இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு
இஸ்ரேலிய எல்லை வேலிக்கு அருகில் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஹ்மெட் அபூ அபெட் என்ற சிறுவனே கடந்த செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல்கித்ரா தெரிவித்தார்.
கான் யூனிசின் கிழக்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காயத்திற்குள்ளான நான்கு வயதும் எட்டு மாதங்களும் உடைய அஹ்மெட் அபூ அபெட் உயிரிழந்ததாக தனது அறிக்கையில் அல்கித்ரா தெரிவித்திருந்தார்.…