தேர்தல் பணிப்பாளர் நாயகமாக எம்.எம்.முஹம்மத் பதவி உயர்வு
2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை தேர்தல்கள் திணைக்களத்தில் மேலதிக தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றிய எம்.எம். முஹம்மத் தேர்தல் பணிப்பாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுள்ளார். அத்தனகல தொகுதியைச் சேர்ந்த கஹட்டோவிட்டவைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.முஹம்மத் தனது ஆரம்பக்கல்வியை கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பின்பு பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் உயர்கல்வியை மேற்கொண்ட அவர் அங்கு 7 வருடங்கள் கல்வி கற்று தேறியதன் பின்பு அக்காலசாலையிலே விரிவுரையாளராகப்…