சஹ்ரான் உயிரிழந்தமை மரபணு மூலம் உறுதி

உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற  தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய தற்­கொ­லை­தா­ரிகள் அனை­வ­ரி­னதும் அடை­யா­ளங்கள் மர­பணு பரி­சோ­தனை மூலம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.  இது தொடர்­பி­லான முழு­மை­யான அறிக்கை நேற்று மாலை அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அளிக்­கப்­பட்­டது. இத­னூ­டாக பொலிஸ் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தி­களே இந்த தற்­கொலை தாக்­கு­தலை நடாத்­தி­யுள்­ளமை  உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர்…

முஸ்லிம் சமூகத்தை நோக்கி தலை தூக்கும் ஊடக பயங்கரவாதம்

எம்.சீ.ரஸ்மின் ஞாயிறு தாக்­குதல் பொது­மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் அதிர்ச்­சி­யூட்டும் சம்­ப­வ­மா­கவே அமைந்­தி­ருந்­தது. இதே­நி­லைதான் ஊட­கங்­க­ளுக்கும். இந்­நி­லையில் ஊட­கங்கள் பயங்­க­வாதத் தாக்­கு­த­லையும் அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் நேர்த்­தி­யாக அறிக்­கை­யி­டுதல் என்­பது இயல்பில் சிர­ம­மான விட­யமே. பொது­வான பார்­வையில், இலங்­கையில் ஊடகச் சுதந்­திரம் முழு­மை­யாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஊடகத் தொழில்­வாண்மை மற்றும் முகா­மைத்­துவம் என்­பன சிறி­ய­ளவே…

கருப்பு அத்தியாயத்தின் மற்றுமொரு பக்கம்

ஹெட்­டி­பொ­ல­வி­லி­ருந்து எம்.எப்.எம்.பஸீர் ஏப்ரல் 21 இலங்கைத் தேசத்தின் வர­லாற்றில் கறுப்பு அத்­தி­யாயம் ஒன்றைத் தொடக்­கி­வைத்­து­விட்டுச் சென்­று­விட்­டது. முஸ்லிம் பெயர் தாங்­கிய ஒரு தீவி­ர­வாதக் கும்பல் தொடங்கி வைத்த அந்த நாச­காரச் செயல், இன்று பிற இன தீவி­ர­வாதக் குழுக்­க­ளாலும் பின்­தொ­ட­ரப்­ப­டு­கி­றது. அதற்கு முஸ்லிம் மக்கள் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.நீர்­கொ­ழும்பு தேவா­லய தாக்­கு­த­லினால் ஆத்­தி­ர­ம­டைந்த ஒரு குழு­வினர் கடந்த மே 5 ஆம் திகதி பெரி­ய­முல்­லையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான…

தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வாகாது

இலங்கை முஸ்­லிம்கள் மிக மோச­மா­ன­தொரு கால­கட்­டத்தைச் சந்­தித்­துள்­ளனர். மரத்தால் விழுந்­த­வனை மாடேறி மிதித்­த­தற்­கொப்ப, ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளாலும் அதன் பின்­ன­ரான நிகழ்­வு­க­ளாலும் மன­மு­டைந்து நொந்­து­போ­யி­ருந்த முஸ்­லிம்­களை இவ்­வாரம் இடம்­பெற்ற பெரு­மெ­டுப்­பி­லான வன்­மு­றைகள் மென்­மேலும் மன அழுத்­தத்தில் தள்­ளி­யுள்­ளன. முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நீர்­கொ­ழும்பு, சிலாபம், குரு­நாகல் மாவட்டம் மற்றும் மினு­வாங்­கொடை ஆகிய பகு­தி­களில் கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றை­களில் ஓர் உயிர் பலி­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன்…