முன்வைக்கப்படவில்லை. இந் நிலையில் மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி இதே பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேசிய அர­சாங்கம் அமைக்கும் யோச­னையில் பிர­தான பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருப்­பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸாகும்.…

குப்பைகளை கொட்டும் திட்டம்: கறுப்புக்கொடியேற்றி புத்தளத்தில் எதிர்ப்பு

புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்­பை­களை கொட்டும் திட்­டத்­திற்கு எதி­ராக நேற்று புதன்­கி­ழமை புத்­த­ளத்தில் வாழும் மூவின மக்­களும் கறுப்புக் கொடி­களை பறக்­க­விட்டு தமது எதிர்ப்பை வெளி­யிட்­டனர். எதிர்­வரும் மார்ச் மாதம் முதல் புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்­பை­களை கொட்டும் திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருப்­பதால், அதனை எதிர்த்தே நேற்­றைய தினம் புத்­த­ளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன் அடிப்­ப­டையில், நேற்­றைய தினம் புத்­தளம், கரைத்­தீவு, கற்­பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள…

தெற்கு சிரியா எறிகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஒரு பின்னணியாக இருந்தது

தெற்கு சிரி­யாவில் இரவு வேளையில் எறி­கணைத் தாக்­கு­தல்­களை இஸ்ரேல் மேற்­கொண்­ட­தாக இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யாஹு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­தினார். பெப்­ர­வரி 13–-14 ஆம் திக­தி­களில் போலந்தின் வோர்­சோவில் நடை­பெறும் 'மத்­திய கிழக்கில் சமா­தானம்' என்ற தொனிப் பொரு­ளி­லான மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்கு புறப்­பட்டுச் செல்­வ­தற்கு முன்­ன­தாக டெல் அவிவில் அமைந்­துள்ள பென்­கு­ரியன் விமான நிலை­யத்தில் வைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசிய நெட்­டன்­யாஹு இக்­க­ருத்­தினை வெளி­யிட்டார். குறித்த…

180 ஐ.எஸ்.அங்கத்தவர்களை ஈராக் கைது செய்தது

ஈராக்கின் மேற்கு அன்பார் மாகா­ணத்தில் 180 ஐ.எஸ்.அங்­கத்­த­வர்­களை ஈராக் பாது­காப்புப் படை­யினர் கைது செய்­த­தாக கடந்த திங்­கட்­கி­ழமை அந்­நாட்டின்  உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது. தாம், எல்பு நெம்ர் பழங்­கு­டியைச் சேர்ந்த பொது­மக்கள் பல­ரையும், முஸ்­தபா எல்- அஸ்­ஸாரி என்ற இரா­ணுவ வீர­ரையும் பயங்­க­ர­வா­திகள் கொன்­ற­தா­கவும் பொது­மக்கள் மற்றும் இரா­ணு­வத்­தி­னரை இலக்கு வைத்து குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தா­கவும் பயங்­க­ர­வா­திகள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். அதனைத் தொடர்ந்து அனைத்து பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும்…