கண்டி- திகன சம்பவங்கள்: 210 மில்லியன் ரூபா நஷ்டஈடு சொத்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கண்டி– திகன பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்­க­ளினால் சேத­ம­டைந்த சொத்­து­க­ளுக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் இது­வரை 210 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்ளதாக இழப்­பீட்டுப் பணி­ய­கத்தின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதூர்தீன் தெரி­வித்தார்.

மஹர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை எப்படி வந்தது?

‘பள்­ளி­வா­ச­லுக்குள் எங்­களைத் தடை­செய்­வ­தற்கு நாங்கள் அடிப்­ப­டை­வா­தி­களோ, பயங்­க­ர­வா­தி­களோ அல்ல. எங்­க­ளது பள்­ளி­வாசல் மீண்டும் எங்­க­ளுக்கு திருப்­பித்­த­ரப்­பட வேண்டும். எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்­ளி­வா­சலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்­சாலை வளாக ஜும்ஆ பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.

பட்டதாரி நியமனங்களை உடனடியாக இடைநிறுத்துக

அர­சாங்­கத்­தினால் இவ்­வாரம் வழங்­கப்­பட்ட 42 ஆயிரம் பட்­ட­தாரி பயி­லுநர் நிய­ம­னங்­க­ளையும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­பட்டு ஒரு வார­காலம் செல்லும் வரை இடை­நி­றுத்­து­மாறு தேர்தல் ஆணைக்­குழு பொது­நிர்­வாகம், உள்­நாட்டு அலு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு மற்றும் மாவட்ட செய­லா­ளர்கள், அர­சாங்க அதி­பர்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் வேண்­டி­யுள்ளது.

மஹர பள்ளிவாசல் மூடப்பட்டதால் மையவாடியிலேயே ஜனாஸா தொழுகை

மஹர சிறைச்­சாலை வளா­கத்­தினுள் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்குத் தடை­செய்­யப்­பட்டு மஹர சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளதால் இப்­ப­கு­தியில் வாழும் சுமார் 290 குடும்­பங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் தங்­க­ளது சமயக் கட­மை­களை நிறை­வேற்­று­வதில் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.