கமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டையே சுமத்தினேன்

தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினார் அர்சலான் கவாஜா

0 442

ஏ.ஆர்.ஏ.பரீல்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ­சவுத் வேல்ஸ் பல்­க­லைக்­க­ழத்தின் இலங்­கையைச் சேர்ந்த மாணவர் ஒரு­வரை பயங்­க­ர­வா­தி­யென பொய் குற்றம் சுமத்தி அவரை ஒரு மாத காலம் தடுப்­புக்­கா­வலில் சிறை வாசம் அனு­ப­விக்கச் செய்­தவர் தான் ஒரு கோழை என்றும் தவறு செய்து விட்­ட­தா­கவும் நீதி­மன்றில் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அர்­சலான் தாரிக் கவாஜா என்­பவர், இலங்கை மாணவர் மொஹமட் கமர் நிசாம்தீன் பெண் ஒரு­வ­ருடன் பழகி வந்­ததால் அவ­ரது குறிப்புப் புத்­த­கத்தைக் கையாடி அவர் பயங்­க­ர­வாத குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என்று குறிப்புப் புத்­த­கத்தின் நிழற்­பட பிர­திகள் மூலம் முறைப்­பாடு செய்தார். அவ­ரது இந்த முறைப்­பாடு 2018 ஆகஸ்டில் முன்­வைக்­கப்­பட்­டது.

அர்­சலான் கவாஜா (40), அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவா­ஜாவின் சகோ­த­ர­ராவார். அவர் மாவட்ட நீதி­மன்றில் விம்­மி­ய­ழுதார். தன்­னம்­பிக்­கை­யற்­றதும், உள­நலப் பிரச்­சி­னை­க­ளி­னா­லுமே இந்தத் திடீர் செய­லுக்கு தான் தள்­ளப்­பட்­ட­தாக அவர் நீதி­மன்றில் கூறினார்.‘நான் சுற்­றி­வ­ளைக்­காமல் நேர­டி­யாகக் கூறு­கிறேன். நான் துணி­வில்­லாத கோழை என்றார். கட்­டா­ய­மாக இத்­த­வறை ஏற்க நான் முன் வர­வேண்டும் என்றும் கூறினார்.

தாரிக் கவா­ஜாவின் சகோ­த­ர­ரான கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா வீடியோ தொடர்பு ஊடாக பிரிஸ்­ப­னி­லி­ருந்து நீதி­மன்­றுக்கு வாக்கு மூல­ம­ளித்தார். இந்தப் பொய்­யான முறைப்­பாட்­டினை செய்­வ­தற்கு முன்பு எனது சகோரர் ஒரு நேர்­மை­யான சிறந்த பிர­ஜை­யா­கவே இருந்தார்.

எனது இளைய சகோ­த­ர­ரான அவர் பிர­பல்­ய­மா­னவர். அவர் அவுஸ்­தி­ரே­லிய அணி­யுடன் நெருங்­கிய தொடர்பில் இருந்தார். அவுஸ்­தி­ரே­லிய அணி­யினர் எப்­போதும் அவர் பற்றி என்­னிடம் விசா­ரிப்­பார்கள் என்று வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார்.

கமர் நிசாம்தீன் ஒரு மாத­காலம் கோல்பர்ன் சுப்பர் மெக்சில் தடுப்புக் காவலில் இருந்தார். அவ­ருக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. அவ­ரது குறிப்புப் புத்­த­கத்தில் இருந்த கையெ­ழுத்து அவ­ரு­டை­ய­தல்ல என நிபு­ணர்­களால் உறுதி செய்­யப்­படும் வரை அவர் அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

2018 ஆம் ஆண்டு கவாஜா முன்­வைத்த பொய் குற்­றச்­சாட்­டுகள் முதன் முறை­யா­ன­தல்ல. இதே போன்ற தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டு­களை முன்பும் ஒருவர் மீது முன்­வைத்­தி­ருத்தார். அக்­குற்றச் சாட்டும் பெண்­ணொ­ருவர் மீது கொண்ட பொறாமை கார­ண­மா­கவே மீது முன்­வைக்­கப்­பட்­ட­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஒரு­வ­ரு­டத்­துக்கு முன்பு பெண்­ணொ­ரு­வ­ருடன் ஒருவர் கொண்­டி­ருந்த நட்பை தடுப்­ப­தற்­காக அவர் மீதும் இவர் பொய் குற்­றச்­சாட்­டு­களை முன் வைத்­தி­ருந்தார். ஏனென்றால் தாரிக் கவாஜா அப்­பெண்­ணுடன் மிக நெருங்­கிய தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்தார். அவர் குற்றம் சுமத்­திய நப­ரது விப­ரங்கள் சட்டப் பிரச்­சினை கார­ண­மாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இரண்­டா­வது பெண் கமர் நிசாம்­தீ­னுடன் பழ­கி­யதால்  அதனைத் தடுக்கும் நோக்­கி­லேயே  இவ்­வா­றான பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டு­களை நிசாம்தீன் மீது சுமத்­தி­யுள்ளார். அந்தத் தொடர்பு தடுக்­கப்­பட்­டதால் அப்பெண் தனது கவ­லையைத் தெரி­வித்து கவா­ஜா­வுக்கு குறுஞ்­செய்­தி­களை அனுப்பி வைத்­துள்ளார்.

தாரிக் கவாஜா தனது கண்­ணீரைத் துடைத்துக் கொண்டார். அவர் இச்­சம்­ப­வத்தால் அடைந்த துன்­பங்­க­ளையும், வலி­க­ளையும் கூறினார்.

‘கமர் நிசாம்தீன் உயர்­வான சிறந்த நபர்’ என்றும் தெரி­வித்தார்.

‘நீங்கள் எவரும் என்னை ஒரு­போதும் மன்­னிக்­க­மாட்­டீர்கள் என்று நம்­பு­கிறேன். நான் இழைத்த தவ­றுகள் குறிப்­பாக கம­ருக்கு இழைத்த தவ­று­க­ளுக்­காக நான் வருந்­து­கிறேன்’ என்றார்.

கமர் நிசாம்தீன் தடுப்­புக்­கா­கவில் சிறை­யி­லி­ருந்தும் விடு­தலை பெற்று இலங்கை திரும்­பி­யுள்ளார்.  இந்த விவ­காரம் தொடர்பில் அவர் நியூ­சவுத் வேல்ஸ் பொலி­ஸாரிடம் நஷ்­ட­யீடு கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

 

 

Leave A Reply

Your email address will not be published.