ஜனாதிபதி குற்றவாளி

ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. நீதிமன்றம்  ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பொன்றினை வழங்கும்பட்சத்தில் அவர் குற்றவாளி என்பது சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுவிடும். ஆகவே  ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல, அவரது குடியுரிமையையே பறிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நிறைவேற்று அதிகார நாற்காலியில் மைத்திரி மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் நாட்டினை நாசமாக்குவார்கள் எனவும் அவர்…

தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்: ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

''சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, இவர்கள் கெளரவமாக பதவி விலகாவிட்டால் இதைவிட வீரியமான சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிடும்'' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நடத்திவரும் சத்தியாக்கிரக போராட்டம் நேற்று (03) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

ஆப்கானில் வான்வழித் தாக்குதல் தலிபான்களின் முக்கிய தளபதி பலி

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்  தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ஆப்கான் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை அன்று வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த வான்வழித் தாக்குதலில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்துல் மனன் என்ற தலிபான் தளபதி கொல்லப்பட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. அப்துலின் மரணத்தை தலிபான்களும்,…

ஹஜ் முறைப்பாட்டு விசாரணை அறிக்கை டிசம்பர் 20 இல் 

இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சிலர் ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பித்த முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்த ஹஜ் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்கு குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் 20 ஆம் திகதி அரச ஹஜ் குழு­விடம் கைய­ளிக்­க­வுள்­ளது. 11 ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக 13 ஹஜ் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற­றி­ருந்­த­தா­கவும் குறிப்­பிட்ட ஹஜ் முக­வர்கள் அழைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் முறைப்­பாட்டு விசா­ரணைக் குழுவின் செய­லாளர் ரபீக் இஸ்­மாயில் தெரி­வித்தார்.…