மாலைதீவு முன்னாள் அதிபர் நஷீதுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்து
பயங்கரவாத வழக்கில் தொடர்புபடுத்தி மாலைதீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைத் தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
மாலைதீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத், பறிகொடுத்தார்.
அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது…