பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து
சிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
"சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்" என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் இருவரும் மனம் விட்டுக் கலந்துபேசி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தார்மீகக் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.…