Author

vidivelli
- 4595 posts
ஹஜ் சட்டமூலம் விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படும்
ஹஜ் முகவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்படும் ஹஜ் ஏற்பாடுகளுக்கான சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும்.
அ-துவரையில் தற்போதுள்ள ஹஜ் நடை-முறைகளே முன்னெடுக்கப்படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஹஜ் முகவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு…
அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிப்பு
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இந்த மாதத்திலிருந்து 2500 ரூபாவுக்கும் 10 ஆயிரம் ரூபாவுக்கும் இடையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் அரச சேவையிலுள்ள ஆரம்ப தர ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2500 ரூபாவாலும் உயர் பதவியிலுள்ள ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு சம்பள …
ஹஜ் யாத்திரை – 2019 உப முகவர், தரகர்களிடம் பணத்தை கொடுக்காதீர்கள்
இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பவர்கள் தங்களது கடவுச் சீட்டுக்களையோ, பணத்தினையோ உபமுகவர்களிடம் அல்லது தரகர்களிடம் வழங்க வேண்டாமென அரச ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருடம் நியமனம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்களையே ஹஜ் கடமைக்காக தொடர்பு கொள்ளும்படியும் வேண்டியுள்ளது.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் ஊடகங்களுக்குக் கருத்துத்…