ஹலீமும் கபீரும் மீண்டும் பதவியேற்பு

அண்­மையில் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­து­கொண்ட 9 முஸ்லிம் அமைச்­சர்­களில் இருவர் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் மீண்டும் தங்­க­ளது முன்­னைய அமைச்­சுப்­ப­த­வி­களைப் பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர். நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­ச­ராகப் பதவி வகித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவிசாளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான கபீர் ஹாசீம் தனது முன்­னைய அமைச்­சுப்­ப­த­வியைப் பொறுப்­பேற்­றுக்­கொண்டார். மேலும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராகப்…

காத்தான்குடியில் ஒரேயொரு ஆயுதக்குழு சஹ்ரான் குழுவே

காத்­தான்­கு­டியில் முஸ்லிம் அமைப்­புகள் பல இருந்­தன. அதில் ஒன்றே தேசிய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் சஹ்ரான் குழுவே அங்­கி­ருந்த ஒரே­யொரு ஆயுதக் குழு­வாகக் காணப்­பட்­ட­தென காத்­தான்­கு­டியின் முன்னாள் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி  ஆரி­ய­பந்து வெத­கெ­தர பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரி­வித்தார்.  கடந்த காலங்­களில் முரண்­பா­டுகள் பல ஏற்­பட்­டன, அப்­போது ஆமி மொய்தீன் பெயர் அதி­க­மாக பேசப்­பட்­டது. அவர் சிப்லி பாரூக் என்ற மாகா­ண­சபை உறுப்­பி­ன­ருடன் இருந்தார். ஆனால்  ஆமி  மொய்தீன் பொலி­சா­ருடன் தொடர்பில் இருக்­க­வில்லை எனவும்…

முர்ஸியின் மரணம் குறித்து விசாரணை வேண்டும்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான முஹம்மத் முர்ஸியின் திடீர் மரணம் உலகளாவிய ரீதியில் பலத்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதி என வர்ணிக்கப்படும் முர்ஸி, இராணுவ சதிப் புரட்சியினால் பதவி கவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் விசாரணைகளின்போது நீதிமன்றினுள் வைத்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். சிறையிலிருந்த காலப்பகுதியில் அவர் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டிருந்தார்.…

தேடப்பட்ட காலத்தில் காத்தான்குடிக்கு ரில்வான் இரகசியமாக வந்துள்ளார் சஹ்ரான் வந்ததாக தகவலில்லை

சஹ்ரான், ரில்வான் மற்றும் ஆமி மொய்தீன் ஆகி­யோ­ருக்கு  எதி­ராகப் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு அவர்கள் தேடப்­பட்ட காலத்தில் ரில்வான் இர­க­சி­ய­மாக வந்து சென்­றுள்ளார், ஆனால் சஹ்ரான் வந்­தாரா என்ற தகவல் எவையும் கிடைக்­க­வில்­லை­யென  காத்­தான்­குடி பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எம்.பி கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார். சஹ்ரான் குழு­வுடன் தொடர்­பு­பட்­ட­தாகக் கைது­செய்­யப்­பட்ட  13 நபர்­களும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்பில் இருந்­த­வர்கள் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது எனவும் அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்…